டாடா அல்ட்ராஸ் இவி - மாருதி இவிஎக்ஸ்.. விற்பனைக்கு எப்போ வருமோனு இந்தியர்கள் காத்து கெடக்கும் 2 கார் மாடல்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மட்டுமே தன்னுடைய பிராண்டின்கீழ் நெக்ஸான் இவி பிரைம், நெக்ஸான் இவி மேக்ஸ், டியாகோ இவி, டிகோர் இவி என நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதுதவிர, இன்னும் சில எலெக்டரிக் கார்களையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. அந்தவகையில், டாடா அல்ட்ராஸ் இவி மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதைப் போலவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கும் இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.

Maruti suzuki evx and tata altroz ev

குறிப்பாக, ஒரு சிலரின் மனதில் இந்த எலெக்ட்ரிக் கார்கள் எப்போது விற்பனைக்கு வருமோ என்கிற எண்ணத்தை எழுப்பி இருக்கின்றது. அப்படி என்ன இந்த கார்களில் சிறப்புகள் இருக்கின்றன என்பதை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா அல்ட்ராஸ் இவி: இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டிகொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது ஐசிஇ வெர்ஷனில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதிலேயே விரைவில் எலெக்ட்ரிக் மோட்டார் தேர்வை சேர்க்க இருக்கின்றது, டாட மோட்டார்ஸ்.

Tata altroz ev

எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் குறிப்பிட்ட சில புதிய அம்சங்கள் மட்டுமே சேர்க்கப்பட இருக்கின்றன. இதைத்தவிர வேறு எந்த மாற்றங்களும் இதில் இடம் பெறாது என கூறப்படுகின்றது. குறிப்பாக, ஸ்டைல் மற்றும் தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகின்றது. டாடா அல்ட்ராஸ் ஓர் பிரீமியம் தர கார் மாடலாகும்.

இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் பிரீமியம் தர அம்சங்களால் நிரப்பப்பட்ட வாகனமாகவே இருக்கப் போகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 300 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. அதேநேரத்தில் விலையிலும் இந்த கார் மிக அதிகம் கொண்டாக இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் தற்போது எதிர்பார்ப்பு பலமடங்கு இந்த காருக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

Maruti suzuki evx concept

மாருதி சுஸுகி இவிஎக்ஸ்: இந்த காரை முதன் முதலில் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலியே அறிமுகப்படுத்தியது. எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி சர்ப்ரைஸாக இதனை மாருதி சுஸுகி செய்தது. நிறுவனத்தின் இந்த செயல் மாருதி சுஸுகி கார் பிரியர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே கூறலாம்.

4X4 காராக இதனை மாருதி சுஸுகி வடிவமைத்திருக்கின்றது. இந்த கார் ஓர் முழு சார்ஜில் 550 கிமீ ரேஞ்ஜை தரும் பேட்டரி பேக்குடன் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளன. டிசைனைப் பொருத்தவரை வழக்கமான எஸ்யூவி டிசைனே வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சற்று கவர்ச்சியான அமைப்பைக் கொண்டதாக அது காட்சியளிக்கின்றது.

டாடாவிற்கு போட்டியாக இந்த காரை மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதனால் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. மாருதி சுஸுகி தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு என பிரத்யேக பிளாட்பாரத்தை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவலும் அக்காரின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு தூண்டி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டு கார்களின் வருகை நாள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விரைவில், அதாவது, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இரண்டில் ஏதேனும் ஒன்று விற்பனைக்கு வர இருப்பது உறுதி. இந்தியாவில் முன்பைக் காட்டிலும் இப்போது பலமடங்கு டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக சாலைகளில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை நம்மால் பார்க்க முடிகின்றது. வரும் காலங்களில் இன்னும் அதிக எண்ணிக்கையில் இதை பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 9:08 [IST]
English summary
Here is india s 2 most awaited electric cars list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X