125ம் ஆண்டு கொண்டாட்டத்தில் குட்இயர்! ஒன்னல்ல, ரெண்டல்ல 4புதிய டயர்கள் அறிமுகம்.. எல்லாமே வேற லெவல்ல இருக்கு!

முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான குட்இயர் (GOODYEAR) நான்கு புத்தம் புதிய டயர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கின்றது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான திறன் கொண்டவை ஆகும். நிறுவனத்தின் 125ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த டயர்கள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றன.

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாகவே அனைத்து புதிய டயர்களையும் இந்த உலகிற்கு குட் இயர் அறிமுகப்படுத்தி வைத்தது. ஈகிள் எஃப் அசைமெட்ரிக் 6 (Eagle F1 Asymmetric 6), விராங்க்ளர் ட்யூரா டிராக் ஆர்டி (Wrangler Duratrac RT), எலெக்ட்ரிக் டிரைவ் (ElectricDrive) மற்றும் அசூரன்ஸ் மேக்ஸ்குவார்ட் (Assurance MaxGuard) ஆகிய டயர் மாடல்களை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Goodyear launches four new tyres

ஈகிள் எஃப் அசைமெட்ரிக் 6 (Eagle F1 Asymmetric 6): ரேஸ் வாகனங்களை போல த்ரில்லான ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும். இந்த அனுபவத்தை இந்த டயரின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் என்கின்றது குட்இயர். ரேஸ் வாகனங்களுக்கு இணையான திறன் வெளிப்பாட்டிற்கு இந்த டயர் உதவும் என்பதனாலேயே நிறுவனம் இந்த டயருக்கு ஈகிள் எஃப்1 அசைமெட்ரிக் 6 எனும் பெயரை வைத்திருக்கின்றது.

ஈரம் மற்றும் காய்ந்த சாலை என எதுவாக இருந்தாலும் சமாளிக்கும் திறன் கொண்டதே இந்த ஈகிள் எஃப்1 அசைமெட்ரிக் 6 மாடல் டயர் ஆகும். இத்துடன், வெட் பிரேக்கிங் ப்ரோ எனம் டெக்னாலஜியையும் இந்த டயரில் குட்இயர் வழங்கி இருக்கின்றது. இந்த தொழில்நுட்பம் ஆக்குவாபிளானிங்கை எதிர்க்கும் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Goodyear new tyres

இதற்காக ஆறு விதமான ரோலிங் ரெசிஸ்டன்ஸ் அம்சம் இந்த டயரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே ஈரமான சாலைகளில் ஏற்படும் வழவழப்பு தன்மை எதிர்த்து நின்று மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்குகின்றது. இதேபோல், இரைச்சலை எதிர்க்கும் திறனையும் இந்த டயர் கொண்டிருக்கின்றது. இதனால், வாகனங்களில் பயணிக்கும்போது அமைதியான பயண அனுபவத்த நம்மால் தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும்.

விராங்க்ளர் ட்யூரா டிராக் ஆர்டி (Wrangler Duratrac RT): சாகச பயணங்களுக்கு உகந்த டயரே இதுவாகும். நீங்கள் அட்வென்சர் வகை வாகனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் இந்த வகை டயரே உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். கரடு-முரடான பாதைகளில்கூட மிக சிறந்த இயக்க அனுபவத்தை இது வழங்கும்.

Goodyear tyres

இந்த டயரில் ட்ரி-ஷீல்டு (Tri-Shield) எனும் டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்கின்றது. இந்த டெக்னாலஜியே டயருக்கு அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறனை வழங்குகின்றது. மேலும், இந்த டெக்னாலஜி வாயிலாக டயரின் பக்கவாட்டு சுவர் பகுதியை அது அதிகம் வலுப்படுத்தி இருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் 3 விதமான கட்டுமானத்தை பயனப்டுத்தியே இந்த டயரின் பக்கவாட்டு சுவரை அது தயார் செய்திருக்கின்றது.

இந்த சுவர்களே வெட்டுக்கள் மற்றும் ஊடுருவல்களை எதிர்க்கும் திறன் கொண்ட டயராக விராங்க்ளர் ட்யூரா டிராக் ஆர்டி-யை மாற்றி இருக்கின்றது. இதுதவிர, சேறு, பனிக்கட்டி மற்றும் பாறை கற்கள் நிறைந்த சாலைகளையும் சமாளிக்கும் திறனையும் இந்த டயருக்கு குட் இயர் கொடுத்திருக்கின்றது.

எனவே எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் அதிக பிடிமானத்தை இந்த டயர் வாயிலாக பெற முடியும் என்பது தெரிகின்றது. இத்துடன், ட்யூராஎட்ஜ் எனும் டெக்னாலஜியையும் இந்த டயரில் குட்இயர் சேர்த்திருக்கின்றது. இது டயரின் ஷோல்டர் பகுதியை மிகவும் முரட்டுத்தனமானதாக மாற்றி இருக்கின்றது.

எலெக்ட்ரிக் டிரைவ் (ElectricDrive): உலக அளவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதீத வேகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே நிறுவனத்தின் முதல் மின்சார வாகனங்களுக்கான டயராக எலெக்ட்ரிக் டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த டயர் மிக சிறந்த கிரிப்பை வழங்கும். இதுதவிர, எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் திறனை அதிகரிக்கச் செய்யவும் இந்த தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும்.

மின்சார கார்கள் ரேஞ்ஜ் திறனை அதிகமாக வழங்குவதில் டயரின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை உணர்ந்தே கூடுதல் டெக்னாலஜி வசதி உடன் இந்த எலெக்ட்ரிக் டிரைவ் டயரை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. அதேவேளையில் உயர் செயல் திறனை வழங்கவும் இந்த டயர் உதவியாக இருக்கும்.

அசூரன்ஸ் மேக்ஸ்குவார்ட் (Assurance MaxGuard): குட்இயர் அசூரன்ஸ் வரிசையின் புதிய வரவு இதுவாகும். இது ஓர் 2இன்1 பயன்பாட்டு வசதியைக் கொண்ட டயரும் கூட. இந்த டயரை தன்னுடைய 360 கான்செப்ட் டயர் மாடலை தழுவியே குட்இயர் உருவாக்கி இருக்கின்றது. மிகுந்த ஆக்டீவான க்ரிப் மற்றும் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் திறனைக் கொண்டதாகவும் இந்த டயரை குட் இயர் உருவாக்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தன்னுடைய 125 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டே இந்த அமெரிக்க டயர் உற்பத்தி நிறுவனம் தற்போது நான்கு புதிய டயர்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை ரைடர்கள் பெற வேண்டும் என்கிற நோக்கில் பன்முக வசதிகளுடன் இந்த நான்கு டயர்களையும் குட்-இயர் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 12, 2023, 10:22 [IST]
English summary
Goodyear launches four new tyres here is more details about new tyres
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X