மாருதி காரை கம்மியான விலையில் வாங்கும் காலம் மலை ஏறி போச்சு!! இப்போ இந்த காருக்கு தான் டிமெண்ட்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் இன்விக்டோ காரின் டாப் வேரியண்ட்டை தான் அதிக மக்கள் வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை காட்டிலும் இது எந்த அளவிற்கு அதிகம் என்பதையும், இந்த மாருதி காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கார் இன்விக்டோ ஆகும். டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாருதி கார் இன்விக்டோ ஆகும். இந்தியாவில் டொயோட்டா இன்னோவா கார்களுக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்பதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.

demand for maruti suzuki invicto

அதனால்தான், அதே தைரியத்தில் மாருதி சுஸுகியும் இன்விக்டோ என்ற பெயரில் ஒரு காரை களமிறக்கியது. மாருதி கார்களை வாங்கவே அதிக பேர் விரும்புவர் என்பது நமக்கு தெரியும். அந்த வரிசையில், இன்விக்டோ கார்களையும் கடந்த அக்டோபரில் அதிக பேர் வாங்கியுள்ளனர். குறிப்பாக, மாருதி இன்விக்டோ காரின் டாப் ஆல்ஃபா பிளஸ் வேரியண்ட்டை தான் அதிக பேர் வாங்கியுள்ளனர்.

மாருதி சுஸுகி இன்விக்டோ ஆல்ஃபா பிளஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.28.42 லட்சமாக உள்ளது. இந்த வேரியண்ட்டை வெறும் 7-இருக்கை ஆப்ஷனில் மட்டுமே வாங்க முடியும். ஒவ்வொரு மாதத்திலும் 500- 700 இன்விக்டோ கார்களை தயாரிப்பதற்கு தேவையான உதிரி பாகங்களை பெறுவதாக கூறும் மாருதி சுஸுகி நிறுவனம், இப்போது வரையில் 5,000க்கும் அதிமான ஆர்டர்களை கிடப்பில் வைத்துள்ளதாக தெரிவிக்கிறது.

demand for maruti suzuki invicto

இதனால், மாருதி சுஸுகி இன்விக்டோ காரை முன்பதிவு செய்துவிட்டு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு 8இல் இருந்து 10 மாதங்கள் வரையில் தற்சமயம் உள்ளது. மறுப்பக்கம், மாருதி இன்விக்டோவின் ரீ-பேட்ஜ்டு வெர்சனான ஹைகிராஸின் சில குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு புக்கிங்குகளை ஏற்பதை தற்காலிகமாக டொயோட்டா நிறுவனம் நிறுத்தி உள்ளது.

இன்னோவா ஹைகிராஸின் டாப் வேரியண்ட்களான இசட்.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ் (ஆப்ஷ்னல்)-இன் முன்பதிவுகளை டொயோட்டா நிறுத்தி வைத்துள்ளது. ஏனெனில், இன்னோவா ஹைகிராஸின் இந்த டாப் வேரியண்ட்களை வாங்கிய பின்னர் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவானது சுமார் 15 மாதங்கள் வரையில் அதிகரித்ததை தொடர்ந்து புக்கிங்குகளை டொயோட்டா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

demand for maruti suzuki invicto

மிக சமீபத்தில், கடந்த 2023 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்விக்டோ ஆனது மாருதி சுஸுகியின் ஃப்ளாக்‌ஷிப் எஸ்யூவியாக விளங்குகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் மட்டுமே என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் உடன் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் சமீப கால தரமான தயாரிப்புகளுள் ஒன்று இன்விக்டோ ஆகும். மாருதி கார்களில் பொதுவாக விலை குறைவானவையே அதிகம் விற்பனையாகும். ஆனால், இன்விக்டோ காரின் டாப் வேரியண்ட்டை தான் மக்கள் அதிகமாக வாங்குவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் 500இல் இருந்து 700 இன்விக்டோ கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிவதாக, மாருதி சுஸுகி கூறுவது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 4, 2023, 10:51 [IST]
English summary
Highest demand for maruti suzuki invicto all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X