டேங்கை ஃபுல் பண்ணினா தாராளமா ஆயிரத்துக்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்.. இதோ டாப் 5 கார் மாடல்களின் லிஸ்ட்!

அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களை யாருக்குதான் பிடிக்காது. அதிலும், இந்தியர்கள் ஒவ்வொருவரும் மிகப் பெரிய மைலேஜ் விரும்பிகளாக இருக்கின்றனர். இதனால்தான் வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களைக் களமிறக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், சமீப காலமாக இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களும் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தவும் தொடங்கி இருக்கின்றனர்.

அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ஒரு முறை ஃப்யூவல் டேங்கை ஃபுல் செய்தால் ஆயிரத்திற்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜ் தரக் கூடிய வாகனங்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Five cars with 1000 km full tank mileage

டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder): இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் தரும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் ஹைபிரிட் வெர்ஷனே அதிகம் மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. ஒரு லிட்டருக்கே அது 27.93 கிமீ வரை மைலேஜ் தரும்.

அதேவேளையில், இந்த காரில் 45 லிட்டர் எரிபொருளை ஒரே நேரத்தில் நிரப்பிக் கொள்ள முடியும். அப்படி எனில் ஒரு முறை முழுமையாக ஃப்யூவலை நிரப்பினால் இந்த காரில் சுமார் 1250 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். எரிபொருள் சிக்கனத்திற்கான யுக்திகளைக் கையாண்டால் இதைவிட அதிக மைலேஜ் திறனைப் பெறவும் வாய்ப்புகள் உள்ளன.

அதாவது, நெடுஞ்சாலை டிராவல் மற்றும் குறைந்த வேகம் போன்ற யுக்திகளைக் கையாளும்பட்சத்தில் சூப்பரான மைலேஜே இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த கார் இந்தியாவில் ரூ. 10.86 லட்சம் தொடங்கி 19.99 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara): டொயோட்டா ஹைரைடர் ஹைபிரிட் காரைத் தொடர்ந்து இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலாக கிராண்ட் விட்டாரா இருக்கின்றது. அதேவேளையில் இரண்டு கார் மாடல்களும் ஒட்டி பிறந்த சகோதரர்கள் என கூறலாம்.

ஆமாங்க, இரு நிறுவனங்களும் கூட்டணியின்கீழ் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட வெவ்வேறு பெயர் கொண்ட ஒரே கார் மாடலே இவை ஆகும். ஆகையால், மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இருப்பினும், அலங்கரிப்பு விஷயத்தில் மட்டும் இந்த கார்களுக்கு இடையில் வித்தியாசம் தென்படுகின்றது. இந்த கார் 10.70 லட்ச ரூபாய் தொடங்கி ரூ. 19.99 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto): டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை ஞாபகம் இருக்கின்றதா? இந்த கார் மாடலின் மாருதி சுஸுகி பிரதியே இன்விக்டோ ஆகும். இது ஒரு லிட்டருக்கு 23.24 கிமீ வரை மைலேஜ்தரும். ஹைபிரிட் வசதிக் கொண்ட தேர்வே இந்த அளவு அதிக மைலேஜை வழங்கும்.

இந்த காரின் ஃப்யூவல் டேங்க் அளவு 52 லிட்டர் ஆகும். இதன்படி ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 1,208 கிமீ தூரம் வரை இந்த இன்விக்டோ காரில் பயணிக்க முடியும். இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 24.79 லட்சம் ஆகும். இதுவும் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross): இந்த காரை அடிப்படையாகக் கொண்டுதான் மாருதி சுஸுகி இன்விக்டோவை உருவாக்கி இருக்கின்றது. ஆனால், இது தரும் மைலேஜை விட குறைவான மைலேஜையே ஹைகிராஸ் வழங்குகின்றது. ஆமாங்க, இது ஒரு லிட்டருக்கு 21.1 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தருகின்றது. இதன்படி ஒரு முறை முழுமையாக எரிபொருளை நிரப்பினால் இதில் 1,097 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஹோண்டா சிட்டி இ:எச்இவி (Honda City e:HEV): நம்முடைய இந்த அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் கடைசி மற்றும் பெஸ்ட் மைலேஜ் தரும் கார் மாடலாக ஹோண்டாவின் சிட்டி இருக்கின்றது. இந்த காரும் அதில் கொண்டிருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் காரணத்தினாலேயே அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது.

இது ஒரு லிட்டருக்கு 27.13 கிமீ வரையில் மைலேஜ் தரும். மேலும், இந்த காரில் 40 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும். இதன்படி பார்த்தால் முழுமையாக பெட்ரோலை இந்த காரில் நிரப்பினால் சுமார் 1085 கிமீ தூரம் வரை நம்மால் பயணித்துக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்தும் இந்தியாவின் பெஸ்ட் மைலேஜ் தரும் கார் மாடல்கள் ஆகும். இதற்காகவே இவற்றிற்கு வரேவற்பும் நாட்டில் பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இப்போதை நிலவரப்படி, மாருதி கிராண்ட் விட்டாராவிற்கு இந்தியர்கள் மத்தியில் சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 12, 2023, 23:41 [IST]
English summary
Here is five cars list that can give 1000 km mileage in full tank
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+