2023ல் விற்பனைக்கு வந்த அதிகம் மைலேஜ் தரும் கார்களின் லிஸ்ட்! 23கிமீ மைலேஜ் தரும் காரெல்லாம் அறிமுகமாயிருக்கு!

இந்தியர்கள் மிகப் பெரிய மைலேஜ் விரும்பிகள் ஆவர். இதன் விளைவாக தற்போது இந்தியாவில் அதிகம் மைலேஜ் தரும் கார்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. வீரர்களின் அணிவகுப்பைபோல வரிசையாக அவை படையெடுத்த வண்ணமும் இருக்கின்றன. குறிப்பாக, நடப்பு 2023ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்கள் விற்பனைக்கு களமிறங்கி இருக்கின்றன.

இவற்றில் ஆக சிறந்த மற்றும் மிக மிக அதிகம் மைலேஜ் தரும் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, நடப்பாண்டில் விற்பனைக்கு வந்த அதிகம் மைலேஜ் தரும் கார்களின் லிஸ்டையே காண உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Maruti suzuki invicto

மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto): மாருதி சுஸுகி நிறுவனம் டொயோட்டா உடனான கூட்டணியின் அடிப்படையில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்த கார் மாடலே இன்விக்டோ ஆகும். இது நம்மில் பலர் அறிந்த தகவல் ஆகும். அதேவேளையில், இது என்ன மாதிரியான மைலேஜை வழங்கும் என்பதை நம்மில் பலருக்கு தெரியவில்லை.

இந்த கார் 23.24 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும். டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross)ன் ரீ-பேட்ஜ் மாடலே இது ஆகும். இந்த காரில் ஒரே நேரத்தில் சுமார் 52 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும்.

Hyundai verna

இவ்வாறு முழுமையாக நிரப்பும் பட்சத்தில் மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் சுமார் 1100 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி இந்த கார் ரூ. 24.82 லட்சம் தொடங்கி ரூ. 28.42 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): மாருதி சுஸுகி இன்விக்டோவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நடப்பு 2023 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலாக ஹூண்டாய் வெர்னா காட்சியளிக்கின்றது. இது ஓர் லிட்டர் பெட்ரோலுக்கு 18.60 கிமீ முதல் 20.6 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

Hyundai exter

இந்த காரில் லெவல் 2அடாஸ் அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இது பாதுகாப்பான பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும். இந்த காரில் ஒரு வழக்கமான பெட்ரோல் மற்றும் டர்போ எஞ்சின் தேர்வே வழங்கப்படுகின்றது. இது ஓர் புதிய தலைமுறை வெர்ஷன் ஆகும். இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, தொழில்நுட்ப வசதியை மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நல்ல வரவேற்பை அது பெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆண்டில் மற்றுமொரு அதிகம் மைலேஜ் தரும் காரையும் களமிறக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதுவே எக்ஸ்டர் ஆகும். இது ஒரு முழு சார்ஜில் 19.20 கிமீ தொடங்கி 27.10 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்தியாவின் பட்ஜெட் விலை கார் மாடல்களில் ஒன்றாகவும் எக்ஸ்டர் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 6 லட்சம் ஆகும்.

Kia seltos

சிஎன்ஜி தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அது அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 27.10 கிமீ வரையில் மைலேஜ் தரும். டாடா மோட்டார்ஸின் மலிவு விலை கார் மாடலான பஞ்ச்-க்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் மாடலே இது ஆகும். இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கியா செல்டோஸ் (Kia Seltos): இந்த கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை லிட்டர் ஒன்றுக்கே 17 கிமீ முதல் 17.7 கிமீ வரையில் மைலேஜ் தரும். சமீபத்திலேயே இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கியா இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்யூவி கார் மாடல்களில் இதுவும் ஒன்றே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Honda elevate

ஹோண்டா எலிவேட் (Honda Elevate): இந்தியாவில் இந்த ஆண்டில் விற்பனைக்கு அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் இந்த காரே கடைசி இடத்தைப் பிடித்து இருக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 15.31 கிமீ தொடங்கி 16.92 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த கார் ரூ. 11.00 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மிகப் பெரிய மைலேஜ் விரும்பிகள் ஆவார்கள். இதனால்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் மைலேஜ் தரும் வாகனங்களை இந்தியாவில் அதிகளவில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாகவே நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையில் அதிகம் மைலேஜ் தரும் கார்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, December 29, 2023, 16:28 [IST]
English summary
Here is list of high mileage cars launched in india in 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X