சேர்த்து வச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ண நேரம் வந்துடுச்சு! ஹோண்டா கார்களுக்கு செம தள்ளுபடி அறிவிப்பு!
ஹோண்டா நிறுவனம் இந்த மே மாதம் தனது விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய கார்களுக்கு ரூ17 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கியுள்ளனர். இந்த தள்ளுபடி வரும் மே மாதம் 31ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என ஹேண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹோண்டா அமேஸ் காரை பொருத்தவரை மொத்தம் 17 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரூ4 ஆயிரம் வரை லாயல்டி போனஸ் மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ3 ஆயிரம் எனத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் ரூ6.99 லட்சம் முதல் ரூ9.60 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.

ஹோண்டா சிட்டி காரை பொருத்தவரை தற்போது 5ம் தலைமுறை கார் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு ரூ15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ6 ஆயிரம் எக்ஸ் சேஞ்ச் போனஸாகவும், லாயல்டி போனஸாக ரூ4 ஆயிரம் வரையிலும், கார்பரேட் தள்ளுபடியாக ரூ5 ஆயிரமும் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் ரூ11.49 லட்சம் முதல் ரூ15.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த தள்ளுபடி ஹோண்டாவின் சிட்டி ஹைபிரிட் கார்களுக்கு கிடையாது. மே மாதம் இந்நிறுவனத்தின் விற்பனையை உயர்த்த தீவிரமான முயற்சி செய்து வருகிறது. அதன் விளைவாகத் தான் இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியால் மே மாத விற்பனை மிகப்பெரிய வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹேண்டா நிறுவனம் சிட்டி மற்றும் அமேஸ் கார்களின் விற்பனையை அதிகரிக்க நீண்ட நாட்களாகத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த தள்ளுபடி அறிவிப்பு மிகப்பெரிய விற்பனையைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









