உண்மையிலேயே மின்சார வாகனங்களால் இந்தியா பலன் அடைந்திருக்கா?.. காற்று மாசு குறைந்திருக்கா?..

உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களை காற்று மாசுபாடில் இருந்து காக்க வந்த காவலனாக பார்க்கின்றன. இதனால்தான் வேக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் அவை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்த பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அரசு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டின் பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஃபேம்2 எனும் சூப்பர் திட்டத்தையே நாட்டில் தொடங்கி வைத்திருக்கின்றது. இந்த அளவிற்கு மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றதே, இதை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததற்கான பலனை இந்தியா அடைந்துவிட்டதா என்கிற உங்களுக்கு எழும்பலாம்.

Ev adoption

குறிப்பாக, காற்று மாசை அது குறைத்து விட்டதா? பொதுமக்களின் நலனில் அது எந்த அளவு பங்களிப்பை வழங்கி இருக்கின்றது என்கிற சந்தேகமும் உங்களுக்கு எழும்பக் கூடும். இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாசு உமிழ்வு குறைவு: உள் எரிப்பு எஞ்ஜின் கொண்ட (பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி) வாகனங்களில் காணப்படும் மிகப் பெரிய பிரச்னையே அவை வெளியேற்றும் நச்சு கலந்த புகைதான். இதனை மின்சார வாகனம் துளி அளவும் வெளியேற்றாது. இதுவே சுற்றுச்சூழலுக்கு பலவிதமான கேடுகளை விளைவித்து வருகின்றது.

India benefited from electric vehicles

கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரோஜன் ஆக்ஸைடு போன்ற என இன்னும் பல விஷங்களை அந்த புகை தாங்கி இருக்கின்றது. இதுவே ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் எக்சாஸ்ட் குழாய் வாயிலாக வெளியேறிக் கொண்டிருக்கின்றது. இந்த பிரச்னை எலெக்ட்ரிக் வாகனங்களில் துளியளவும் கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இந்தியாவில் இப்போது கணிசமான அளவு காற்று மாசு குறைந்திருக்கின்றது என்றே கூறலாம்.

பசுமைவீடு வாயு வெளியேற்றம் குறைவு: கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நைட்ரோஜன் ஆக்ஸைடு ஆகியவை அதிக அடர்த்தியான நச்சு வாயுக்கள் ஆகும். இவை அதிகளவில் பூமியின் மேல் தங்குவதால் பசுமைவீடு விளைவு உருவாகின்றது. இதன் விளைவாகவே பூமி வெப்பமயமாதலுக்கு மிக வேகமாக ஆளாகிக் கொண்டிருக்கின்றது.

Ice polution

ஏற்கனவே பனி பாறைகள் இதனால் உருகத் தொடங்கி விட்டன. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வு போன்ற மிகப் பெரிய ஆபத்துகளும் உருவாகத் தொடங்கிவிட்டது. இந்த ரிஸ்க்குகளில் இருந்தே லேசாக எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த பூமியை மீட்டெடுக்கத் தொடங்கி இருக்கின்றன.

சுகாதாரம் மேம்பாடு: காற்றில் கலக்கப்படும் மாசு குறைந்திருப்பதால் சுற்றுப்புற சூழலின் சுகாதாரமும் லேசாக மேம்பட்டுக் காணப்பட தொடங்கி இருக்கின்றது. காற்றில் அதிகளவில் கார்பன் உள்ளிட்ட நச்சுக்கள் கலப்பதால் சுவாச நோய்கள், இதய நோய்கள் என பல விதமான பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டால் இந்த நிலை மாற தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலி மாசு குறைந்துள்ளது: ஐசிஇ வாகனங்கள் இயங்கும்போது அதன் எஞ்ஜினில் இருந்து அதிகப்படியான சத்தம் வெளியேறும். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் அமைதியானவை. அவற்றில் இருந்து சத்தம் பெரிய அளவில் வராது. ஆகையால், மின்சார வாகன பயன்பாடு ஒலி மாசு குறைப்பிலும் தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு பக்கம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பசுமையானவை என பலர் கூறி வருகின்றநிலையில், மற்றொரு பக்கம் அந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் காலாவதியாகும் அந்த கழிவுகளை என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், மிகப் பெரிய அளவில் பேட்டரி கழிவுகள் விரைவில் வெளியேறும் அபாயம் இருக்கின்றது எனவும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, June 5, 2023, 9:02 [IST]
English summary
Has india benefited from electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X