தமிழராக ஜொலிக்கும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் இத்தனை சொகுசு கார்கள் இருக்கா... ஒவ்வொன்னும் வேற லெவல்!!
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை (Sunder Pichai)-ஐ பற்றி அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். கூகுள் சிஇஓ -ஆக ஓர் தமிழர் என்பதாலேயே குறிப்பாக நமது தமிழ் மக்களுக்கு மிகவும் பரீட்சையமானவராக விளங்கும் சுந்தர் பிச்சையிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
பிஎம்டபிள்யூ 730எல்டி (BMW 730LD)
கூகுள் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ-விடம் உள்ள சொகுசு கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 730எல்டி ஆகும். அமெரிக்க டாலர்களில் இதன் மதிப்பு 83,650 டாலர்களாக உள்ளது. இந்திய ரூபாயில் கணக்கிட்டால் ரூ.1.35 கோடி. இந்த பிஎம்டபிள்யூ காரில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர், 24-வால்வு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக ஏறக்குறைய 600 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய பிஎம்டபிள்யூ 730எல்டி காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும். இந்த காரில் செமி-ஆட்டோமேட்டிக் மற்றும் ஸ்போர்ட்ஸ்-மோட் தேர்வுகளும் உள்ளன. தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், ஆட்டோமேட்டிக் 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 360-கோண கேமிரா, பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள், க்ரூஸ் கண்ட்ரோல், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை இந்த பிஎம்டபிள்யூ காரில் இடம்பெறுகின்றன.
மெர்சிடிஸ்-பென்ஸ் வி-கிளாஸ் (Mercedes-Benz V-Class)
அளவில் பெரியதாக, பிஎம்டபிள்யூவின் கார்-வேன் ஆக வி-கிளாஸ் விளங்குகிறது. இந்த வாகனத்தில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 160 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே இயக்க ஆற்றலை பெற முடியும். மற்ற மெர்சிடிஸ் கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த இயக்க ஆற்றல் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

0-இல் இருந்து 100kmph வேகத்தை வி-கிளாஸில் 9.1 வினாடிகளில் எட்டிவிடலாம். நகரும் அரண்மனை போல் காட்சித்தரும் இந்த வாகனத்தின் டாப்-ஸ்பீடு 195kmph ஆகும். அமெரிக்காவில் இந்த வாகனத்தின் விலை வெறும் 84,260 டாலர்கள் (ரூ.73 லட்சம்) மட்டுமே. இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்னர் தான் இந்த வாகனத்தின் புதிய எலைட் வேரியண்ட் ரூ.1.1 கோடி என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிச்சயமாக இதே விலையில் இப்போதும் வி-கிளாஸ் எலைட் கார் விற்பனை செய்யப்படாது.
டொயோட்டா ஹை ஏஸ் (Toyota HiAce)
சுந்தர் பிச்சைக்கு அதிக பயணிகளுடன் செல்லக்கூடிய, அளவில்-பெரிய வாகனங்கள் என்றால் தனி பிரியம் போல. ஏனெனில் வி-கிளாஸ் போன்றதான தோற்றம் கொண்ட டொயோட்டா ஹை ஏஸ் வாகனத்தையும் இவர் கொண்டுள்ளார். சுந்தர் பிச்சையிடம் இருப்பது 5ஆம் தலைமுறை ஹை ஏஸ் வாகனம். இது முதல்முறையாக 2004இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்த வாகனம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹை ஏஸ் வேனில் 2.8 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-டீசல் என்ஜினை டொயோட்டா நிறுவனம் பொருத்துகிறது. இந்த வாகனம் குறுகிய ஜப்பானிய தெருக்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதாலும், அமெரிக்க பாதுகாப்பு தர நிலைக்கு ஏற்ப இல்லாததாலும் விரைவாகவே அமெரிக்க சந்தையில் டொயோட்டா ஹை ஏஸ் நிறுத்தி கொள்ளப்பட்டுவிட்டது. இருப்பினும், அந்த குறுகிய காலத்திலேயே இந்த வாகனத்தை சுந்தர் பிச்சை வாங்கனாரா அல்லது வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றாரா என்பது தெரியவில்லை.
மெர்சிடிஸ் எஸ்650 (Mercedes S650)
சுந்தர் பிச்சையிடம் உள்ள மெர்சிடிஸ் எஸ்650 காரில் 6.0 லிட்டர் வி12 பை-டர்போ 12-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 630 பிஎச்பி மற்றும் 1000 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெறும் 2300- 4200 ஆர்பிஎம்-இல் வழங்கும் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த சொகுசு பென்ஸ் காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கூகுள் சிஇஓ-ஆக இருக்கும் ஒரு நபரிடம் இந்த அளவிற்கு சொகுசு கார்கள் இல்லையென்றால் தான் ஆச்சிரியம். இன்னும் சொல்லப்போனால், சுந்தர் பிச்சையிடம் உள்ள சொகுசு கார்களின் விலைகள் அவர் வகிக்கும் பதவியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானவையே. ஏனெனில் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ கார்களை காட்டிலும் விலைமிக்க கார்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications









