இந்த 5 காருல அந்த சூப்பரான கேமிராவை தயாரிப்பு நிறுவனங்களே தந்திடுவாங்க! ஒவ்வொரு காருலயும் கட்டாயம் இருக்கணும்!
அனைத்து கார்களிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக டேஷ்கேம் (Dashcam) எனப்படும் டேஷ் போர்டில் பொருத்தப்படக் கூடிய கேமிராக்கள் இருக்கின்றன. இந்த அம்சத்தை ஒரு சில கார் உற்பத்தி நிறுவனங்களே, தங்களின் ஒரு சில கார் மாடல்களில் மட்டும் அவர்களாகவே வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த கேமிராவின் அதீத முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களாகவே இந்த அம்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், டேஷ் கேமிரா உடனேயே விற்பனைக்குக் கிடைக்கும் ஆக சிறந்த டாப் 5 கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber): இந்தியாவின் மலிவு விலை எம்பிவி ரக கார் மாடலாக ரெனால்ட் ட்ரைபர் இருக்கின்றது. அதிக இருக்கைக் கொண்டிருக்க வேண்டும், அதேவேளையில், அந்த கார் பட்ஜெட் விலையில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்போர்க்கு ஏற்ற கார் மாடலே இது ஆகும். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எம்பிவி-க்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆனால், இதன் சிறிய எஞ்ஜின் காரணத்தினால் விற்பனையில் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவற்றைக் காட்டிலும் பலமடங்கு பின் தங்கிக் காணப்படுகின்றது. இந்த காரிலேயே ரெனால்ட் நிறுவனம் டேஷ்கேமிராவை ஃபேக்டரி ஃபிட்டட் முறையில் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, டேஷ்கேமிரா பொருத்தப்பட்ட நிலையில் இந்த காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் நிறுவனம் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவியில் புதிதாக அர்பன் எடிசன் எனும் தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த தேர்வின் உயர் நிலை வேரியண்டிலேயே ரெனால்ட் டேஷ்கேமிராவை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆர்எக்ஸ்இசட் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டதே இந்த ரெனால்ட் ட்ரைபர் அர்பன் எடிசன் ஆகும்.
இந்த தேர்வைக் காட்டிலும் ரூ. 14,999 அதிகம் விலையில் அது விற்கப்படுகின்றது. அதிக சிறப்பு வசதிகள் மற்றும் அதிக கவர்ச்சியான அணிகலன் சேர்ப்பின் காரணத்தினாலேயே இந்த அதிக விலையை அதுக் கொண்டிருக்கின்றது. ரூ.8.22 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ரெனால்ட் கைகர் (Renault Kiger): ரெனால்ட் நிறுவனம் ட்ரைபரை மட்டுமில்லைங்க அதன் மற்றுமொரு புகழ்வாய்ந்த தயாரிப்பான கைகரையும் அர்பன் எடிசன் எனும் ஸ்பெஷல் பதிப்பாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பின் கீழ் இந்த காரிலும் ரெனால்ட் டேஷ்கேமிரா அம்சத்தை வழங்கி இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க ஸ்டைலிஷான ஐஆர்விஎம் மற்றும் 9.66 அங்குல மானிட்டர் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவும் அதன் வழக்கமான கார் மாடலைக் காட்டிலும் ரூ. 14,999 அதிக விலையில் விற்கப்படுகின்றது. இந்த சிறப்பு பதிப்பு ரூ. 8.94 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் குட்டியான எஸ்யூவி ரக காராக எக்ஸ்டர் மாறி இருக்கின்றது. ஆகையால், மிக சிறந்த போட்டியாளனாகவும் டாடா பஞ்சிற்கு இது மாறி இருக்கின்றது. இந்த காருக்கு அதிக வரவேற்புக் கிடைப்பதற்கு அந்த காரில் சிறப்பம்சங்களை மிக தாராளமாக ஹூண்டாய் வழங்கி இருப்பதும் ஓர் காரணமாகும்.
அந்தவகையில், டேஷ்கேமும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. எந்தவொரு சிறப்பு பதிப்பாகவும் இந்த கார் உருவாக்கப்படாமலேயே டேஷ்கேம் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், எக்ஸ்டரின் உயர் நிலை தேர்வான எஸ்எக்ஸ் (ஓ)-விலேயே இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 9.32 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் வென்யூ மற்றும் கிரெட்டா (Hyundai Venue and Creta): ஹூண்டாய் வென்யூ மற்றும் கிரெட்டா இந்த இரு கார்களும் அந்தந்த பிரிவுகளில் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கின்றன. இதில், வென்யூ காரின் சிறப்பு பதிப்பான க்நைட் எடிசன் மற்றும் உயர்நிலை தேர்வான வென்யூ என்-லைன் ஆகிய இரு மாடல்களிலும் டேஷ்கேமிரா வழங்கப்படுகின்றது.
இவற்றின் விலை ரூ. 10 லட்சம் மற்றும் 13.48 லட்சம் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதற்கு அடுத்தபடியாக கிரெட்டா காரிலும் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. கிரெட்டாவின் அட்வென்சர் பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 15.17 லட்சம் - ரூ. 17.89 லட்சம் ஆகும்.
ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் பிரீமியம் அம்சங்கள் கொண்ட செடான் ரக காராக ஸ்கோடா ஸ்லேவியா இருக்கின்றது. இந்த காரின் ஆம்பிசன் பிளஸ் ட்ரிம்மிலேயே அந்நிறுவனம் டேஷ்கேமிராவை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 12.49 லட்சம் மற்றும் 13.79 லட்சம் ஆகும். இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்வேறு ஆபத்தான சூழல்களில் இருந்து காப்பாற்றக் கூடிய அம்சமாக இந்த டேஷ்கேம்கள் இருக்கின்றன. இதனால்தான், இந்த அம்சம் இல்லாத கார்களில் அதன் உரிமையாளர்கள் வெளிப்புற சந்தையில் வாங்கி அதைப் பொருத்திக் கொள்கின்றனர். விபத்து மற்றும் பிற அசம்பாவிதங்களின்போது தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்துக் கொள்ள இந்த கேமிராக்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








