மலையிலிருந்து தள்ளி விட்டு மோத விடுவார்கள்- கார் கிராஷ் டெஸ்டிற்கு பின்னால் இவ்வளவு விஷயங்களா?
ஒரு காருக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். கார் சாலையில் செல்லும் போது எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்தில் சிக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது என்கிற காரணத்திற்காகவே குறிப்பிட்ட கார்களை தேர்வு செய்யும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது. ஒரு கார் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை அறியச் சர்வதேச அளவில் கிராஷ் டெஸ்ட் செய்யப்படுகிறது.
தற்போது சர்வதேச அரங்கில் குலோபல் என்கேப், மற்றும் யூரோ என்கேப் என இரண்டு தனியார் ஏஜென்ஸிகள் கிராஷ் டெஸ்ட்களை செய்து வருகின்றன. இவை இரண்டும் மிகப் பிரபலமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பாரத் என்கேப் என்ற அமைப்பை ஏற்படுத்தவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் ஒரு கார் எந்தெந்த வகையில் எல்லாம் விபத்திற்குள்ளாக வாய்ப்புள்ளதோ அதையெல்லாம் உண்மையிலேயே ஒரு காரை மோத வைத்து அதில் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கிடுவார்கள்.

இந்த பாதிப்புக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண் அடிப்படையில் ஒரு காருக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும் மொத்தம் 5க்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்கை ஒரு கார் பெறுகிறது என்பதைப் பொருத்து அந்த கார் எவ்வளவு பாதுகாப்பான கார் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். 5க்கு 4,4.5 மற்றும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார்கள் எல்லாம் அதிக பாதுகாப்பான கார்கள் என விற்பனையாகிறது.
இப்படியாக ஒரு கார் கிராஷ்டெஸ்டிங்கில் ஈடுபடும் போது அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை அறிய காருக்குள் டம்மி பொம்மைகள் சென்சார்கள் ஆகியவற்றை வைத்துப் பாதிப்பை அளவீடு செய்கிறார்கள். இது எல்லாம் தற்போது உள்ள நடைமுறை ஆனால் இவ்வளவு தொழிற்நுட்பங்கள் வளர்ச்சியடைவதற்கு முன்னர் எப்படிகிராஷ் டெஸ்டிங் செய்திருப்பார்கள் என யோசித்துள்ளீர்கள்? அதைப் பற்றித் தான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.

வெளிநாடுகளில் 1850க்கு பிறகே வாகன பயன்பாடு அதிகமாக மாறிவிட்டது. இந்தியாவில் 1900த்திற் பிறகு தான் வாகன பயன்பாடு மிகவும் அதிகமாகத் துவங்கியது. ஆனால் அப்பொழுதெல்லாம் மக்கள் மனதில் கார்கள் எவ்வளவு பாதுகாப்பானது எனப் பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் மனதிற்குத் தோன்றாது. கார் என்பது ஒரு ஆடம்பர விஷயமாக மட்டுமே பார்க்கப்பட்டது.
அன்றைய காலத்தில் ஒரு காரை உருவாக்கி அதை வேண்டுமென்றே மோதவிட்டு டெஸ்ட் செய்ய வேண்டும் என்றால் நம்மை பெரிய பைத்தியக்காரன் என்று நினைத்தார்கள். ஆனால் இன்று அப்படியல்ல இந்த கிராஷ் டெஸ்டின் முடிவுகள் கார் வாங்கும் முடிவையே மாற்றும் வல்லமையைப் பெற்றுள்ளது. அப்படியென்றால் முதலில் கிராஷ் டெஸ்டிங் எப்பொழுது தோன்றியது? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

கடந்த 1924ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தாங்கள் உருவாக்கும் கார்களை டெஸ்ட் செய்து பார்க்க சுமார் 4 ஆயிம் ஏக்கர் பரப்பளவில் ஒரு டெஸ்டிங் மையத்தை உருவாக்கியது. இது தான் ஆட்டோமொபைல் துறையின் முதல் டெஸ்டிங் மையமாகும். இந்த மையத்தில் 1934ம் ஆண்டு அந்த மையத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த கார் மோதினால் எப்படியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர்கள் டெஸ்ட் செய்து பார்த்தனர். இது தான் உலகின் முதல் அதிகாரப்பூர்வ கிராஷ் டெஸ்டாக இருந்தது.
அதன் பின் மெர்சிடீஸ்- பென்ஸ் நிறுவனம் தான் இதற்கான கார் கிராஷ் டெஸ்டிற்கு ஒரு வடிவம் கொடுத்தது. 1959ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி அமெரிக்காவும், சோவியத் யூனியனும் விண்வெளியில் தன் பலத்தைக் காட்டப் போராடிக்கொண்டிருந்தது. அப்பொழுது பெடல் காஸ்ட்ரோ கியூபாவை கைப்பற்றியிருந்தார். அப்பொழுது தான் லண்டனில் முதல் மினி கார் அறிமுகமாகியிருந்தது. இந்த நேரத்தில் ஜெர்மனியில் பென்ஸ் நிறுவனம் தனது காரை கிராஷ் டெஸ்ட் செய்யத் தயாரானது.

இந்த டெஸ்டில் காரை வேகமாகக் கொண்டு வந்து ஒரு ஏத்த்தில் ஏற்றி காரை பறக்கவிட்டு டெஸ்ட் செய்ய வேண்டும். இதில் காரை யாரும் ஓட்ட முடியாது என்பதால் விமானத்தைக் கட்டியிழுக்க பயன்படும் கயிர் இழுக்கும் கருவியைக் கொண்டு வந்து காரில் கயிற்றைக் கட்டி வேகமாக இழுந்து காரை பறக்கவிட்டு டெஸ் செய்தனர். இதற்காக மெர்சிடீஸ் பென்ஸ் 190 என்ற கார் டெஸ்ட் செய்தனர்.
அடுத்த டெஸ்டிங்கில் காரை ஒரு 17 டன் எடை கொண்ட தடுப்பு மீது மோதவிட்டு டெஸ்ட் செய்யப்பட்டது. இதில் காரின் டிரைவர் பக்கம் உள்ள கதவு அகற்றப்பட்டது அப்பொழுது தான் பாதிப்புகள் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தூரத்தில் கேமராவை வைத்துப் பதிவு செய்யும் போது பதிவாகும் என்பதால் அந்த பதிவு செய்யப்பட்டது. காரில் பயணிகளின் எடைக்காக 3 பைகளில் மணலை நிரப்பி காரில் வைக்கப்பட்டது. டிரைவர் அமர்ந்திருந்த இடத்தில் டம்மி செட் செய்யப்பட்டது.
அடுத்து பல நிறுவனங்கள் இந்த கிராஷ் டெஸ்டிங்கை செய்ய துவங்கினர். பெரும்பாலும் ஒரு சிறிய மலை அல்லது குன்றின் மீது காரை ஏற்றி அங்கிருந்து காரை இறக்கிக் கொண்டு வந்து கார் வந்து கொண்டிருக்கும் போதே டிரைவர் காரிலிருந்து கீழே குதித்து பின்னர் காரை வேகமாகச் சுவரில் மோதவைப்பதே ஒரு கிராஷ் டெஸ்டாக நடந்தது.
சில நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய ஏற்கனவே இறந்தவர்களின் உடலைப் பயன்படுத்துவது, சிம்பன்ஸி குரங்குகள், பன்றிகள் ஆகிய விலங்குகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் டெஸ்ட் செய்தனர். இதன் மூலம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி ஸ்டிராங்கான காரை தயாரிப்பது என டெஸ்ட் செய்தனர். அந்த காலங்களில் சீட் பெல்ட் கூட கார்களில் கிடையாது.
ஏற்கனவே இறந்தவர்களின் உடல்களை இந்த டெஸ்டிற்கு ஒரு காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். கிராஷ் டெஸ்டிற்கு பிறகு அந்த உடலில் தலை, கை, கால், முதுகு என எங்க அடி ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்ய இதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்துள்ளது. இறந்த மனித உடல்களைப் பயன்படுத்தியதால் இந்த டெஸ்ட் எளிமையாகச் செய்ய முடியாது. இறந்தவரின் வயது, உயரம், எடை உள்ளிட்ட பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியது இருந்தது.
இந்நிலையில் 1952களில் சாமுவேல் என்பவர் விமான தயாரிப்பிற்காக டம்மிகளை முதன் முறையாகப் பயன்படுத்தினார். இந்நிலையில் சாலை விபத்துக்களைத் தடுக்க பல ஆய்வுகளுக்கு இந்த டம்மிகளை பயன்படுத்த ஐடியா பிறந்தது பின்னர் இது படிப்படியாக கார் கிராஷ் டெஸ்டில் டம்மி பயன்படுத்தப்படுகிறது. 1970களில்தான் இந்த டம்மியை கார் கிராஷ் டெஸ்டில் பயன்படுத்தினர். இன்று காரில் பல சென்சார்கள், கேமராக்கள், டம்மிகள் மூலம் ஏகப்பட்ட விஷயங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இது தான் கார் கிராஷ் டெஸ்டில் பின்னால் உள்ள வரலாறு. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









