சன்ரூஃப் வச்ச சிஎன்ஜி காரை வாங்கணுமா! பெஸ்டா 4 கார்கள் இந்தியால கிடைக்குது.. அவற்றோட விலை எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு டிமாண்ட் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றைக் காட்டிலும் சிஎன்ஜி மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பதாலும், அதிக மைலேஜை வழங்குவதாலும் சிஎன்ஜி வாகனங்களுக்கு நாட்டில் வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இந்த பிரிவிலும் மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் இவர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது.
இந்த இரண்டு நிறுவனங்கள்தான் மிக தாராளமாக சிஎன்ஜி தேர்வுகளை தங்களின் தயாரிப்புகளில் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அடுத்தபடியாக ஹூண்டாய் நிறுவனமும் இந்தியாவின் சிஎன்ஜி கார் தாகத்தைத் தீர்த்து வைக்கும் விதமாக சிஎன்ஜி வசதிக் கொண்ட கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த மூன்று நிறுவனங்களுக்கும் இடையில்தான் மிகப் பெரிய போட்டி சிஎன்ஜி கார் பிரிவில் நிலவிக் கொண்டிருக்கின்றது.

இவர்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் ஈர்க்கும் விதமாக சிறப்பு வசதிகளை தங்களின் சிஎன்ஜி தேர்வுகளிலும் மிக தாராளமாக வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் சிங்கிள் பேன் சன்ரூஃப் வசதியையும் இந்த நிறுவனங்கள் தங்களின் சிஎன்ஜி கார்களில் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் டாப் 4 சன்ரூஃப் வசதிக் கொண்ட சிஎன்ஜி கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG): இந்தியாவின் மிக சிறந்த பிரீமியம் வசதிகள் கொண்ட சிஎன்ஜி கார் மாடலாக அல்ட்ராஸ் இருக்கின்றது. இந்த கார் மாடலின் மிட்-ஸ்பெக் மாடலான எக்ஸ்எம்-பிளஸ் (எஸ்) தேர்விலேயே சன்ரூஃப் வசதியை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த தேர்வின் விலை ரூ. 8.85 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஏர் பேக், ரியர் பார்க்கிங் கேமிரா மற்றும் கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்ச:ங்களை இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கிக் கொண்டிருக்கின்றது. ட்வின் சிலிண்டர் வசதியை இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
டாட பஞ்ச் சிஎன்ஜி (Tata Punch CNG): இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக டாடாவின் பஞ்ச் இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலிலும் டாடா சிஎன்ஜி தேர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்துடன் சன்ரூஃப் வசதியையும் இந்த காரில் டாடா வழங்குகின்றது. அக்காம்ப்ளிஷ்டு டேசில் எஸ் தேர்விலேயே இந்த வசதியை அது வழங்குகின்றது. இதன் விலை ரூ.9.68லட்சம் ஆகும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி (Hyundai Exter CNG): டாடா பஞ்ச் கார் மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட கார் மாடலே ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகும். இதன் எஸ்எக்ஸ் தேர்விலேயே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 9.06 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இந்த காரில் சன்ரூஃப் வசதி உடன் இன்னும் பல பிரீமியம் தர அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர இன்னும் பல நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் பஞ்சிற்கு போட்டி அளிக்கும் விதமாக ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Brezza CNG): மாருதி சுஸுகியின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா இருக்கின்றது. இதன் இசட்எக்ஸ்ஐ வேரியண்டிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 12 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த சிஎன்ஜி காரில் கூடுதல் கவர்ச்சி அம்சங்களாக 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 6 ஸ்பீக்கர்கள் ஆர்கேமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, பன்முக ஏர் பேக் மற்றும் பார்க்கிங் கேமிரா என ஏகப்பட்ட அம்சங்கள் பிரெஸ்ஸா சிஎன்ஜியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இந்த கார்களை ஊக்குவித்துக் கொண்டிருப்பதன் இதன் வரவேற்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேவேளையில், சிஎன்ஜி காரில் அதிகம் மைலேஜை பெற முடியும் என்பதும் இந்தியர்கள் அதிகம் அந்த காரை அதிகம் விரும்புவதற்கு காரணமாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









