இந்த கார்கள் எல்லாமே அடுத்த 3மாசத்துல இந்தியால அறிமுகமாக போகுதா! 2024ல தரமான சம்பவம் நடக்கபோவது கன்ஃபார்ம்!

2023 ஆம் ஆண்டு இன்னும் ஒரு சில தினங்களில் நம்மிடம் இருந்து விடைபெற இருக்கின்றது. இந்த ஆண்டில் புதிய வாகனங்களின் அறிமுகத்திற்கு சிறிதும் பஞ்சமில்லாமல் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையிலேயே 2023 ஆம் ஆண்டைப் போலவே வரும் 2024 ஆம் ஆண்டும் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, 2024லும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில தங்களின் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்தவகையில், அடுத்த மூன்று மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ள டாப் ஐந்து கார் மாடல்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Upcoming car launches

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (New-Gen Maruti Suzuki Swift): இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இருக்கின்றது. இதன் புதிய தலைமுறை வெர்ஷனையே அடுத்த மூன்று மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த புதிய ஸ்விஃப்ட் அதிகம் 35 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.

ஆனால், சமீபத்தில் வெளியாகிய சில அதிகாரப்பூர்வ தகவல்கள் இந்த கார் அதிகபட்சமாகவே 25 கிமீட்டர் வரை மட்டுமே மைலேஜ் தரும் என தெரிவிக்கின்றன. இந்த மைலேஜ் திறனுக்காக ஹைபிரிட் சிஸ்டத்தை இந்த காரில் வழங்க இருக்கின்றது மாருதி சுஸுகி. இதுதவிர இன்னும் பல பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்க இருக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300 Facelift): மஹிந்திரா நிறுவனத்தின் அதீத பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடலாக எக்ஸ்யூவி300 காட்சியளிக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி 300 கார் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்புகளைத் தாங்கிய வாகனமாகவே இதனை மஹிந்திரா அப்டேட் செய்திருக்கின்றது.

ஏற்கனவே இந்த காரை மஹிந்திரா சோதனை ஓட்டம் செய்ய தொடங்கிவிட்டது. ஆகையால், இதன் வருகை எப்போது வேண்டுமானாலும் அரங்கேறலாம் என கூறப்படுகின்றது. அந்தவகையில், அடுத்த மூன்று மாதத்திற்குள் இதன் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகின்றது. பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift): தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருநாளன்று இந்த கார் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனவரி 16 ஆம் தேதியையே ஹூண்டாய் புதிய கிரெட்டாவின் அறிமுகத்திற்காக நிர்ணயம் செய்திருக்கின்றது. புதுப்பித்தலின் அடிப்படையில் இந்த காரின் உள் மற்றும் வெளிப்புறங்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஹூண்டாய் செய்திருக்கின்றது. மிக முக்கியமாக அடாஸ் அம்சத்தையும் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift): கியா நிறுவனம் சமீபத்திலேயே இந்த காரை உலக அளவில் வெளியீடு செய்தது. இதன் இந்திய வருகை வருகின்ற ஜனவரி மாதத்திலேயே அரங்கேற இருக்கின்றது. மேலும், இந்த காருக்கான புக்கிங் பணிகள் வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் இதன் டெலிவரி பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா பஞ்ச் இவி (Tata Punch EV): இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக பஞ்ச் இவி இருக்கின்றது. டாடா மோட்டார்ஸின் மலிவு விலை கார் மாடலே பஞ்ச் ஆகும். இதையே மின்சார வெர்ஷனில் இந்தியர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் பணியில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது.

இந்த நிலையிலேயே இதன் மின்சார வெர்ஷன் இந்தியாவில் அடுத்த மூன்று மாதத்திற்குள் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காரின் சோதனையோட்ட பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெக்ஸான் இவியைப் போலவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே உள்ள கார் மாடல்களுக்கு காத்திருக்கலாமா? வேண்டாமா? என்கிற கேள்வியும் சந்தேகமும் உங்களுக்கு எழும்பியிருக்கக் கூடும். மேலே பார்த்த அனைத்தும் காத்திருக்க ஒர்த்தான கார் மாடல்கள் ஆகும். இதனால்தான் இவற்றிற்கு இந்த பதிவில் முக்கியத்துவம் கொடுத்து, அவை பற்றிய தகவலை வழங்கி இருக்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 17, 2023, 5:00 [IST]
English summary
Here is list of car s it will launch within next 3 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+