ஒன்னும் பெருசா இல்லேன்னு நினைச்சிட்டு இருந்தோம், ஆனா ஹோண்டா அமேஸ் கார் பண்ண சாதனைய பாத்தீங்களா?

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார் இந்தியச் சந்தையையே புரட்டிப் போட்ட கார் இந்த கார் முதன் முறையாகக் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அதாவது 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த கார் அறிமுகமான சில மாதங்களிலேயே ஹோண்டாவிலேயே அதிகமாக விற்பனையாகும் காராக இது மாறியது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஹோண்டா நிறுவனம் 5.3 லட்சம் அமேஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. தற்போது ஹோண்டாவில் கார்களை வாங்கும் இருவரில் ஒருவர் அமேஸ் காரை தான் வைத்திருக்கிறார். ஹோண்டா அமேஸ் கார் ஹோண்டாவின் ஒட்டு மொத்த கார் விற்பனையில் தற்போது 53 சதவீதம் பங்கை வகித்துள்ளது.

Honda Amaze 10th Anniversary

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹோண்டா அமேஸ் கார் இ20 எரிபொருள் கட்டுப்பாடுகளுக்குக் கடந்த 2013ம் ஆண்டே வந்துவிட்டது. அதாவது முதன் முறையாக ஹோண்டா அமேஸ் கார் அறிமுகப்படுத்தப்படும் போதே இ20 எரிபொருளை சப்போர்ட் செய்யும் வகையில் இயங்கும்.

ஹோண்டா நிறுவனம் சொன்ன தகவலின் படி இந்த காரை வாங்கியவர்களில் 40 சதவீதம் பேர் முதன் முறையாக கார் வாங்குபவர்கள் எனக் கூறியுள்ளது. அது மட்டுமல்ல ஒட்டு மொத்த அமேஸ் கார் விற்பனையில் 60 சதவீதமான விற்பனை டயர் 2 மற்றும் டயர் 3 சிட்டிகளில் விற்பனையாகி வருகிறது.

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் செடான் கார் 100 கார்கள் விற்பனையானால் அதில் 35 கார்கள் ஆட்டோமெட்டிக் கியர் கொண்ட கார்கள் தான் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் அக்குயா சுமூரா பேசும் போது : "எங்கள் இந்திய மார்கெட்டில் இன்று ஒரு மைல் கல்லைப் பதித்துள்ளோம். அமேஸ் கார் 5.3 லட்சம் வாடிக்கையாளர்களுடன் 10ம் ஆண்டை நிறைவு செய்கிறது.

இந்த காரை பிரிமியம் என்ட்ரி மாடல் காராக இந்தியாவில் அறிமுகப்படுத்தினோம். இந்த காரின் ஸ்டிராங்கான பிராண்ட் அப்பீல், போல்டான ஸ்டைல், சிறப்பான பெர்ஃபாமென்ஸ், நீடித்த உழைப்பு, பில்டு குவாலிட்டி, பாதுகாப்பு, மற்றும் சொகுசான அனுபவம் ஆகியவைதான் அமேஸ் காரை சிறப்பாக விற்பனையாகும் காராக மாற்றியது." என கூறினார்.

ஹோண்டா நிறுவனம் கடந்த 2013 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை முதல் தலைமுறை காரை விற்பனை செய்தது. அதில் மொத்தம் 2.6 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. அடுத்தாக இரண்டாம் தலைமுறை காரை இந்நிறுவனம் 2018ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தியது. அந்த கார் மொத்தம் 2.7 லட்சம் கார்கள் விற்பனையானது.

இந்த கார் மார்கெட்டில் மாருதி சுஸூகி டிசையர் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் வருகைக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் அந்த ரக கார்களை விரும்பியதால் ஒட்டு மொத்த செடான் செக்மெண்டிலேயே விற்பனை சுருங்கியது.

ஹோண்டா அமேஸ் கார் முதல் தலைமுறை மாடலில் பிராக்டிக்கல் டிசைன், அதிக இட வசதி கொண்ட கேபின், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் புதிய 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் அறிமுகமானது. இந்த கார் அறிமுகமாகும்போது மார்கெட்டில் டீசல் இன்ஜினிற்கு மிகப்பெரிய அளவில் மவுசு இருந்தது.

இரண்டாம் தலைமுறை காரில் முதல் தலைமுறையில் இருந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு அதிக பிரிமியம் மற்றும் அதிக சொகுசு வசதி கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்த தலையில் தான் செடான் செக்மெண்டிலேயே முதன் முறையாக டீசல் இன்ஜினில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டது. தற்போது டீசல் இன்ஜின் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த ஹோண்டா அமேஸ் காரில் 1.2 லிட்டர் ஐ-விடெக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது. இந்த அமேஸ் காரை ஹோண்டா நிறுவனம் ராஜஸ்தானில் உள்ள டப்பக்காரா மையத்தில் வைத்து தயாரித்து உள்நாட்டில் விற்பனையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியையும் செய்கிறது.

இந்த ஹோண்டா அமேஸ் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தற்போது தென் ஆப்பிரிக்கா, சார்க் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஹோண்டா நெட்வோர்க்கை பொருத்தவரை தற்போது இந்தியாவில் 236 நகரங்களில் 325 ஷோரூம்களை கொண்டுள்ளது என்பது கூடுதல் தகவல்!

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 21:00 [IST]
English summary
Honda celebrates amaze sedan 10th anniversary know full details
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+