விபத்துல சிக்கி சின்னா-பின்னமான காருக்கு ராக்கி கட்டிய குட்டி தேவதை! ஒரு நிமிஷம் எல்லாரும் கண் கலங்கிட்டாங்க!

இந்தியாவில் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நிலையிலேயே கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஓர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) கார் மீது, அந்த காரைவிட பலமடங்கு அதிக எடைக் கொண்ட கன்டெய்னர் ஒன்று முழுவதுமாக சாய்ந்து நசுக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு மிகவும் தரமான மற்றும் உறுதியான காராகவே மஹிந்திரா இந்த எக்ஸ்யூவி 700 காரை வடிவமைத்து இருக்கின்றது. இதனாலேயே இத்தனை பெரிய உருவம் கொண்ட கன்டெய்னர் தன் மீது சாய்ந்த போதிலும் தன்னுள் பயணித்த பயணிகளை அது காப்பாற்றி இருக்கின்றது.

Rakhi to mahindra xuv700

மிக மிக சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில் அந்த காரில் பயணித்தவர் தப்பி இருக்கின்றார். அவராகவே எழுந்து நடக்கும் அளவிற்கும் அவர் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த நிலையிலேயே, விபத்தில் சிக்கிய அந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு சிறுமி ஒருவர் ராக்கி கட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஓர் பெண் தன்னுடைய சகோதரனாக பாவிக்கும் ஆணுக்கு கட்டக் கூடிய ஒன்றே ராக்கி ஆகும். இதையே மோசமான விபத்தைச் சந்தித்து இருக்கும் காருக்கு குட்டி தேவதை (சிறுமி) கட்டி இருக்கின்றார். மிக மோசமான விபத்தில் இருந்து தன் குடும்பத்தினரை இந்த கார் காப்பாற்றியதை அடுத்தே இவ்வாறு அச்சிறுமி செய்திருக்கின்றார்.

Girl ties rakhi to mahindra xuv700

அதாவது, தன்னுடைய சகோதரனாக பாவித்து காருக்கு ராக்கி கட்டி இருக்கின்றார். இந்த நிகழ்வே தற்போது இணையத்தையே கலங்கச் செய்யும் வகையிில் அமைந்திருக்கின்றது. சொல்லப் போனால் இந்த கார் தன்னுடைய பயணிகளைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரையே தியாகம் செய்திருக்கின்றது என்று கூறலாம். அப்படியான சம்பவமாகவே இந்த எக்ஸ்யூவி 700 விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான கார் மாடல்களில் எக்ஸ்யூவி700-ம் ஒன்றாகும். இதனை கிராஸ் டெஸ்ட் செய்த குளோபல் என்சிஏபி சேஃபர் சாய்ஸ் எனும் பட்டத்தையே அந்த காருக்கு வழங்கி இருக்கின்றது. அந்த அளவிற்கு மிக அதிக மதிப்பெண்ணையே இந்த கார் மோதல் ஆய்வின்போது பெற்றது.

இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். இத்தகைய திறன் கொண்ட காரே தான் என்பதையே சமீபத்திய மோதல் சம்பவத்தின்போது வாயிலாக அக்கார் மீண்டும் நமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த விபத்து சம்பவத்தில் சிக்கிய பின்னரும் அந்த கார் இயங்கும் நிலையில் இருந்து மேலும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கின்றது.

இதை வெளிக்காட்டும் வீடியோவும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திராவின் இத்தகைய சூப்பரான பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மைக் கொண்ட இந்த கார் ரூ. 14 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் எச்சரிக்கை, தானியங்கி அவசரகால பிரேக்கிங் போன்ற பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இந்த காரில் பிரீமியம், நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவையும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் பலர் தங்களுடைய வாகனங்களை தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கின்றனர். அந்தவகையில், காரை வாங்கிய நாளை அதன் பிறந்த நாளாகவும் கொண்டாடியவர்களும் நம்ம ஊரில் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே சிறுமி தன்னுடைய தந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காக ஓர் காரை சகோதரனாக ஏற்றிருக்கின்றார்.

Article Published On: Saturday, September 16, 2023, 10:47 [IST]
English summary
Girl ties rakhi to crushed mahindra xuv700
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+