ரூ. 5 கோடி மதிப்புள்ள சூப்பர் காரை வாங்கிய ஜிம் உரிமையாளர்... ஜிம் வச்சா இவ்ளோ சம்பாதிக்க முடியுமா?..

ஜிம் உரிமையாளர் ஒருவர் இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான மெக்லாரன் 720எஸ் (McLaren 720S) சூப்பர் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் விலை ரூ. 5 கோடி ஆகும். இதுபோன்று கார்குறித்த இன்னும் பல சுவாரஷ்யமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உடற்பயிற்சி கூடங்களை எடுத்து நடத்தி வரும் ஓர் நபர் இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கி இருப்பது ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் ஜிம் நடத்தி இவ்ளோ விலை உயர்ந்த காரை வாங்க முடியுமா என்கிற கேள்வியையும், சந்தேகத்தையும் இந்த சம்பவம் எழுப்பி இருக்கின்றது.

Amit singh mclaren 720s supercar

ஃப்யூசன் எனும் பெயரில் ஜிம்களை நடத்தி வரும் அமித் சிங் என்பவரே மிக மிக விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கியவர் ஆவார். அவர் மெக்லாரன் 720எஸ் சூப்பர் காரையே வாங்கி இருக்கின்றார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 4.65 கோடி ஆகும்.

இதை கூடுதல் கஸ்டமைஸ் செய்து வாங்க சென்றால் ஐந்து கோடிக்கும் அதிகமான விலையைக் கொண்டதாக அது இருக்கும். மிக சமீபத்திலேயே மெக்லாரன் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய கால் தடத்தைப் பதித்தது. இதன் வருகையைத் தொடர்ந்து மும்பையில் புதிய ஷோரூமையும் திறந்து வைத்தது.

Amit singh mclaren 720s supercar front view

இந்த ஷோரூமின் வாயிலாகவே அமித் சிங் மெக்லாரன் 720எஸ் சூப்பர் காரை வாங்கி இருக்கின்றார். அவர் அந்த காரை குடும்பத்துடன் சென்று டெலிவரி பெற்ற புகைப்படமே தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகி உள்ளது. தன்னுடைய அனைத்து தயாரிப்புகளையும் மெக்லாரன் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஜிடி (GT), ஆர்சுரா (Artura), 720எஸ் (720S), 720எஸ் ஸ்பைடர் (720S Spider), 765 எல்டி (765 LT) மற்றும் 765 எல்டி ஸ்பைடர் (765 LT Spider) இந்த கார் மாடல்களையே நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Amit singh mclaren 720s supercar back view

அமித் சிங் வாங்கி இருக்கும் மெக்லாரன் 720எஸ் சூப்பர் காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 720பிஎஸ் மற்றும் 770என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 7ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இவை அனைத்தும் சேர்ந்தே மெக்லாரன் 720எஸ் காரை அதிக வேகத்தில் இயங்கும் காராக மாற்றி இருக்கின்றது. மெக்லாரன் 720 எஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 341 கிமீ ஆகும். இந்த வேகத்தை கண்ணிமைக்கும் நேரத்திலேயே எட்டிவிடும். இதேபோல் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 2.8 செகண்டுகளில் இந்த கார் எட்டிவிடும்.

இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லும் காரையே ஃப்யூசன் ஜிம் உரிமையாளர் அமித் சிங் தற்போது வாங்கி இருக்கின்றார். மெக்லாரன் 720 எஸ் காரின் அதி-வேக திறனுக்கு அந்த காரின் மிக சிறந்த ஏரோடைனமிக்ஸ் தோற்றமே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

இதுதவிர, இயங்கக் கூடிய விங் ஒன்று காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்தே மணிக்கு 341 கிமீ வேகம் மற்றும் ஷார்ப்பான பிரேக்கிங் வசதியை வழங்கச் செய்கின்றன. இந்தியாவில் அமித் சிங் மட்டுமே மெக்லாரன் நிறுவனத்தின் சூப்பர் கார்களை பயன்படுத்தவில்லை.

இன்னும் பல பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ரேமண்ட் நிறுவனத்தின் கவுதம் சிங்கானியா பச்சை நிற மெக்லாரன் 720எஸ் சூப்பர் காரை பயன்படுத்தி வருகின்றார். இவரை போலவே நடிகர் கார்த்திக் ஆர்யனும் மெக்லாரன் ஜிடி காரை பயன்படுத்தி வருக்கின்றார். இந்த கார் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் மற்றும் ஆடம்பர ரக கார்களுக்கு முன்பைக் காட்டிலும் இப்போது வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக இந்தியாவில் ஆடம்ப கார்கள் மிக தாராளமான தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மெக்லாரனும் இந்தியாவில் கால் தடம் பதித்து உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 11:56 [IST]
English summary
Gym owner buys mclaren 720s supercar in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X