குடும்ப காரை காப்பாற்ற கோர்ட் வாசல் வரை சென்ற பாட்டி! கடைசில என்ன நடந்துச்சு தெரியுமா?

குடும்ப பாரம்பரிய காரை உடைக்க வேண்டாம் என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது என்ன குடும்ப கார்? அதை ஏன் உடைக்க வேண்டும்? இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள காற்று மாசுவை குறைக்க வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த பாலிசியின்படி 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை எல்லாம் கட்டாயம் ஸ்கிராப் செய்ய வேண்டும் என முடிவு செய்தது. இதனால் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் 15 ஆண்டுகள் பழமையான வாகனத்தை முழுவதுமாக ஸ்கிராப் செய்து வருகின்றனர்.

Family Heritage Car Scrapping

இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த சுஷ்மா பிரசாத் என்ற மூதாட்டி டேவூ மாடீஸ் என்ற காரை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த கார் சுஷ்மா பிரசாத்தின் தயார் அவரது பெயரில் வாங்கி சுஷ்மாவிற்கு பதிலளித்துள்ளார். தனது தயார் நினைவாக இந்தக்காரை அவர் பயன்படுத்தி வந்துள்ளது. இது பழைய காராக இருந்தாலும் இதை முறையாக பராமரித்துப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த காரை அவர் தனது குடும்ப பாரம்பரிய காராக நினைத்துப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்கிராப்பிங் பாலிசியின் கீழ் டில்லி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இந்த காரை பறிமுதல் செய்து ஸ்கிராப் செய்ய அனுப்பினர். ஆனால் சுஷ்மாவிற்கு இந்த காரை ஸ்கிராப் செய்ய விரும்பவில்லை. உடனடியாக அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தனது காரை ஸ்கிராப் செய்யத் தடை விதத்து உத்தரவிடக் கோரி மனு செய்தார்.

Family Heritage Car Scrapping

இந்த மனுவை நீதிபதி மனோஜ் ஓஹ்ரி என்பவர் விசாரித்தார். இந்த மனுவில் சுஷ்மா தனது கார் குடும்ப பாரம்பரிய கார் என்றும் தனது தாய் நினைவாக வைத்திருப்பதாகவும், தனது பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகளிடம் இந்த குடும்ப பாரம்பரியத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும்,

அரசின் கொள்கைக்கு ஏற்ப தனது காரை எலெக்ட்ரிக் காராக மாற்றும் வழிமுறை குறித்து யோசித்து வருவதாகவும் அதற்குள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் காரை பறிமுதல் செய்துவிட்டதாகவும், தனது காரை ஸ்கிராப் செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரி அவரது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி இவரது மாடீஸ் காரை ஸ்கிராப் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவிற்குப் பதிலளிக்கும்படி டில்லி போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டார். மேலும் சுஷ்மா தனது காரை விரைவில் ரெட்ரோ ஃபிட்டிங்கின் மூலம் எலெக்ட்ரிக் காராக மாற்றவும், அதுவரை இவர் இந்த காரை சாலையில் ஓட்டவோ அல்லது பொது இடத்தில் பார்க் செய்யவோ கூடாது என உத்தரவிட்டார்.

மேலும் இது இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரது உரிமை, அவர்கள் எந்த காரை பயன்படுத்தவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அரசின் கொள்கையின்படி இந்த கார் இருந்தால் மட்டும் போதும். அதன்படி பார்த்தால் சுஷ்மாவிற்கு தனது காரை எலெக்ட்ரிக் காராக மாற்ற முழு உரிமை உள்ளது அதனால் அவரது வாகனத்தை டிஸ்மேன்டில் செய்யவோ அல்லது ஸ்கிராப் செய்யவோ கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடும்ப பாரம்பரியம் காரணமாக ஒரு காரை ஸ்கிராப் செய்வதைத் தடை செய்து ஹைகோர்ட் போட்ட உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாகன ஸ்கிராப் பாலிசி என்பது மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் இருக்கவேண்டும். இதனால் மக்களின் செண்டிமென்ட் பாதிக்கப்படக் கூடாது. அவர்களுக்கு மாற்று வழிக்கு மாறும் வாய்ப்பை நிச்சயம் அரசு வழங்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 6, 2023, 12:40 [IST]
English summary
High court holds family heritage car scrappingq
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+