கம்மியான விலையில், ஹேட்ச்பேக் கார்களை விற்று தள்ளும் மாருதி சுஸுகி!! யாராலும் தடுத்து நிறுத்த முடியல...

எஸ்யூவி ரக கார்களுக்கே இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. விற்கப்பட்ட எண்ணிக்கைகளுடன் அவற்றை இனி பார்க்கலாம்.

கடந்த மே மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட காராக மாருதி சுஸுகி பலேனோ விளங்குகிறது. பலேனோ ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராகும். ஆதலால், அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்கள் வரிசையிலும் பலேனோ தான் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 18,733 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

hatchback cars sales 2023 may

ஆனால் 2022 மே மாதத்தில் 13,970 பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பலேனோ கார்களின் விற்பனை ஆனது 34% அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் 17,346 யூனிட்களின் விற்பனை உடன் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது. மொத்தமாக கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான கார்கள் வரிசையில் பலேனோவுக்கு அடுத்து ஸ்விஃப்ட் கார் தான் உள்ளது.

கடந்த மே மாதத்தில் 17,346 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி இருந்தாலும், 2022 மே மாதத்தில் 14,133 ஸ்விஃப்ட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்விஃப்ட்டிற்கு அடுத்து 3வது இடத்தில் மாருதி சுஸுகி வேகன்ஆர் உள்ளது. கடந்த மே மாதத்தில் விற்கப்பட்ட வேகன்ஆர் கார்களின் எண்ணிக்கை 16,258 ஆகும். ஆனால் 2022 மே மாதத்தில் வெறும் 6,814 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

hatchback cars sales 2023 may

இவற்றிற்கு அடுத்து சிறிய இடைவெளியுடன் மாருதி சுஸுகி ஆல்டோ 4வது இடத்தில் உள்ளது. ஆல்டோவின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 9,368 ஆகும். வேகன்ஆரை காட்டிலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ள போதிலும், இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தை பெற்றுள்ளதன் காரணமாக, இந்த வரிசையில் முதல் 4 இடங்களை மாருதி சுஸுகியின் கார்களே பிடித்துள்ளன. 2022 மே மாதத்தில் மொத்தம் 12,933 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

5வது இடத்தில் ஒருவழியாக மாருதி சுஸுகி அல்லதா ஹேட்ச்பேக் காராக டாடா டியாகோ 8,133 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. டியாகோ ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை சமீப காலத்தில் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. வழக்கமாக மாருதி சுஸுகியின் ஹேட்ச்பேக் கார்களுக்கு அடுத்து ஹூண்டாய் மோட்டார்ஸின் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் தான் முன்னிலை வகிக்கும். ஆனால் கடந்த மே மாதத்தில் ஐ10 நியோஸ் கார்களின் விற்பனை சரிவை கண்டுள்ளது.

hatchback cars sales 2023 may

இதன் காரணமாக 6வது இடத்தை பிடித்துள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 6,385 ஆகும். ஆனால் 2022 மே மாதத்தில் 9,138 ஐ10 நியோஸ் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 7வது இடத்திலும் ஹூண்டாயின் ஹேட்ச்பேக் காராக ஐ20 6,094 என்ற விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. இந்த வரிசையில் கடைசி 3 இடங்களில் டாடா அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸா மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எஸ்யூவி கார்களையே மக்கள் விரும்பி வாங்குவதாக நாம் கூறினாலும், இந்தியாவில் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான முதல் 3 கார்கள் ஹேட்ச்பேக் ரக கார்களாகும். இதற்கு அவற்றின் மிகவும் குறைவான விலைகள் முக்கிய காரணமாக விளங்குகின்றன. பலேனோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர் இவை மூன்றை இந்தியாவின் கார்கள் என்று கூட சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 14, 2023, 11:17 [IST]
English summary
Hatchback cars sales 2023 may
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X