காத்திருந்தவங்களுக்கு நல்ல விருந்தா வந்திருக்கு 2023 கியா செல்டோஸ்.. இந்த 5விஷயத்துக்காக மக்கள் குவிய போறாங்க!
கியா நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் செய்யப்பட்ட 2023 செல்டோஸ் எஸ்யூவி காரை வெளியீடு செய்து உள்ளது. இந்த கார் பற்றிய அறிய வேண்டிய டாப் 5 முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
கியா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக செல்டோஸ் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. கியாவிற்கு இந்தியாவில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த கார் மாடலே இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலை கவுரவிக்கும் விதமாகவே கியா நிறுவனம் தற்போது அதனை அப்டேட் செய்திருக்கின்றது.

இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலையே அது வெளியீடும் செய்திருக்கின்றது. என்ன மாதிரியான புதுப்பித்தல்கள் இந்த காரில் செய்யப்பட்டு இருக்கின்றன? இதில் கூடுதல் சிறப்பு வசதிகள் என்னென்ன கொடுக்கப்பட்டு இருக்கின்றன? என்பது போன்ற இந்த கார் பற்றி அறிய வேண்டிய டாப் 5 முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
செல்டோஸின் வெளிப்புற அழகு: புதுப்பித்தலின்கீழ் பல்வேறு மாற்றங்களை கியா நிறுவனம் செல்டோஸின் வெளிப்புறத்தில் செய்திருக்கின்றது. ஹெட்லைட் மற்றும் பகல்நேரத்தில் ஒளிரும் எல்இடி லைட்டுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. முன் பக்கத்தின் முழுமையாக ஆளும் வகையிலேயே மெல்லிய கோடு போல் முழு நீளத்திற்கு டிஆர்எல் எல்இடி வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், இதன் பம்பரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், புதிதாக 18 அங்குல வீல்கள் இந்த காரில் கொடுக்கப்பட இருக்கின்றது. இத்துடன், 17 அங்குல அலாய் வீல் தேர்வும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இது சற்று புதிய டிசைனில் இருக்கும் என கூறப்படுகின்றது.
இவற்றுடன் சேர்த்து காரின் பின் பக்கத்தில் புதிய ஸ்போர்ட்ஸ் டைப் எல்இடி டெயில் லைட்டுகள், கன்னெக்டட் எல்இடி லைட் பார்கள் உள்ளிட்டவையும் காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், வேரியண்டுகள் வாரியாக வித்தியாசமான தோற்றம் கொண்ட பம்பரை கியா வழங்கும் என தெரிகின்றது.

காரின் உட்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள்: விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கியா செல்டோஸின் உட்பக்கம் வேற லெவலுக்கு அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, டேஷ்போர்டு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இரு ஸ்போர்ட்ஸ் டைப் திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிஜிட்டல் க்ளஸ்டராகவும் பயன்படும். இரண்டும் 10.25 அங்குலம் கொண்டவை ஆகும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தொடுதிரை வசதிக் கொண்டது. இத்துடன், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியும் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர 67 வகையான இணைப்பு அம்சங்கள் புதிய கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டு இருக்கும். இதுதவிர பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் தானியங்கி ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், 8 அங்குல ஹெட்ஸ்-அப் திரை, போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் ஆகிய அம்சங்களும் கியா செல்டோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய டர்போ பெட்ரோல் எஞ்ஜின்: 2023 கியா செல்டோஸ் காரில் மூன்று விதமான எஞ்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் தேர்வுகளும், புதிய 1.5 லிட்டர் டர்போசார்ஜட் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கின்றது. இந்த டர்போ மோட்டார் முதலில் கேரன்ஸ் காரில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விபரம்: கியா செல்டோஸில் எக்கசக்க பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், புதிதாக அடாஸ் 2.0 அம்சமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், முன் பக்க மோதல் வார்னிங், லேன் டிபார்ச்ர் வார்னிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் ஃபாலோவிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட்ட மோதலை தவிர்க்கும் வசதி மற்றும் ஹை-பீம் லைட் அசிஸ்ட் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலே பார்த்தவற்றுடன் சேர்த்து இன்னும் பல பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன. ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிபிஎம்எஸ் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் என எக்கசக்க அம்சங்கள் புதிய கியா செல்டோஸில் இடம் பெற இருக்கின்றன.
நிற தேர்வுகள் மற்றும் புக்கிங் விபரம்: புதிய கியா செல்டோஸ் ஒட்டுமொத்தமாக 8 விதமான ஒற்றை நிற தேர்வுகளிலும், இரண்டு விதமான இரட்டை நிற தேர்வுகளிலும் வழங்கப்பட இருக்கின்றன. இந்த காருக்கான புக்கிங் பணிகள் வரும் ஜுலை 15ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட இருக்கின்றது. அதேவேளையில், ஏற்கனவே கியா செல்டோஸை பயன்படுத்தி வருபவர்களுக்கு என பிரத்யேகமாக 14ஆம் தேதியே புதிய செல்டோஸை புக் செய்துக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியாவின் இந்த புதிய காருக்கு இந்தியாவில் நல்ல அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கியா செல்டோஸ் இந்தியர்கள் பலரின் பிரியமான காராக மாறி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிய அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் கியா களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









