பேஸ்ட், சின்ன துணி துண்டு இருந்தா போதும்.. காருல இருக்க ஸ்கிராட்சை போக வச்சிடலாம்.. ஸ்கிராட்சை நீக்க டிப்ஸ்!
வாகனங்களை பழையதுபோல் காட்சியளிக்கச் செய்வதில் ஸ்கிராட்சு (Scratches)கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இது எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நம்முடைய கார்களில் ஏற்படலாம். இது அதிக அளவில் வாகனங்களில் ஏற்படும் எனில் அந்த வாகனம் புதியதாக இருந்தாலும் அதிக வயதனாதைபோல் தென்படும்.
எனவேதான் வாகனங்களில் ஏற்படும் ஸ்கிராட்ச் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. குறிப்பாக சிறிய ஸ்கிராட்ச் என்றாலும் அதை உடனடியாக சரி செய்துவிட வேண்டும் என கூறப்படுகின்றது. ரெகுலராக சாலையோர மரத்தடியில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்பட்சத்தில் சுலபமாக வாகனங்களில் ஸ்கிராட்சுகள் ஏற்பட்டு விடும்.

மர இலைகள், சருகுகள் மற்றும் தூசிகளால்கூட வாகனங்களில் ஸ்கிராட்சுகள் ஏற்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கும்போது பிற வாகனங்கள் வந்து நம் வாகனங்கல் மீது மோதுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். இது மிகப் பெரிய சேதம் அல்லது மிகப் பெரிய ஸ்கிராட்சுகளுக்கு வழிவகுக்கும்.
இந்த மாதிரியான சூழலைக் கையாள்வதற்கான சில எளிய வழிமுறைகளையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, வாகனங்களில் ஏற்படும் சிறிய மற்றும் சற்று பெரிய ஸ்கிராட்சுகளை போக்க என்ன எல்லாம் செய்யலாம் என்பது பற்றிய வழிக்காட்டுதல்களையே வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஸ்கிராட்ச் மற்றும் பெயிண்ட் பூச்சு பற்றிய சுருக்கமான விபரம்: வாகன உற்பத்தி நிறுவனம் காரை ஒரே கோட்டிங்கில் பெயிண்ட் செய்து முடித்துவிடாது. பல லேயர்களில் கார் மீது பெயிண்டை அது பூசும். குறிப்பாக, பெயிண்ட் மிக ஸ்ட்ராண்டாக நிற்க வேண்டும் என்பதற்காக காரின் ஸ்டீல் அல்லது ஃபைபர் பேனல்கள் மீது பெயிண்டிற்கு முன்னர், பெயிண்டை தாங்கி நிற்கும் கோட்டிங்கே முதலில் பூசப்படும்.
எனவேதான் ஸ்கிராட்ச் விழுந்த உடன் காரின் அடிப்பகுதி தெரிவதில்லை. சில நேரங்களில் மட்டுமே அதன் அடிப்பகுதி வரை தெரியும். இத்தகைய ஸ்கிராட்சுகளை சரி செய்ய வேண்டும் எனில் அதிக தொகையை செலவழிக்க வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், லேசான ஸ்கிராட்சுகளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டி இருக்காது. மிகவும் சுலபமாகவும் அதை சரி செய்துவிட முடியும். இந்த சுலபமான வழிகளையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

பல் விளக்கும் பேஸ்ட் (Toothpaste Method): இதைக் கொண்டு பெயிண்ட் ஸ்கிராட்சை சரி செய்வது எப்படினு தானே கேக்குறீங்க.. ஸ்கிராட்சான இடத்தில் மிக சிறிய அளவு பேஸ்டை தடவிக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் சுத்தமான மைக்ரோ ஃபைபர் துணியைக் கொண்டு அந்த பகுதியை தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் இழந்து பெயிண்டை மீட்டெடுக்க முடியும். அதாவது ஸ்கிராட்ச் மறைந்துவிடும். வட்ட வடிவத்தில் பேஸ்டை தேய்க்க வேண்டும்.

ஸ்கிராட்ச் ரிமூவ் செய்யும் பேனா (Scratch Remover Pen): ஸ்கிராட்சை ரிமூவ் செய்யும் பேனா தற்போது சந்தையில் மிகவும் தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பேனாவை ஸ்கிராட்ச் ஆன இடத்தில் வைத்து எழுதும்பட்சத்தில் அந்த ஸ்கிராட்ச் மறைந்து நிறம் மீட்டெடுக்கப்படும். ஸ்கிராட்ச் ரிமூவர் பேனாவில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு திரவம் இந்த வேலையை அசால்டாக செய்து முடிக்கும்.

பாலிஷ் மற்றும் வேக்ஸ் (Polish & Wax): வாகனத்தை தொடர்ச்சியாக பாலிஷ் மற்றும் வேக்ஸ் செய்வதன் வாயிலாக வாகனத்தை எப்போதும் புதிதுபோல் வைத்திருக்க முடியும். குறிப்பாக, ஸ்கிராட்சுகள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அதனை கணிசமான அளவு மறைக்கவும் முடியும். அதேவேளையில், இந்த பாலிஷ் கெமிக்கல்களை ஸ்கிராட்ச் உள்ள பகுதியில் பயன்படுத்தும்போது அதிக அழுத்தக் கொடுக்கக் கூடாது. அதேவேளையில், வட்ட வடிவிலேயே அங்கு தேய்க்க வேண்டும்.
ஸ்கிராட்ச் உள்ள பகுதியில் தேய்த்தல்: சில வாகன டீடெய்லிங் நிறுவனங்கள் ரப்பிங் எனும் கருவியைப் பயன்படுத்தி சிராய்ப்புகளை சரி செய்து தருகின்றன. மிகக் குறைவான கட்டணத்தில் இந்த சேவையை நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதன் வாயிலாக சில ஆழமான ஸ்கிராட்சுகளும் சரி செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், வாகனத்தின் பளபளப்பு தன்மையும் இதன் வாயிலாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த சில வேலைகளை வீட்டிலேயே வைத்து செய்து விட முடியும். பெரிய அளவில் செலவும் ஆகாது. அதேவேளையில், காரின் பெயிண்ட் மற்றும் புதிய தன்மைகை காக்க வேக்ஸிங், பாலிஷிங் மற்றும் பிபிஎஃப் கோட்டிங் உள்ளிட்ட வழிகளை ஃபாலோ செய்யலாம். இதன் வாயிலாகவும் பெயிண்ட் மற்றும் காரின் புதுத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









