மசாஜ் செய்யும் இருக்கையை அந்த கார் பெற போகுதா! ஏற்கனவே விற்பனையில் மாஸ் பண்ண தொடங்கிருச்சு.. இதுல இது வேறையா!

ஹோண்டா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக எலிவேட் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். நீண்ட காலம் கழித்து ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்த எஸ்யூவி ரக கார் இது ஆகும். இந்த காரணத்தினாலேயே இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கொண்டிருக்கின்றது.

ஹோண்டா மீது இந்தியர்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் காரணமாகவும் அக்காருக்கு இந்திய எஸ்யூவி கார் விரும்பிகள் மத்தில் சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா நிறுவனம் முன்னதாக அந்த கார் மாடலில் வழங்க தவறிய சில அம்சங்களை சேர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Honda elevate ventilated and massage seats

ஹோண்டா நிறுவனம் இந்த எஸ்யூவி காரில் வேரியண்டிற்கு ஏற்ப சிறப்பம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக உயர் நிலை தேர்வில் நவீன தொழில்நுட்ப வசதியான அடாஸ் அம்சத்தைக்கூட வழங்கி இருக்கின்றது. இதுதவிர, பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், சன்ரூஃப் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற பலதரப்பட்ட அம்சங்களை ஹோண்டா நிறுவனம் இந்த எலிவேட் எஸ்யூவியின் உயர்நிலை தேர்வில் வாரி வழங்கி இருக்கின்றது.

ஆனால், வென்டிலேட் (Ventilated Seat) மற்றும் மசாஜ் (Massage Function) செய்யும் வசதிக் கொண்ட இருக்கையை இந்த மாடலில் வழங்க அந்நிறுவனம் தவறிவிட்டது. மிக அதிக விலையைக் கொண்ட எலிவேட்டின் உயர் நிலை தேர்வில்கூட இந்த அம்சம் இடம் பெறாதது வருத்தமளிக்கும் வகையில் அமைந்தது.

இந்த நிலையிலேயே இந்த பாப்புலரான அம்சத்தை ஹோண்டா நிறுவனம் எலிவேட் காருக்கு வழங்க இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. நிறுவனம் மசாஜ் செய்யும் திறன் மற்றும் வெண்டிலேட்டை உறுதிச் செய்யக் கூடிய இருக்கை கவரையே தனியாக வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

இதற்கு ரூ. 6 ஆயிரம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த இருக்கை கவரை மின்சாரத்துடன் இணைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அதன் மசாஜ் வசதியை அனுபவிக்க முடியும். 12 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட் இருந்தாலே போதுமானது. இதில் இணைக்கும் பட்சத்தில் மசாஜ் வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

எஞ்ஜினைப் பொருத்த வரை ஹோண்டா எலிவேட் கார் மாடலில் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட், டிஓஎச்சி, 1.5 லிட்டர், 4 சிலிண்டர், ஐ-விடெக் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதே மோட்டாரே தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டி செடான் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் 119.35 பிஎச்பி பவரை 6,000 ஆர்பிஎம்மிலும், 145 என்எம் டார்க்கை 4,300 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இத்துடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதன் மேனுவல் கியர்பாக்ஸ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 15.31 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு 16.92 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹேண்ட்லிங் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் கேமிரா (பார்க் செய்ய உதவியாக இருக்கும்) மற்றும் அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் எலிவேட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அடாஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டும், அவசர கால பிரேக்கிங், ரோடு டிபார்ச்சர் மிடிகேஷன் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹை-பீம் மற்றும் லீட் கார் டிபார்ச்சர் நோடிஃபிகேஷன் சிஸ்டம் மற்றும் விபத்தை தவிர்த்தல் என ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொழில்நுட்ப அம்சங்களாக 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, 8 ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சிஸ்டத்துடன் எலிவேட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஹோண்டா கன்னெக்ட் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்சுகளைக் கூட எலிவேட் உடன் இணைத்துக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அம்சங்களுடன் சேர்த்தே ஹோண்டா எலிவேட்டில் தற்போது மசாஜ் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை வசதியை வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இந்தியாவில் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி ரூ. 11 லட்சம் தொடங்கி ரூ. 16 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 29, 2023, 5:00 [IST]
English summary
Honda announced elevate customers can ventilated and massage seats
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+