ஓலா, உபேர் டிரைவர்கள் வேற வேலை இருந்தா இப்பவே தேடிக்கொள்ளுங்கள்! ஆப்பு வைக்க வருகிறது புது டெக்னாலஜி!
டிரைவர் இல்லாமல் இயங்கும் டாக்ஸி சேவையை கொண்டு வர தற்போது ஹோண்டா மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா மோட்டார் கம்பெனி மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஜப்பானில் க்ரூஸ் எல்எல்சி என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் தற்போது தானியங்கியாக இயங்கும் ஆட்டோமேட்டிக் வாகனங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி இந்நிறுவனம் டிரைவர் மற்றும் ஸ்டேரிங் வீல் இல்லாத வாகனங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இப்படியாக இந்த நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களை வரும் 2026 ஆம் ஆண்டிற்கு முன்னதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்தக் காரில் லெவல் 4 அடாஸ் சிஸ்டத்தை உட்பகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டாக்ஸி சேவையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் அடாஸ் தொழில்நுட்பம் லெவல் 4 கொண்ட காரை பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. ஆனால் அதிகபட்சமாக அந்த கார் 12 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சீனா அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆட்டோமேட்டிக் கார்கள் அதிக வேகத்திலும் அதிக பரப்பளவிலும் பயணிக்க அனுமதி உள்ளது.

இருந்தாலும் ஜப்பான் நாடு என்பது சிறிய ரக கார்களை விரும்பும் மக்களை கொண்ட நாடு என்பதால் அந்த நாட்டில் தானியங்கியாக டாக்ஸிகளை அறிமுகப்படுத்துவது எளிது என்பதால் இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து ஜப்பானில் இப்படியான தானியங்கி டாக்ஸிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 500 தானியங்கி கார்களை தயாரித்து அதை ஜப்பானின் டோக்கியோ பகுதியில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், பின்னர் அதை படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும், இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்நிறுவனம் தயாரிக்கும் காரில் ஆறு பேர் பயணிக்கக் கூடிய வகையில் சீட்களை கொண்டு உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்த காரில் டிரைவருக்கான தனி சீட்டோ, ஸ்டேரிங் வீல் கண்ட்ரோல்களோ எதுவுமே இருக்காது. அனைத்துமே தானியங்கி முறையில் மட்டுமே செயல்படும் வகையில் இந்த கார் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஒரு சோதனை முயற்சியாகவே செய்து வருகிறது.
இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால் இதை தங்களது பிரதான கார்களில் இன்ஸ்டால் செய்து அந்த கார்களை தானியங்கி கார்களாக மாற்றி கொண்டு வர இந்நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இன்னும் இரு ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையே மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது சர்வதேச மார்க்கெட்டில் தானியங்கி காராக டெஸ்லா நிறுவனம் தான் தனது காரை விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம் இந்த தானியங்கி கார் தயாரிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்றே சொல்லலாம். ஒரு சில பிரச்சினைகள் இருந்தாலும் பெரும்பாலும் எதிர்பார்த்த அளவுக்கு பிரச்சனை இல்லாமல் டெஸ்லா கார் சிறப்பாக ஃபெர்ஃபார்ம் செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தானியங்கி கார்கள் டாக்ஸி சேவைக்கு வருவதால் தற்போது ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் மூலம் டாக்ஸி ஓட்டும் டிரைவர்களுக்கும் தனியாக கார் சேவை வழங்கும் டிராவல்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும். அவர்கள் எல்லாம் வேலை இழக்க கூடிய சூழ்நிலை ஏற்படும் .ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தவிர்க்க முடியாது.


Click it and Unblock the Notifications









