கோடி கோடியா அவரு பணத்தை கொட்டினது வேஸ்டா! டுவிட்டருல வச்சு உலக புகழ்பெற்ற பிராண்ட கலாய்ச்சிட்டாரு!
கவுதம் சிங்கானிய இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. பிரபல ரேமண்ட் குழுமத்தின் சிஇஓ இவர் ஆவார். மேலும், மிகப் பெரிய வாகன ஆர்வலராகவும் இவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இப்படி சொல்வதற்கு பதிலாக இவரை மிகப் பெரிய வாகன வெறியர் என்றும்கூட கூறலாம்.
இல்லை எனில், தீவிர வாகன காதலர் என்றும் கூறலாம். அந்த அளவிற்கு வாகனங்களை அதிகம் நேசிக்கக் கூடிய ஓர் நபரே கவுதம் சிங்கானியா ஆவார். இதற்கு சான்றாக ஏகப்பட்ட அரிய வகை கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. கவுதம் சிங்கானியா வாகனத்தை வாங்கும் விஷயத்தில் பணத்தை பெரிதாக பொருட்படுத்தமாட்டார் என கூறப்படுகின்றது.

அவருக்கு பிடித்துவிட்டால் எவ்வளவு விலை இருந்தாலும் அதை அவர் வாங்கி விடுவாராம். இத்தகைய மிகப் பெரிய கார் காதலரே உலக புகழ்பெற்ற கார் நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பை மிக மோசமானது என குறிப்பிட்டிருக்கின்றார். கவுதம் சிங்கானியா இடத்தில் இருந்தும் அரிய வகை கார் மாடல்களில் மஸராட்டி எம்சி 20-ம் ஒன்றாகும்.
அவர் ஆசை ஆசையாக வாங்கிய கார் மாடல்களில் இதுவும் என்று என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 4 கோடிக்கும் அதிகமான தொகையைக் கொடுத்து அந்த காரை அவர் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய விலைக் கொடுத்து வாங்கிய காரையே அவர் மிகவும் ஒர்ஸ்டானது தனது கூறி இருக்கின்றார்.

குறிப்பாக தான் பயன்படுத்தியதிலேயே மிகவும் மோசமான ஓர் கார் என்றால் அது மஸராட்டி எம்சி 20தான் என்கிற வார்த்தைகளை எல்லாம் அவர் பயன்படுத்தி இருப்பது, அவர் அந்த காரின்மீது கொண்டிருக்கும் வெறுப்பின் உச்சத்தைக் காண்பிக்கும் வகையில் இருக்கின்றது. இந்த வெறுப்புணர்வை பகிரங்கமாக தன்னுடைய டுவிட்டர் பதிவின் வாயிலாகவே அவர் குறிப்பிட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது மஸராட்டி சூப்பர் கார் பிரியர்கள் மத்தியில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏன் அந்த காரை மிகவும் மோசமானது என அவர் குறிப்பிட்டிருக்கின்றார் என்கிற விபரங்கள் வெளியிடவில்லை. இருப்பினும், அவருடைய இந்த பதிவில் தற்போது வாகன உலகில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.
பில்லியனரான கவுதம் சிங்கானியா இடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரை இந்த அளவு பகிரங்கமாக பொதுவெளியில் எந்த காரையும் வருத்தெடுத்தது இல்லை. ஆனால், இம்முறை அவர் மஸராட்டி எம்சி20 காரை மிகவும் மோசமாக வறுத்தெடுத்துள்ளார். குறிப்பாக, இந்த காரை வாங்க போறீங்கனா, ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்குமாறும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
கவுதம் சிங்கானியா நடப்பாண்டின் தொடக்கத்திலேயே இந்த காரை வாங்கினார். இந்த காரில் அவர் பலமுறை வலம் வந்ததை மும்பை வாசிகள் பார்த்திருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே அவர் அக்காரை இகழ்ந்திருக்கின்றார். இதற்கு ஏதாவது மிக முக்கியமான சிக்கலே காரணமாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது.
அதேவேளையில், மஸராட்டி எம்சி20 காரில் சிக்கலைச் சந்திப்பதில் கவுதன் சிங்கானியா மட்டுமே முதல் நபர் அல்ல. பிபிசி-யைச் சேர்ந்த ஜெரேமி கிளார்க்சன்னும் அவருடை எம்சி20 காரில் கடந்த காலங்களில் சிக்கலைச் சந்தித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. உலகின் பவர்ஃபுல்லான கார் மாடல்களில் மஸராட்டி எம்சி20-ம் ஒன்றாகும்.
இதில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் நெட்டுனோ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அசால்டாக 630 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமில்லைங்க சொகுசு வசதிகளையும் மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு வரவேற்பு முன்பைக் காட்டிலும் தற்போது இரு மடங்காகி இருக்கின்றது. நாட்டில் சொகுசான பயணத்தை விரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணமாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மஸராட்டி எம்சி20 காரை வாங்கும் எண்ணம் இருந்தால் பலமுறை யோசித்து பார்த்து வாங்குங்கள் என கவுதம் சிங்கானியா கூறி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications