ஹோண்டா சிட்டி காரை வாங்குவதற்கு இதை விட சரியான சான்ஸ் கிடைக்காது!! இந்த ஆகஸ்ட் வரை மட்டும் தான் டைம் இருக்கு!

ஹோண்டா கார்கள் இந்தியாவில் மொத்தமாகவே தற்போதைக்கு 3 மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அந்த 3 ஹோண்டா கார்களுக்கும் இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலமாக ஹோண்டா கார்களை இந்த ஆகஸ்ட்டில் எவ்வளவு சலுகைகளுடன் பெறலாம் என்பதையும், இந்தியாவில் விற்கப்படும் அந்த 3 ஹோண்டா கார்களையும் பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

ஹோண்டா மட்டுமின்றி, எந்தவொரு கார்ப்பிரேட் நிறுவனமும் விற்பனை சரியாக இல்லையென்றால், உடனே சலுகைகள் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பது வழக்கம். சலுகைகளை அறிவிப்பது ஓர் 'மதில் மேல் பூனை' போன்றதே. ஏனெனில், சலுகைகள் அறிவிக்கப்படுகிறது எனில் குறிப்பிட்ட தொகையை அறிவிக்கும் கார்ப்பிரேட் நிறுவனம் செலவழிக்க தயாராகிவிட்டது என்பது அர்த்தம். அவ்வளவு தொகை கொடுத்து, வாடிக்கையாளர்களை பெற்றுவிட வேண்டும் என்பதுதான் அத்தகைய நிறுவனங்களின் திட்டம்.

honda cars offers august 2023

இதன்படி, ஆட்டோமொபைல் துறையிலும் பல்வேறு கார் நிறுவனங்கள் அதன் கார்களுக்கு குறிப்பிட்ட கால சலுகைகளை அறிவித்ததை இதற்கு முன் பார்த்துள்ளோம். இந்த வகையில், ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனையில் உள்ள அதன் 3 கார்களுக்கும் நடப்பு ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த 3 ஹோண்டா கார்களுக்கும் ஒவ்வொரு விதமான தள்ளுபடிகளுடன் சலுகைகளை பெற்று உள்ளன.

5ஆம் தலைமுறை சிட்டி: இந்தியாவில் தற்சமயம் 5ஆம் தலைமுறை சிட்டி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. 4ஆம் தலைமுறையின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. 5ஆம் தலைமுறை சிட்டி செடான் காரை இந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்பட்சமாக 73,946 வரையிலான சலுகைகள் உடன் வாங்கலாம். இதில் பணம் தள்ளுபடி ரூ.10,000 மட்டுமே. ஆனால், சிறப்பு கார்ப்பிரேட் தள்ளுபடி ரூ.20,000 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

honda cars offers august 2023

இந்த கார்ப்பிரேட் தள்ளுபடியை பெற நீங்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இது இல்லாமல், வழக்கமான கார்ப்பிரேட் தள்ளுபடியும் 5ஆம் தலைமுறை சிட்டி காருக்கு ரூ.8,000 வரையில் வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்திவரும் பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.10,000 வரையில் பணம் தள்ளுபடி செய்யப்படும். அதுவே, பயன்படுத்திவரும் பழைய ஹோண்டா காரை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.20,000 வரையில் பணத்தை சேமிக்கலாம். இவை தவிர்த்து, இலவச ஆக்ஸஸரீகளுக்காக ரூ.10,956 வரையிலும், லாயலிட்டி போனஸாக ரூ.5,000ஐயும் பெறலாம்.

சிட்டி ஹைப்ரீட்: மேற்கூறப்பட்ட சலுகைகள் அனைத்தும் 5ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டியின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களுக்கு ஆகும். அதுவே, ஹைப்ரீட் வேரியண்ட்களுக்கு ரூ.40,000 வரையிலான பணம் தள்ளுபடியை மட்டுமே பெற முடியும். மேலும், இந்த ரூ.40,000 வரையிலான பணம் தள்ளுபடியும் சிட்டி ஹைப்ரீட் காரின் வி வேரியண்ட்டிற்கு மட்டுமே ஆகும். விலைமிக்க இசட்.எக்ஸ் வேரியண்ட்டிற்கு கிடையாது.

அமேஸ்: சிட்டியை தவிர்த்து, இந்தியாவில் பிரபலமான மிக சில ஹோண்டா கார்களுள் ஒன்று அமேஸ் ஆகும். ஹோண்டாவின் காம்பெக்ட் செடான் காரான இது இந்தியாவில் பலரால் வாங்கப்படும் செடான் கார்களுள் ஒன்றாக விளங்குகிறது. அமேஸ் செடான் காருக்கு ரூ.23,296 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகப்பட்சமாக, ரூ.12,296 மதிப்பிலான இலவச ஆக்ஸஸரீகள் அடங்குகின்றன.

honda cars offers august 2023

5ஆம் தலைமுறை சிட்டியிலும், அமேஸிலும் இந்த இலவச ஆக்ஸஸரீகளை பெறுவதற்கு குறிப்பிட்ட ஆகஸ்ஸரீ தொகுப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும். அமேஸ் காருக்கு பணம் தள்ளுபடி ஆனது ரூ.10,000 வரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமேஸுக்கு சிறப்பு கார்ப்பிரேட் தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமான கார்ப்பிரேட் போனஸ் மட்டுமே ரூ.6,000 வரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. லாயலிட்டி போனஸை ரூ.5,000 வரையில் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் ஹோண்டா கார்களின் விற்பனை ஆண்டுத்தோறும் குறைந்து வருவதை சொல்லியே ஆக வேண்டும். இதனால்தான், இந்திய சந்தையில் பிரபலமான சிட்டி மற்றும் அமேஸ் கார்களை மட்டுமே ஹோண்டா வைத்துள்ளது. இருப்பினும் இவற்றின் விற்பனையை அதிகரிக்க சலுகைகள் வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டதன் வெளிப்பாடாகவே இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான சலுகைகளை ஹோண்டா அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 3, 2023, 16:25 [IST]
English summary
Honda cars offers for this august 2023 upto rs 73000
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X