உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் எது தெரியுமா? இந்த காரை நம்ம ஊரு அம்பானியே வாங்க யோசிப்பாரு!
இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களாக சென்னை தொழிலதிபர் பாஷ்யம் யுவராஜ் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே (Rolly Royce Spectre)-வும் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் விஎஸ் ரெட்டி வைத்திருக்கும் பென்ட்லீ முஸ்லேன் இடபிள்யூ சென்டனரி எடிசன் (Bentley Mulsanne EWB Centenary Edition) கார்களும் அறியப்படுகின்றன.
இதில் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே-வின் விலை 11 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். அதேவேளையில், முஸ்லேன் இடபிள்யூ சென்டனரி எடிசன் காரின் இந்திய மதிப்பு ரூ. 14 கோடிகள் என கூறப்படுகின்றுது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதில், முஸ்லேன் இடபிள்யூ சென்டனரி எடிசன் அம்பானி வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையைவிட மிக அதிகம் ஆகும்.

இதுமாதிரியான ஆடம்பர கார்களையே இந்தியாவில் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தி வரும்நிலையில், இதைவிட பலமடங்கு அதிக விலைக் கொண்ட கார்களும் இந்த உலகில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்றாக இருக்கின்றது. சொல்லப்போனால் இந்த உலகில் 233.39 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள்கூட விற்பனையில் உள்ளன.
இவ்வளவு உயரிய விலைக்கு விற்கப்படும் அளவிற்கு அப்படி என்ன கார் என்று தானே கேக்குறீங்க. அதேவேளையில், இதைபோலவே இன்னும் பல அதிக விலைக் கொண்ட கார்களும் இந்த உலகில் விற்பனையில் இருக்கின்றன. அவை எவை?, அவற்றின் விலை எவ்வளவு என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் (Rolls Royce Boat Tail): இந்த காரின் விலையே 233.39 கோடிகள் ஆகும். இந்த உலகத்திலேயே மிக மிக அதிக விலையைக் கொண்ட காரும் இதுவே ஆகும். கடந்த 2021 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி அன்றே இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
நான்கு பேர் வரை இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும். மேலும், இந்த காரில் சின்ன பார்ட்டியையேக் கொண்டாடிக் கொள்வதற்கான வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. பெரிய குடை, குட்டி குளிர்சாதன பெட்டி, பானங்களை தாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக மர மேசைகள் என ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை இந்த கார் தாங்கி இருக்கின்றது.
இதேபோல், இன்டீரியரும் மிக மிக அதிக லக்சூரி அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. மற்ற ரோல்ஸ் ராய்ஸ் காரைக் காட்டிலும் இதில் சொகுசு வசதிகளும், தொழில்நுட்ப வசதிகளும் மிக மிக அதிகம் ஆகும். ஆகையால், இந்த காரில் பயணிக்கும்போது கப்பலில் மிதக்கும் அனுபவமே நமக்கு கிடைக்கும்.
புகாட்டி லா வோயர் நோய்ரே (Bugatti La Voiture Noire): இந்த கார் அறிமுகமான 2019 மார்ச் மாதத்தில் ஆகும். இந்த உலகின் இரண்டாவது மிகவும் அதிக விலைக் கொண்ட கார் மாடல் இதுவாகும். மேலும், அதிக வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர் வகை கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது.
இந்த காரில் அதிக பவர்ஃபுல் குவாட் டர்போ 8 லிட்டர் டபிள்யூ16 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் 1,479 குதிரை திறனை வெளியேற்றக் கூடியது ஆகும். மேலும், இதனால் 1,600 என்எம் டார்க் வரை வெளியேற்ற முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கியதே இந்த கார் மாடல் ஆகும்.
குறிப்பாக, புகாட்டி எனும் ஒளிரும் இலுமினிடேட்டர் காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது தவிர, லக்சூரி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரில் மிக மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய பலதரப்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த காரின் விலை ரூ. 155.80 கோடிகள் ஆகும்.
பகானி ஜோன்டா எச்பி பார்செட்டா (Pagani Zonda HP Barchetta): இந்த கார் இந்த உலகில் கடந்த 2017 ஆகஸ்டு மாதத்தில் இருந்து விற்பனையில் இருக்கின்றது. இதன் விலை ரூ. 146.64 கோடி ஆகும். இந்த கார் மாடல் ஒட்டுமொத்தமாகவே 3 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதில் ஒன்றை, ஹொராசியோ பகானிக்கே ஒதுக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. அவ்வளவு நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட சூப்பர் காரே இது ஆகும்.
எஸ்பி ஆட்டோமோட்டிவ் சாவோஸ் (SP Automotive Chaos): பார்க்கவே மிரட்டலாக இருக்கும் சூப்பர் கார் மாடலே எஸ்பி ஆட்டோமோட்டிவ் சாவோஸ் ஆகும். இந்த காரின் விலை ரூ.119.98 கோடி ஆகும். இந்த காரில் 2,048 குதிரை திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. குவாட் டர்போ வி10 எஞ்சினே இந்த காரில் பயன்டுத்தப்பட்டு இருக்கின்றது. இது வெறும் 1.55 செகண்டுகளிலேயே 0-100கிமீ வேகத்தை அது எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வெப்டெயில் (Rolls Royce Sweptail): உலகின் அதிக விலைக் கொண்ட டாப் ஐந்து கார் மாடல்களில் பட்டியில் முதல் இடத்தையும், கடைசி இடத்தையும் ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்பே இடம் பிடித்திருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸின் இந்த ஸ்வெப்டெயில் மாடலின் இந்திய மதிப்பு ரூ. 108.31 கோடி ஆகும். விலையில் மட்டுமில்லைங்க அழகிலும் மிக சிறந்த ரோல்ஸ் ராய்ஸ் காராக இது காட்சியளிக்கின்றது.
மேலே பார்த்த இந்த கார் மாடல்கள் மட்டுமில்லைங்க இன்னும் பல கார்கள் மிக மிக அதிக விலையில் இந்த உலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. புகாட்டி சென்டோடைசி (Bugatti Centodieci) ரூ. 74.98 கோடிக்கும், மெர்சிடிஸ் மேபேக் எக்ஸிலெரோ (Mercedes Maybach Exelero) ரூ. 66.65 கோடிக்கும் விற்கப்படுகின்றது.
இந்த கார்களுக்கு அடுத்தபடியாக, பகானி ஹுவேரா கோடலுங்கா (Pagani Huayra Codalunga) ரூ. 61.63 கோடிக்கும், புகாட்டி டிவோ (Bugatti Divo) ரூ. 49.99 கோடிக்கும், புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் 300 பிளஸ் (Bugatti Chiron Super Sport 300) ரூ. 47.49 கோடிக்கும் என மிக மிக அதிக விலையில் விற்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அளவு அதிக விலைக் கொண்ட காரை யாருங்க வாங்குவாங்க என்று தானே கேட்குறீங்க, இதை வாங்கவும் உலக பணக்காரர்கள் பலர் தயாராக இருக்கின்றனர். சொல்லப்போனால், இதுமாதிரியான கார்களை வாங்க கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற கார் ஆர்வலர்கள் மத்தியில் மிக பெரிய போட்டியே நிலவிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








