டீசல் கார்களின் விற்பனைக்கு முழு தடை!.. இந்த ஆண்டுக்கு பின்னாடி ஒரு டீசல் காரைகூட வாங்க முடியாது போலையே!

இந்தியாவில் இப்போதும் டீசல் கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறைவான விலையில் பெட்ரோல் கார்கள் சில விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன, இருந்தபோதிலும் இந்தியர்கள் மத்தியில் டீசல் கார்களின் மீதான மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. ஏன் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்கள் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்து வருகின்றன.

இருப்பினும் இப்போதும் இந்தியர்கள் பலர் டீசல் கார்களை விரும்பி வாங்கிக் கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, டீசல் எஞ்ஜின் பொலிரோ கார்கள் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 25,910 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த அளவிற்கு அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் டீசல் கார்களின் விற்பனைக்கே முற்று புள்ளி வைக்க இந்தியா திட்டமிட்டு இருக்கின்றது.

Diesel car ban

அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்கும் பொருட்டு நாட்டில் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையிலேயே டீசல் வாகனங்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், அரசு 2027 ஆம் ஆண்டு முதல் டீசல் வாகன விற்பனைக்கு முழுமையான தடையை விதிக்க இருப்பதாக தெரிவிக்கின்றன.

ஆகையால் நம் நாட்டில் இருந்து சில பிரபலமான கார் மாடல்கள் விற்பனையில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகி இருக்கின்றது. அவை என்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இப்போது கிடைத்திருக்கும் தகவலின் முழுமையாக 25 டீசல் எஞ்ஜின் கொண்ட கார் மாடல்கள் சந்தையை விட்டு வெளியேற இருக்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ:

Tata nexon

வெளியேற இருக்கும் டாடாவின் டீசல் கார்கள்: டாடாவின் சில தயாரிப்புகள் டீசல் மட்டும் மற்றும் டீசல்-பெட்ரோல் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், நிறுவனம் அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களில் டீசல் எஞ்ஜின் தேர்வுகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

அரசின் டீசல் வாகன வெளியேற்ற நடவடிக்கையால் இந்த கார் மாடல்கள் அனைத்தும் சந்தையை விட்டு வெளியேற இருக்கின்றன. அதேவேளையில், இந்த மாடல்களின் பெட்ரோல் ஆப்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு தக்க வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன் விற்பனைக்கு எந்த முட்டுக்கட்டையும் இப்போதைக்குப் போடப்படாது.

Mahindra bolero

2027ஆம் ஆண்டிற்கு பின்னர் சந்தையை விட்டு வெளியேற இருக்கும் மஹிந்திராவின் டீசல் தயாரிப்புகள்: டாடாவை போலவே மஹிந்திராவும் தன்னுடைய பிரபல கார் மாடல்களில் டீசல் ஆப்ஷனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. பொலிரோ, பொலிரோ நியோ, மராஸ்ஸோ, தார், எக்ஸ்யூவி700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார் மாடல்களிலேயே மஹிந்திரா டீசல் ஆப்ஷனை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த அனைத்து மாடல்களின் டீசல் தேர்வுகளே வெளியேற்றப்பட இருக்கின்றன.

சந்தையை விட்டு வெளியேற இருக்கும் ஹூண்டாய் டீசல் கார்கள்: இந்த நிறுவனம் அதன் புகழ்பெற்ற வென்யூ, கிரெட்டா, அல்கஸார் ஆகிய கார் மாடல்களிலேயே டீசல் மோட்டார் தேர்வை விற்பனைக்குக் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் டீசல் தேர்வுகள் அனைத்தும் விற்பனையில் வெளியேற்றப்பட்டு, வெறும் பெட்ரோல் தேர்வுகள் விற்பனையில் தக்க வைக்கப்பட இருக்கின்றன.

Kia seltos

விற்பனையில் இருந்து வெளியேற இருக்கும் கியா நிறுவனத்தின் டீசல் தயாரிப்புகள்: சொனெட், கேரன்ஸ் மற்றும் செல்டோஸ் ஆகிய மூன்று கார் மாடல்களிலும் பெட்ரோலுடன் சேர்த்து டீசல் ஆப்ஷனையும் விற்பனைக்கு வழங்குகின்றது. சொனெட் மற்றும் செல்டோஸே நிறுவனத்தின் டாப் செல்லிங் மாடலாகும். இந்த இரண்டிலும் இருந்து டீசல் ஆப்ஷன் வெளியேற்றப்பட இருப்பதால் அதன் விற்பனை லேசாக பாதிப்படையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஜி மற்றும் டொயோட்டாவின் சில டீசல் கார்களும் இந்தியாவில் இருந்து வெளியேற இருக்கின்றன. அந்தவகையில், எம்ஜி குளோஸ்டர், ஹெக்டர் ஆகிய இரு மாடல்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் டீசல் ஆப்ஷன்களே சந்தையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட இருக்கின்றன. இதேபோல், டொயோட்டாவின் புகழ்பெற்ற கார் மாடல்களான இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகியவற்றின் டீசல் ஆப்ஷன்களும் சந்தையை விட்டு வெளியேற இருக்கின்றன.

Toyota innova crysta

இதில் துரதிரஷ்டம் என்னவென்றால் இன்னோவா க்ரிஸ்டா வெறும் டீசல் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. நிறுவனம் இன்னோவா ஹைகிராஸிலேயே பெட்ரோல் ஆப்ஷனை வழங்குகின்றது. ஆகையால், முழுமையாக இன்னோவா க்ரிஸ்டா இந்தியாவை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, அது இருந்த தடம் இல்லாமலே போகுவதற்கான சூழலே தற்போது இந்தியாவில் உருவாகி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார் மாடல்கள் மட்டுமில்லைங்க ஜீப் காம்பஸ் மற்றும் ஃபோர்ஸ் கூர்கா போன்ற கார் மாடல்களும் டீசல் கார்களுக்கு எதிரான நடவடிக்கையால் பாதிப்படைய இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடல்களில் பல டீசல் மோட்டார் தேர்வில் மட்டுமே கிடைக்கக் கூடியவை இருக்கின்றன. ஆகையால், அவை 2027க்கு பின்னர் இருந்த இடம் தெரியாமல் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, July 28, 2023, 14:05 [IST]
English summary
Government to be ban completely diesel powered cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X