சும்மா தீயா இருக்குது பாஸ்! ஆண்டாராய்டு ஆட்டோவை அப்டேட் செய்த கூகுள்!
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே கிடையாது. குறிப்பாக ஆண்ட்ராய்டு போன்களை தான் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். சிலர் ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயன்படுத்துபவர்கள் தங்கள் வாகனங்களில் பயணிக்கும் போது அந்த செல்போனை காருடன் இணைக்க ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இது செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய பலனை வழங்குகிறது. காரில் பயணிக்கும் போது வரும் கால்களை பேசவும், ஆன்லைன் மூலம் பாட்டுக் கேட்கவும், மேப் மூலம் செல்லும் இடங்களுக்கு நேவிகேஷன்கள பெறுவது என இது என்னற்ற பலன்களை வழங்குகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் தனது அப்டேட் செய்யப்பட்ட புதிய ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சத்தை காட்சிப்படுத்தினர்.

இவர்கள் 2022 I/O நிகழ்ச்சியிலும் இதே அப்டேட்டை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் முதல் இது சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு நாடாக அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இது இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இப்படியாகப் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆட்டோவில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? காணலாம் வாருங்கள்.
கூகுள் நிறுவனம் இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு ஆட்டோ பயனாளர்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்கும் அனுபவத்தை வழங்க முடிவு செய்துள்ளது. பழைய ஆண்ட்ராய்டு ஆட்டோவிலிருந்து அப்டேட் செய்யப்பட்டதில் இதன் தோற்றம் கார்டை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீல் எப்பொழுதும் 3 கார்டுகள் இருக்கும். அதில் பெரிய கார்டு நேவிகேஷனிற்காக பயன்படுத்த முடியும். இது ஸ்கிரினை 60 சதவீதம் வரை ஆக்கிரமித்துக்கொள்ளும்
மற்ற 2 கார்டுகளை செல்லும் இடம் குறித்த தகவல்கள் மற்றும் மியூசிக் ஆகிய அம்சங்களை பெறுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். மீதம் உள்ள40 சதவீத ஸ்கிரீனை ஒவ்வொரு கார்டும் 20 சதவீதமாக பிரித்துக்கொள்ளும்படி இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. கூகுளின் இந்த கார்டு வடிவ டிசைன் பலரைக் கவர்ந்துள்ளது. இதில் மீடியா கார்டில் முழு ஆல்பத்தையும் ஆண்டில் செய்யலாம்.
மெனு பட்டன் மாற்றம்
இந்த புதிய ஆண்ட்ராய்டு ஆட்டோவில் மெனு பட்டன்கள் டிரைவர் பக்கம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் செட்டிங்ஸ், போன், மேப்ஸ், மற்றும் யூடிப் மியூசிக் ஆகியவற்றிற்கு ஷாட்கட் பட்டன்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக க்விக் லாஞ்சரில் சமீபத்தில் பயன்படுத்திய ஆப்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தனியாக பிரத்தியகமாக வழங்கப்பட்டுள்ளது. முன்னர் நேரம் மற்றும் போன் பேட்டரி சார்ஜ் லெவலை காட்டும் இடத்திலிருந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது. மைக் ஐக்கான் இருந்த இடமும் மாற்றப்பட்டு எளிதாகப் பயன்படுத்தும் இடத்தில் இருக்கிறது.
அடாப்பிள் டிஸ்டிளே
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆட்டோ வின் யூஸர் இன்டர்பேஸ் சுலபமாக அடாப்ட் செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் யூஐ வேறு வேறு ஸ்கிரீன் வடிவத்திற்கும் ஏற்றார் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே இருந்தாலும் சரி, சிறிய டிஸ்பிளே இருந்தாலும் சரி இந்த யூசர் இன்டர்பேஸ் அதற்கு ஏற்றார் போல மாறிக்கொள்ளும் என கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் அசிஸ்ட்
புதிய இண்டர்பேஸையும் தாண்டி கூகுள் அசிஸ்ட் விர்சுவல் ஸ்மார்ட் அசிஸ்டென்ட் ஃபங்சனாலிட்டி என்ற புதிய அம்சமும் இந்த காரில் இருக்கிறது. இது ஸ்மார்ட் பரிந்துரைகளாக மிஸ்டு கால் அலர்ட், மியூசிக்/பாட்காஸ்டிற்கு இன்ஸ்டன்ட் ஆக்சஸ் ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட் பரிந்துரை இந்த அப்டேட்டில் பயனுள்ள ஒரு விஷயமாக இருக்கிறது.
சீக்கபிள் புரோகிரஸ் பார்
புதிதாக அப்டேட்ட செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் நீங்கள் காரில் ஒரு பாடலையோ அல்லது பாட்காஸ்டையே ஒலிக்க விடுகிறீர்கள் என்றால் திரையில் ஒரு சீக்கபிள் புரோகிரஸ் பார் வந்துவிடும் அதை அட்ஜெஸ்ட் செய்து தேவையில்லை இடத்தை ஸ்கிப் செய்வது பாடலை ஓட்டி விடுவது உள்ளிட்டவைற்றை செய்து கொள்ளலாம். பழைய அப்டேட்டில் இந்த ஆப்ஷன் கிடையாது.
வாட்ஸ் அப் கால்
அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆட்டோவில் வாட்ஸ்அப் கால் அம்சங்கள் இருக்கிறது. பயனர் இதன் மூலம் வாட்ஸ் அப் கால்களை செய்யவும், வரும் வாட்ஸ் அப் கால்களை ரிசீவ் செய்யவும் முடியும். வாட்ஸ் மெசேஜ்களையும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஸ்கிரீனிலேயே பார்த்துக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








