20 வருட பழைய ஆல்டோ காரில் சட்டசபைக்கு வந்த சிஎம்... என்னங்க இவ்ளோ எளிமையான வாழ்க்கைக்கு மாறிட்டாரு!

வார்டு கவுன்சிலர்களே இன்னோவா, ஃபார்ச்சூனர்னு 20-30 லட்ச ரூபா காருல கெத்தா வலம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் இங்கு ஓர் மாநிலத்தின் முதல் அமைச்சர் மிகவும் எளிமையான, அதுவும், மிக பழைமையான காரில் சட்டப் பேரவைக்கு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நம்ம ஊரு வார்டு கவுன்சிலர்களே 20-30 லட்ச ரூபா சொகுசு கார்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்ற சூழலில் ஓர் மாநிலத்தின் முதலமைச்சர் 20 ஆண்டுகள் பழைய மாருதி சுஸுகி ஆல்டோ காரில் சட்டப் பேரவைக்கு வந்து ஒட்டுமொத்த நாட்டையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார்.

முதலமைச்சர்

ஹிமாச்சல் மாநிலத்தின் முதலமைச்சரே 20 ஆண்டுகள் பழைய மற்றும் எளிமையான காரில் சட்டமன்றத்திற்கு வந்தவர் ஆவார். தன்னுடைய முதல் பட்ஜெட் தொடரில் கலந்துக் கொள்ளவே அவர் இந்த காரில் வந்திருக்கின்றார். நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகள் ஆடம்பரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார்களை பயன்படுத்திக் கொண்டிருக்க, மிக மிக எளிமையான காரில் வந்து மக்கள் மனதில் அவர் இடம் பிடித்திருக்கின்றார்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி, ஃபார்ச்சூனர் எஸ்யூவி அல்லது பிற சொகுசு கார்களே அரசியல்வாதிகளின் பிரதான வாகனமாக இருக்கின்றது. இந்த வாகனங்களிலேயே அரசியல்வாதிகளை பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே மிகவும் அசால்டாக பெரியளவில் பந்தா இன்றி இமாச்சல் முதலமைச்சர் ஆல்டோவில் வந்திருக்கின்றார்.

முதலமைச்சர்

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மாநில முதல்வர்களுக்கு பாதுகாப்பு பந்தோபஸ்து வழங்கப்படும். இதுவும் பெரியளவில் இன்றியே அவர் இமாச்சல் விதான் சபாவிற்கு அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் வந்திருக்கின்றார். தனது அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள ஓகோவரில் இருந்தே இந்த காரில்தான் அவர் வந்திருக்கின்றார்.

முதலமைச்சருடன் சேர்ந்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரோஹித் தாக்கூர் மற்றும் லாஹவுல்-ஸ்பிதி எம்எல்ஏவும் அந்த காரிலேயே வந்திருக்கின்றனர். முதலில் மாருதி சுஸுகி ஆல்டோவை நுழைவாயிலை நெருங்கியபோது அதிகாரிகள், அந்த காரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். பின்னர் உள்ளே இருப்பது சிஎம் என்பதை அறிந்த உடனே அதிகாரிகள் அந்த காரை முன்னேறி அனுமதித்தனர்.

முதலமைச்சர்

பொதுவாக, பாதுகாப்பு வீரர்களின் படை சூழ மிகவும் பிரமாண்ட காரிலேயே சிஎம் கான்வாய் விதான் சௌபாவிற்கும் வரும். இது இல்லாமல் வந்ததால் அதிகாரிகளே சற்று குழப்பமடைந்துவிட்டனர். இதன் விளைவாகவே முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு வந்த ஆல்டோ தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

மிகவும் எளிமையான வாழ்க்கைக்கு பெயர் போனவரே இமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு. இவர் பல நேரங்களில் பாதுகாப்பு வீரர்கள் இல்லாமலேயே பொதுமக்களுடன் கலந்துரையாடுவது, நடமாடுவது உள்ளிட்டவற்றை செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய எளிமைத் தன்மையை தன்னுடைய காரின் வாயிலாகவும் அவர் காண்பித்திருக்கின்றார்.

முதலமைச்சர்

ஓர் தொகுதி எம்எல்ஏ-வே விலையுயர்ந்த காரில் பயணிப்பதை பார்த்த நமக்கு இவரின் இந்த செயல் அதிக வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த ஆண்டு டிசம்பரிலேயே சுக்விந்தர் சிங் சுக்கு மாநிலத்தின் முதலமைச்சராக பதிவியேற்றார். இது அவரது முதல் சட்டசபை பட்ஜெட் ஆகும்.

20 ஆண்டுகள் பழைய மாருதி சுஸுகி ஆல்டோவில் அவர் தோன்றுவது இது முதல் முறையாகும். மக்கள் மனதில் தனி இடம் பிடிக்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் இதேபோல் வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மாற்று வாகனங்களில் சட்டப்பேரவைக்கு வந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

Source: News18 Virals

வழக்கமான பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களில் அமைச்சர்கள் வந்திருக்கின்றனர். மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதே இந்த செயலின் நோக்கமாகும். ஆனால், ஓர் மாநிலத்தின் முதலமைச்சர் சட்டசபைக்கு இவ்வளவு எளிமையான காரில் வருவது இதுவே முதல் முறையாகும். ஆகையால், முதலமைச்சரின் இந்த செயலை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர். இதுகுறித்த வீடியோக்களும், படங்களும் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 17:39 [IST]
English summary
Himachal cm uses 20 year old maruti alto to join state budget session
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X