கண்ணீருடன் விடைபெற்றது... எல்லாருக்கும் பிடிச்ச ஹோண்டா காரின் விற்பனை நிறுத்தம்... கண் கலங்கும் ரசிகர்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹோண்டா அமேஸ் (Honda Amaze). இது காம்பேக்ட் செடான் (Compact Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக அமேஸ் திகழ்ந்து வருகிறது.
இந்த சூழலில், ஹோண்டா அமேஸ் காரின் ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் சத்தமே இல்லாமல் அமேஸ் காரின் டீசல் (Diesel) இன்ஜின் மாடல் விற்பனையை நிறுத்தியுள்ளது. எனவே ஹோண்டா அமேஸ் கார் இனி பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன், ஹோண்டா அமேஸ் காரை வாங்கலாம் என திட்டமிட்டிருந்தவர்கள் இதனால் கவலையடைந்துள்ளனர்.

நல்ல இன்ஜின் ஆச்சே!
ஹோண்டா அமேஸ் காரில் வழங்கப்பட்டு வந்தது, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 99 பிஹெச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் ஆப்ஷன் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டது என்பதால், இனிமேல் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே ஹோண்டா அமேஸ் கார் கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஹெச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு!
ஹோண்டா அமேஸ் கார் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு, அதில் வழங்கப்பட்டு வரும் வசதிகளும் மிக முக்கியமான காரணம் ஆகும். டீசல் இன்ஜின் மாடல் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டிருந்தாலும், பெட்ரோல் இன்ஜின் மாடலில் தொடர்ந்து ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் குறிப்பிடத்தகுந்தவை.

இதுதவிர ஒருங்கிணைந்த பகல் நேர விளக்குகளுடன் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பனி விளக்குகள், எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மடித்து வைத்து கொள்ள கூடிய ஓஆர்விஎம்கள், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் ஆகிய வசதிகளும், ஹோண்டா அமேஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்திய சந்தையில் தொடர்ந்து ஹோண்டா அமேஸ் காரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிறது புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்!
ஹோண்டா நிறுவனம் அமேஸ் காரின் டீசல் மாடல் விற்பனையை நிறுத்தியிருந்தாலும், புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ஹோண்டா நிறுவனம் அடுத்து களமிறக்கவிருப்பது, மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் டீசர் (Teaser) புகைப்படத்தை ஹோண்டா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டீசர் புகைப்படம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை தூண்டியுள்ளது.
இந்திய சந்தையில் மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில், ஹோண்டா நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த புதிய காரில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








