இந்தியர்களின் உசுரில் கலந்த 7 கார் மாடல்கள்... இப்போ விற்பனைக்கு வந்தாலும் இவற்றை வாங்க கூட்டம் அலைமோதும்!

இந்தியர்களின் ஃபேவரிட் கார்களாக இப்போதைய மாடர்ன் கால புதுமுக கார்கள் இடம் பிடித்திருக்கலாம். ஆனால், ஒரு காலத்தில் இந்தியர்களின் ஃபேவரிட் வாகனங்களாக இருந்தவை இப்போது விற்பனையில் இல்லை. அவற்றின் இடத்தையே இன்றைய நவீன கால கார்கள் தட்டிப் பறித்திருக்கின்றன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், நவீன கால கார்களை நோக்கி இந்தியர்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

புதிய வாகனங்களை உருவாக்கும் விஷயத்தில் அரசு கடும் விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, பாதுகாப்பு தரத்தில் அனைத்து கார்களும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இதன் விளைவாக விற்பனையில் செழித்துக் காணப்பட்ட, கார் மடால்கள் சந்தையை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன.

Popular cars

இதன் விளைவாகவே நவீன கால கார்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் விரிவடையத் தொடங்கியது. அந்த வரவேற்பு தற்போது பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. அதே நேரத்தில், சந்தையில் இருந்து வெளியேறிவிட்டதாகக் கருதப்படும் கடந்த கால கார் மாடல்களுக்கு இப்போதும் டிமாண்ட் சந்தையில் இருப்பதை உணர முடிகின்றது.

அவை இப்போது சந்தைக்கு வந்தாலும் விற்பனையில் அசத்தும் என அசைக்க முடியாத நம்பிக்கை இந்திய வாகன துறைக்கே இருக்கின்றது. அந்த மாதிரியான குறிப்பிட்ட சில கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Tata sumo

டாடா சுமோ (Tata Sumo): நூற்றாண்டுகளைக் கடந்தாலும் இந்த பெயர் மட்டும் இந்தியர்களின் மனதில் இருந்து நீங்காது. அந்த அளவிற்கு புகழ்பெற்ற கார் மாடலே டாடா சுமோ. டாடா மோட்டார்ஸ் சுமோவை முதன் முதலில் 1990லியே வெளியீடு செய்தது. இந்த காருக்கு நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான சுமந்த் மூல்கோகர் பெயரை சுருக்கியே சுமோ என்கிற பெயரை அது டாடா வைத்தது. இது ஓர் எம்யூவி ரக வாகனம் ஆகும்.

4 வீல் டிரைவ் திறனுடன் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்தியந் ஆர்மி, காவலர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து முக்கிய அதிகாரிகள் பலர் இந்த காரையே தங்களின் அதிகாரப்பூர்வமாக வாகனங்களாக பயன்படுத்தினர். விற்பனைக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் 1 லட்சம் விற்பனையை எட்டும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற கார் மாடலாக சுமோ விளங்கியது. இப்போதும் இந்த காருக்கு இந்தியர்கள் பிரியர்கள் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

Toyota qualis

டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis): டாடா சுமோவிற்கு போட்டியாக டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கிய ஓர் கார் மாடலே டொயோட்டா குவாலிஸ். இதனை 2000மாவது ஆண்டிலேயே நிறுவனம் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. உலக நாடுகளில் கைஜங் எனும் பெயரிலேயே இந்த காரை டொயோட்டா விற்பனைச் செய்து வந்தது. சுமோவிற்கு அடுத்தபடியாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் எம்யூவி ரக கார் இதுவே ஆகும்.

விற்பனைக்கு வந்த 5 ஆண்டுகளில் 1.5 லட்சம் யூனிட் விற்பனையை அது எட்டியது. இந்த கார் இப்போது விற்பனைக்கு வந்தாலும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெறும். அந்த அளவிற்கு இந்தியர்களின் நம்பகத்தைக் கவர்ந்த கார் மாடலாக குவாலிஸ் இருக்கின்றது. மலிவு விலை, நீடித்து உழைக்கும் திறன் மற்றும் அதிக இடவசதி ஆகியவற்றிற்கு பெயர்போன காராக குவாலிஸ் பார்க்கப்பட்டது.

Tata indica

டாடா இன்டிகா (Tata Indica): இந்தியாவில் எந்த காலத்திலும் இந்த பெயர் மறையவே மறையாது என கூறலாம். அந்த அளவிற்கு சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கார் மாடலாக இன்டிகா இருக்கின்றது. இப்போதும், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதியில் இந்த கார் பயன்பாட்டில் இருக்கின்றது.

இந்தியர்களின் நம்பிக்கையை அதிகம் சம்பாதித்த கார் மாடலாக இது இருக்கின்றது. மேலும், நீடித்து உழைக்கும் தன்மை, குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றிலும் இந்த கார் பெயர்போனதாக இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் இந்திய இன்டிகா கார் மாடலை முன் வைத்து பலதரப்பட்ட புதிய கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கியது.

அந்தவகையில், இன்டிகோ செடான் ரக கார் மாடல், இன்டிகோ மரினா மற்றும் இன்டிகோ சிஎஸ் உள்ளிட்டவற்றை வெவ்வேறு விதமான உடல் ஸ்டைலில் விற்பனைக்குக் கொண்டு வந்தது, டாடா. இருப்பினும், அவை இன்டிகா அளவிற்கு விற்பனையாகவில்லை என்றே கூற முடியும். இந்த கார் மாடலும் இப்போது விற்பனைக்கு வந்தாலும் மிக சூப்பரான வரவேற்பைப் பெறும்.

Tata sierra

டாடா சைரா (Tata Sierra): அரசியல்வாதிகளின் பிரியமான கார் மாடலாக இது இருந்தது குறிப்பிடத்தகுந்தது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களின் முதல்வர்களின் அதிகாரப்பூர்வ வாகனமாக இதுவே பயன்படுத்தப்பட்டது. அந்த அளவிற்கு நம்பிக்கையைப் பெற்ற கார் மாடலாக சைரா காட்சியளிக்கின்றது. 1990லேயே இந்த கார் விற்பனைக்கு வந்தது. உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் எஸ்யூவி ரக கார் இதுவாகும்.

இந்த கார் மாடலுக்கு இப்போதும் சந்தையில் டிமாண்ட் இருப்பதாக கருதப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே சைராவை மீண்டும் களமிறக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு இருக்கின்றது. இந்த முறை எலெக்ட்ரிக் வெர்ஷனில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுதவிர, எரிபொருள் எஞ்ஜின் கொண்ட தேர்விலும் சைரா விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. மேலும் இதன் மறு வருகை 2025ம் ஆண்டிற்குள் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maruti kizashi

மாருதி சுஸுகி கிஸாசி (Maruti Kizashi): மாருதி சுஸுகியின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக ஒரு காலத்தில் இருந்ததே கிஸாசி. இது ஓர் பிரீமியம் வசதிகள் நிறைந்த செடான் ரக காராகும். இதனை தற்போது பலரும் மறந்திருப்பர். ஜப்பானில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த கிஸாசியை எந்த மாற்றமும் இன்றி அப்படியே மாருதி சுஸுகி விற்பனைக்குக் களமிறக்கியது.

இந்த கார் மாடலின் வருகைக்கு பின்னரே வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகியவை விற்பனைக்குக் களமிறக்கப்பட்டன. அதிக மைலேஜ் மற்றும் மலிவு விலை என அனைத்திலும் புகழ்பெற்ற மாருதி சுஸுகி தயாரிப்பாக கிஸாசி காட்சியளித்தது. இந்த காரும் இப்போது விற்பனைக்கு வந்தாலும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

Mahindra armada

மஹிந்திரா அர்மதா (Mahindra Armada): இந்த கார் இந்தியாவில் கடைசியாக விற்பனையில் இருந்தது 2001 ஆம் ஆண்டில் ஆகும். அப்போது வரை நல்ல அளவிலான வரவேற்பே இந்த காருக்கு கிடைத்தது. 1990களின் முற்பகுதியிலேயே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜீப்பின் அடிப்படை தோற்றத்தில் உருவாக்கப்பட்ட ஹார்ட் டாப் வாகனம் இதுவாகும். இதற்கும் இப்போதும் எதிர்பார்ப்பு இருப்பதாக கருதப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களை அதிகம் நேசிக்கும் நபர்கள் மத்தியில் மேலே பார்த்த கார் மாடல்கள் இப்போதும் பயன்பாட்டில் இருக்கின்றது. மேலே பார்த்த வாகனங்கள் அனைத்தும் நீடிக்கும் உழைக்கும் திறன் கொண்டவை இதன் காரணத்தினாலேயே இப்போதும் அவை பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், இந்த காரணத்திற்காகவே மீண்டும் சந்தைக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு ஒரு சிலரின் கண்களில் இருக்கின்றது.

Article Published On: Tuesday, May 16, 2023, 20:23 [IST]
English summary
Greatest car models from the past
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X