இந்த காருக்கு இவருதான் பிராண்ட் அம்பாஸிட்டரா? இவர் ஃபேன்ஸ் ஆளுக்கு ஒன்னு வாங்குனாலே விற்பனை எகிறிடுமே!

ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் என்ற எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தத் தயாராக இருக்கிறது. இந்த கார் வரும் ஜூலை மாதம் 10ம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில் இந்த காருக்கான அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாஸிட்டராக கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் புதிதாக கார் ஒன்றைக் களம் இறக்கத் திட்டமிட்டு எக்ஸ்டர் என்ற காரை வடிவமைத்துள்ளது. இந்த காரை அறிமுகப்படுத்தத் தீவிரமான பணிகள் நடந்து வருகிறது. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே ஹூண்டாய் டீலர்களிடம் துவங்கிவிட்டது.

hardik pandya as exter brand ambassador

இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் கார் EX, S,SX, SX(O) ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் டாப் வேரியன்டாக SX(O) என்ற வேரியன்ட் தான் இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் இந்த எக்ஸ்டர் காரை புதிய தலைமுறையினருக்கான அர்பன் வாகனமாக உருவாக்கியுள்ளது.இதை அவர்கள் வெளிப்புறத்தில் சுற்றி வர ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாஸிட்டராக கிரிக்கெட் வீரர் ஹார்த்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்லாமல் தனது அவுட் லுக்கிலும் புகழ் பெற்றவர். மேலும் இவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். இதனால் இளைஞர்களிடம் இந்த காரை எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதால் இவரை பிராண்ட் அம்பாஸிட்டராக அறிவித்துள்ளனர்.

hardik pandya as exter brand ambassador

இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் வரும் ஜூலை மாதம் 10ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் பின் இதன் விற்பனை துவங்கும். இந்த காருக்கான புக்கிங் தற்போது ஹூண்டாய் டீலர்களிடம் நடந்து வரும் நிலையில் முதலில் புக்கிங் செய்தவர்களுக்கே டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை தற்போது ஹூண்டாய் நிறுவனம் டெஸ்டிங் செய்து வருகிறது.

இந்த கார் குறித்த டீசர் வெளியாகியிருந்தது. இதில் இந்த கார் குறித்த பல முக்கியமான அம்சங்கள் குறித்த தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதன்படி இந்த காரில் டேஷ்கேம், டூயல் கேமரா, ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன் ரூஃப் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன் ரூஃப் என்றால் கொடுக்கும் வாய்ஸ் கமெண்டிற்கு ஏற்ப சன்ரூஃப் தானியங்கியாக வேலை செய்யும்.

"Open Sunroof" "I Want to see the Sky" போன்ற விஷயங்களைச் சொன்னாலே போதும். சன் ரூஃப் தானாக திறக்கும். இது டாப் வேரியன்டில் மட்டுமே இருக்கிறது. இது போக இந்த காரில் 5.84 செ.மீ எல்சிடி டிஸ்பிளே, ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, மல்டிபிள் ரெக்கார்டிங் மோட், ஆகிய வசதிகள் உள்ளன. இதில் முழு எச்டி தொழிற்நுட்பத்தில் ரெக்காடிங் செய்யப்படும்.

ரெக்கார்டிங் மோட்களாக நார்மல் (சாதாரண டிரைவிங்), ஈவென்ட் பாதுகாப்பு சம்பந்தமான ரெக்கார்டிங், வெக்கேஷன் (டைம் லேப்ஸ் ரெக்கார்டிங்) என ரெக்கார்டிங் மோட்கள் இதில் இருக்கிறது. இதைப் பயணத்திற்குப் பிறகு நாம் எடுத்துப் பதிவு செய்து கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். இதைப் பயண நினைவுகளாகவும், ஆதாரமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் கிடைக்கும். இந்த இன்ஜின் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மைக்ரோ எஸ்யூவிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்தியாவில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையை பெற்று வருகிறது. இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் அதற்கு கடும் போட்டியை வழங்கும் என்பதில் அச்சமேயில்லை!

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 9:36 [IST]
English summary
Hardik pandya appointed as exter suv s brand ambassador by hyundai motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+