இந்த கார்கள் எல்லாம் செகண்ட் ஹேண்ட்ல கிடைச்சா உடனே வாங்கி போட்ருங்க... நாளைக்கு நல்ல விலைக்கு போகலாம்!..

மிக வேகமாக ஆட்டோமொபைல்துறை அப்கிரேட் ஆகிக் கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் வாகனங்கள் விஷயத்தில் மிகக் கடுமையான கெடுபிடியைக் கையாண்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், வாகன பிரியர்களின் தேவையும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவு, வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்பு யுக்தியை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலை ஒரு சில வாகன மாடல்களுக்கு ஆப்பு வைக்கக் கூடியதாக மாறி இருக்கின்றது. விற்பனையில் அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் வாகனங்கள்கூட சந்தையை விட்டு வெளியேறும் அபாய நிலையில் உள்ளன. அவ்வாறு வெளியேற்றப்படும் வாகனங்கள் காலத்தால் அழிக்கப்படும். ஒரு சில மட்டும் வாகன பிரியர்களின் நினைவுகளில் நீங்க இடத்தைப் பிடிக்கும்.

Future classics cars list

அத்தகைய வாகனங்கள் என்ன மாதிரியான நிலையில் இருந்தாலும், வாகன காதலர்கள் அதனை வாங்க முன் வருவார்கள். உதாரணமாக பழங்கால யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX 100), பழைய புல்லட் (Old Bullet), ஜாவா (Jawa) மற்றும் யெஸ்டி (Yezdi) பைக்குகளைக் கூறலாம்.

இதேபோல், வாகன பிரியர்கள் மத்தியில் பிரீமியர் பத்மினி மற்றும் கான்டெஸ்ஸா போன்ற கார் மாடல்களுக்கு இப்போதும் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் இதுபோன்ற அந்தஸ்தை பெற இருக்கும் ஒரு சில கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அவற்றின் லிஸ்டைப் பார்க்கலாம், வாங்க.

Honda city type 2

ஹோண்டா சிட்டி டைப்2 (Honda City type 2): இந்தியாவில் இப்போதும் விற்பனையில் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கும் செடான் ரக கார் மாடல்களில் ஹோண்டா சிட்டி மாடலும் ஒன்று. இப்போது, இதன் இரண்டாம் தலைமுறையே இப்போது விற்பனையில் இருக்கின்றது. இதற்கு முந்தைய தலைமுறைகள் எதுவும் விற்பனையில் இல்லை. இந்த கார் மாடலின் பழைய வெர்ஷன் ஒன்றிற்கு இப்போதும் நல்ல டிமாண்ட் சந்தையில் நிலவிக் கொண்டிருக்கின்றது.

ஹோண்டா சிட்டி டைப் 2 1.2 லிட்டர் விடெக் பெட்ரோல் தேர்விற்கே சந்தையில் இப்போதும் நல்ல மவுசு நிலவுகின்றது. பன்முக மாடிஃபிகேஷன் ஆப்ஷன்களுடன் சந்தையில் விற்பனைக்குக் கிடைத்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடல் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு இருக்கும் எனில் அது மிக சிறப்பான விலைக்கு போகும்.

Maruti 800

மாருதி சுஸுகி 800 (Maruti Suzuki 800): அறிமுகம் தேவைப்படாத ஓர் கார் மாடல் என்றால் அது இதுவாகதான் இருக்கும். இப்போதும் இந்தியர்கள் பலரின் வீட்டில் ஆல்டோ 800 பயன்பாட்டில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. முதன் முதலில் பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறக்கப்பட்ட குட்டி கார் இதுவாகும்.

1983 தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த கார் மாடல் இதுவாகும். கிட்டதட்ட மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் இந்திய சந்தையில் அது விற்பனையில் இருந்தது. எதிர்காலத்தில் வாகன ஆர்வலர்களால் தேடப்படும் ஓர் வாகனமாக மாறுவதற்கான அனைத்து அந்தஸ்தும் இந்த கார் மாடலுக்கு உள்ளது. 80ஸ் இல் விற்பனைக்குக் கிடைத்த ஆல்டோ 800க்கே இந்த தகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Maruti omni

மாருதி ஆம்னி (Maruti Omni): குடும்ப வாகனம், பள்ளி வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் என பல ரோல்களை மேற்கொண்ட ஓர் கார் மாடலே மாருதி சுஸுகி ஆம்னி ஆகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற கார் இதுவாகும். 1984 தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரை இது தயாரிப்பில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

புதிய பிஎஸ் 6 விதிகள் காரணமாக சந்தையை விட்டு வெளியேறும் நிலை இந்த காருக்கு உருவாகியது. இந்தியாவில் இப்போதும் இந்த காரை செகண்ட் ஹேண்ட் சந்தையில் வாங்கிக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் அரிய வகை வாகனமாக மாறுவதற்கான அனைத்து அந்தஸ்தும் இந்த காருக்கும் உண்டு.

Tata nano

டாடா நானோ (Tata Nano): ஏழைகளுக்கான கார் என டாடா மோட்டார்ஸால் அறிமுகம் செய்யப்பட்ட ஓர் கார் மாடலே நானோ ஆகும். ஒரு லட்சம் ரூபாய் என்கிற விலையில் அது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. ஆனால், ஏனோ மக்கள் மத்தியில் இந்த கார் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் பாதுகாப்பு விதிகளும் கடுமையாக்கப்பட்டன. இந்த நிலையால் நானோ சந்தையை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியது.

தற்போது பலரும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். நகரங்களின் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு ஏற்ற காராக இது உள்ளது. இந்த காருக்கும் எதிர்காலத்தில் அரிய வகை வாகனமாக மாறுவதற்கான அந்தஸ்து உள்ளது. பவர் விண்டோ, பவர் ஸ்டியரிங் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் என பலதரப்பட்ட வசதிகளுடன் நானோ விற்பனைக்குக் கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.

Ambassador

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் (Hindustan Motors Ambassador): இந்தியாவின் ஐகானிக் கார் மாடல் என இதனைக் கூறலாம். இதற்கு இப்போதே நல்ல டிமாண்ட் நிலவுகின்றது. எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு காலத்தில் அரசியல்வாதிகளின் மிகவும் ஃபேவரிட்டான கார் மாடலாக இது இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஆர்வலர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. இவர்கள் தங்களுக்கு பிடித்தமான வாகனம் என்றால் அதை பல ஆயிரம் தொடங்கி பல லட்சம் கொடுத்து வாங்கவும் தயங்க மாட்டார்கள். அத்தகைய வாகனங்களாகவே மேலே பார்த்த வாகனங்கள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், நிச்சயமாக அவை அந்தஸ்தை பெற்றுவிடும் என கூறிவிட முடியாது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 21, 2023, 8:29 [IST]
English summary
Here is a list of cars it become future classics
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X