ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ2 தான் செலவு... பைக் மாதிரி மைலேஜ் தரும் இந்த கார் பத்தி தெரியுமா?

இந்திய மக்களுக்கு ஒரு வாகனத்தில் எது இருக்க வேண்டுமோ இல்லையோ அதிகமான மைலேஜ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். போக்குவரத்திற்கான செலவைக் குறைவாக்க வேண்டும் என்றால் அதிக மைலேஜ் தரும் வாகனங்களால் மட்டுமே முடியும். கிட்டத்தட்ட மாருதி நிறுவனம் இந்தியாவில் வெற்றி பெற்றதற்கும் இது மிகப்பெரிய காரணம்.

பெட்ரோலை விட சிஎன்ஜி கார் தான் அதிக மைலேஜ் தரும் அதாவது குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்கப் பயன்படும் ஒரு வாகனமாக இருக்கிறது. இப்படியாக இந்தியாவில் விற்பனையாகும் ஒரு பிரபல சிஎன்ஜி காரில் 1 கி.மீ பயணிக்க ரூ2 தான் செலவாகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதைக் காரை பற்றித்தான் காணப்போகிறோம்.

ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ2 தான் செலவு... பைக் மாதிரி மைலேஜ் தரும் இந்த கார் பத்தி தெரியுமா?

மாருதி நிறுவனத்தின் செலிரியோ சிஎன்ஜி கார் தான் இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி காராக இருக்கிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிஎன்ஜி மோடில் 56.7 பிஎஸ் பவரையும், 82 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினியில் ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ5.35 லட்சம் முதல் ரூ7.13 லட்சம் என்ற விலையில் 4 வேரியன்ட்களாக விற்பனையாகிறது. எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ+ ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இதில் சிஎன்ஜின ஆப்ஷன் விஎக்ஸ்ஐ வேரியன்டில் கிடைக்கிறது.

இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 35 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இன்று தமிழகத்தில் சிஎன்ஜி கேஸ் விலை ஒரு கிலோவிற்கு ரூ80 என்கிற வகிதத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் ரூ80 செலவில் 35 கி.மீ வரை பயணிக்க முடியும். அப்படி என்றால் ஒரு கி.மீ பயணிக்க ரூ2.2 மட்டுமே செலவாகிறது.

இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் கார் இல்லாமல், கம்பஷன் இன்ஜினில் இவ்வளவு மைலேஜ் தரும் கார் இது தான். கிட்டத்தட்ட ஒரு டூவீலரில் பயணிக்கும் செலவில் இந்த காரில் பயணிக்க முடியும். இதனால் தான் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த காரில் உள்ள அம்சங்கள் குறித்துக் காணலாம்

மாருதி செலிரியோ கார் ஒரு 5 சீட்டர் காராகும். இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 7 டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், ஸ்டியரிங் வீல் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல், பேசிவ் கீலெஸ் என்ட்ரி, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்,

டர்ன் இன்டிகேட்டர்கள், எலெக்ட்ரானிக் ஓஆர்விஎம், டூயல் ஏர்பேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார், ஆகிய அம்சங்கள் இருக்கிறது. மார்கெட்டில் இந்த கார் டாடா டியாகோ மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 2, 2023, 12:40 [IST]
English summary
Highest mileage cng car cost only 2 rupees per km Maruti Celerio CNG
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+