2023ம் ஆண்டில் மாருதி சுஸுகி இத்தனை கார்களை அறிமுகம் செஞ்சுதா!! இன்னோவாவின் காப்பி வந்ததும் இந்த ஆண்டுலதான்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் சென்ற ஆண்டுகளைப் போலவே நடப்பு 2023 ஆம் ஆண்டிலும் புதுமுக வாகனங்கள் சிலவற்றை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்தியாவை அலங்கரிக்கும் விதமாகவும், இந்தியர்களுக்கு விருந்தளிக்கும் நோக்கிலும் அது சில தரமான கார் அறிமுக சம்பவங்களை நிகழ்த்தியது.
அதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, நடப்பு 2023 ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்திய புது முக கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி (Maruti Suzuki Grand Vitara CNG): மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா கார் மாடலை 2022 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்துவிட்டது. ஆனால், இதன் சிஎன்ஜி வெர்ஷனை அப்போது விற்பனைக்குக் கொண்டு வரவில்லை.
ஆனாலும், இதன் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் பலமாக அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நிலையிலேயே 2023 ஆம் ஆண்டிற்கான கிஃப்டாக கிராண்ட் விட்டாராவின் சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2023 ஜனவரி மாத்திலேயே இதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது மாருதி சுஸுகி.

அறிமுகமாக இதற்கு ரூ. 12.85 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. இது எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும். இந்த சிஎன்ஜி கார் ஒரு கிலோ சிஎன்ஜி-க்கே 26.6 கிமீ மைலேஜை வழங்கும். இந்த சூப்பரான மைலேஜிற்காக நெக்ஸ்ட் ஜென் கே சீரிஸ் 1.5 லிட்டர், டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என ரெண்டிலும் இயங்கும். ஆனால், பெட்ரோலில் இயங்கும்போது 74 kW பவரை வெளியேற்றும். இது 100.61 பிஎஸ் பவருக்கு இணையானது ஆகும். இதேபோல், 136 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். ஆனால், சிஎன்ஜியில் இயங்கும்போது இதே மோட்டார் சற்று குறைவான பவராக 87.83 பிஎஸ் பவரையும், 121.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG): மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவிற்கான இரண்டாவது சிஎன்ஜி கார் மாடலாக பிரெஸ்ஸா சிஎன்ஜி-யை விற்பனைக்குக் களமிறக்கியது. இதன் அறிமுகம் மார்ச் 2023-லேயே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், பிரெஸ்ஸாலின் பெட்ரோல் ஆப்ஷன் இந்திய சந்தையில் 2022இல் இருந்தே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ.9.14 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): உலக புகழ்பெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2023ஜனவரியில் இந்தியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே மாருதி சுஸுகி அதன் ஃப்ரான்க்ஸ் காரை விற்பனைக்குக் களமிறக்கியது. ஆனால், விற்பனைக்கான அறிமுகமானது 2023 ஏப்ரலிலேயே அரங்கேறியது. இதற்கு அறிமுக விலையாக ரூ.7.46 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பலினோ கார் மாடலின் கிராஸோவர்ரக கார் மாடலே இதுவாகும்.

மாருதி சுஸுகி ஜிம்னி 5 டோர் (Maruti Suzuki Jimny 5 Door): இந்தியாவில் மஹிந்திரா தார் கார் மாடலுக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டதே ஜிம்னி ஆகும். நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த இந்த கார் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ 2023-லேயே வெளியீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜூன் மாதத்தில் அக்கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ. 12.74 லட்சம் ஆகும். அதேவேளையில், இப்போது இந்த காருக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ரூ. 10.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும்.

இது குறுகிய கால சலுகை ஆகும். இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே இந்த மலிவு விலை சலுகை விலை பொருந்தும். ஏற்கனவே இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் மாருதி சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது.
மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto): டொயோட்டா இன்னோவா கார் மாடலின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனே இன்விக்டோ ஆகும். இந்த கார் மாடல் கடந்த ஜூலை மாதத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 24.79 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை அலங்கரிக்கும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் பலதரப்பட்ட கார் மாடல்களை இந்த 2023 ஆம் ஆண்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதேபோல், இன்னும் பல தயாரிப்புகளை வரும் ஆண்டிலும் அது விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ஃபேஸ்லிஃப்ட் வேகன்ஆர் மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனங்களும் 2024 இல் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









