விரைவில் டீசல் கார்களுக்கு தடையா? எப்போ வரப்போது தெரியுமா? இதான் உண்மையான காரணம்

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டீசல் கார்களை வரும் 2027ம் ஆண்டு முதல் முற்றிலும் தடை செய்ய மத்திய அரசு பரீசிலனை நடத்தி வருகிறது. அதிகமான காற்று மாசு ஏற்படுவதால் அதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை எடுக்க பரீசிலனை செய்து வருவதாகக் கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள பல நகரங்கள் உலகின் அதிக ஜன நெருக்கடி கொண்ட நகரங்களாக உள்ளன. உலகின் உள்ள டாப் 50 ஜன நெருக்கடி கொண்ட நகரங்களில் இந்தியாவின் 39 நகரங்கள் உள்ளன. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடி வாழ பழகிக்கொண்டனர். இந்நிலையில் மக்கள் மத்தியில் வாகனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருக்கிறது.

Diesel Car Ban in 2027

இப்படியாக மக்கள் கூட்டமாக வாழும் பகுதிகளில் காற்று மாசு அதிகரிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தான். வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்துகிறது. இதற்கிடையில் தற்போது குறைவான மாசு வெளியேற்றும் வாகனங்கள் வந்துவிட்டாலும் பழைய வாகனங்கள் தற்போதும் பயன்பாட்டில் இருப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்த மாசுவை குறைக்க மத்திய பெட்ரோலிய துறையின் ஆற்றல் மாற்ற ஆலோசனை கமிட்டி மத்திய அரசுக்கு தற்போது ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதன்படி 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் வரும் 2027ம் ஆண்டு முதல் டீசல் கார்களுக்கான முற்றிலுமான தடையை விதிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.

Diesel Car Ban in 2027

மேலும் இந்த ஆலோசனை கமிட்டி இந்தியாவில் பெட்ரோல், மின்சாரம், நிலக்கரி மற்றும் மாற்று எரிபொருளைக் கையாளும் குழுக்களைக் கண்காணிக்க மேற்பட்ட அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும். அவர்கள் இதன் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க விதிமுறைகளை உருவாக்கி அதைப் பின்பற்ற வைக்க வேண்டும் எனவும் பசுமை எரிசக்தி மக்கள் எல்லோரும் மாற வேண்டும் எனவும் ஆலோசனையையும் வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த இந்த மேற்பார்வை குழு ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனை கமிட்டியின் தலைவராக முன்னாள் பெட்ரோலிய துறை செயலாளர் தருண் கபூர் பொறுப்பு வகிக்கிறார். முன்னாள் ஓஎன்ஜிசி சேர்மன் சுபாஷ் குமார் இந்த கமிட்டியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

இந்தியா உலக அளவில் 8வது அதிகமான காற்று மாசு கொண்ட நகரமாக இருக்கிறது. இந்தியாவில் சராசரியாக ஒரு கியூபிக் மீட்டரில் 5.3 மைக்ரோகிராம் மாசு இருப்பதாகப் பதிவாகியுள்ளது. இது உலக சுகாதார அமைப்பு வழங்கிய அளவிலிருந்து 10 மடங்கு அதிகம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காற்றுமாய் கட்டாயம் சரி செய்ய வேண்டிய முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு வாகனங்களைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை தான். இருந்தாலும் டீசல் வாகனங்களைத் தடைசெய்வது அதற்கான டிமாண்டை டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 8, 2023, 18:30 [IST]
English summary
Govt plans for a complete ban on diesel cars by 2027
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+