வெறும் ரூ1.38 லட்சம் போதும் புதிய ஹோண்டா சிட்டி காரை சொந்தமாக்கலாம்! எப்படித் தெரியுமா?
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் சொடன் கார்களில் ஒன்று தான் ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார். இந்த கார் நீண்ட ஆண்டுகளாக இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி வரும் ஒரு காராகும். இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் 2023 ஹோண்டா சிட்டி மற்றும் சிட்டி ஹைபிரிட் ஆகிய கார்களை அப்டேட் செய்து வெளியிட்டது.
தற்போது ஹேண்டா சிட்டி காரை வாங்கப் பலரும் ஆர்வமாக உள்ளனர். ஒரு ஹோண்டா சிட்டி காரை நீங்கள் சொந்தமாக்க வேண்டும் என்றால் உங்களிடம் எவ்வளவு பணம் வேண்டும்? மாதம் எவ்வளவு பணம் இஎம்ஐ ஆகச் செலுத்த வேண்டும்? எது உங்களுக்கு லாபமாக இருக்கும். முன்பணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதைப் பற்றித் தான் இந்த செய்தியில் விரிவாகக் காணப்போகிறோம்.

அதற்கு முன்னர் இந்த காரின் வேரியன்ட் விபரங்களைப் பார்த்து விடுவோம். இந்த கார் மொத்தம் 7 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ரூ13.25 லட்சம் முதல் ரூ18.31 லட்சம் என்ற விலையில் இந்த கார்விற்பனையாகி வருகிறது. இந்த காரை நீங்கள் லோன் போட்டு வாங்கினால் எவ்வளவு செலவாகும் என கணக்கிட எளிதாக 10 சதவீத வட்டியுடன் 5 ஆண்டுகளில் நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் வகையில் இதை உங்களுக்கு வழங்கியுள்ளோம்.
ஆனால் கார் வாங்குபவர்கள் அதை விடக் குறைவான காலத்திற்குள் லோனை கட்டி முடிக்கும் ஆப்ஷனையும் தேர்வு செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் இதில் 10 சதவீத விட்டியை வழங்கியுள்ளோம். இதுவும் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும். சில வங்கிகளில் இதை விடக் குறைவாகவும், சில வங்கிகளில் இதை விட அதிகமாகவும் கூட வட்டி விதிக்கப்படலாம். சரி வாருங்கள் இதை விரிவாகப் பார்ப்போம்.

இந்த காரின் பேஸ் வேரியன்ட் எஸ்வி இதன் விலை ரூ13.25 லட்சம் இதை வாங்க முன்பணமாக ரூ1.30 லட்சம் செலுத்த வேண்டும். இஎம்ஐ ஆக ரூ25,398 செலுத்த வேண்டும். அடுத்தாக வி வேரியன்ட் இதன் விலை ரூ14.25 லட்சம் இதை வாங்க ரூ1.42 லட்சம் செலுத்த வேண்டும். மாத இஎம்ஐ ஆக ரூ27,254 செலுத்த வேண்டும். அடுத்தது விஎக்ஸ் வேரியன்ட் இதன் விலை ரூ 15.51 லட்சம் ஆகும்.
இந்த விஎக்ஸ் வேரியன்டை வாங்க ரூ1.55 லட்சம் முன்பணமாகச் செலுத்த வேண்டும். மாதம் ரூ29,666 இஎம்ஐ ஆகச் செலுத்த வேண்டும். அடுத்ததாக வி சிவிடி வேரியன்ட் இது வி வேரியன்டில் சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட காராகும். இந்த காரின் விலை ரூ15.55 லட்சமாகும். இதற்கான முன்பணம் ரூ1.57 லட்சம் இஎம்ஐ ஆக மாதம் ரூ29,935 செலுத்த வேண்டும்.

அடுத்தாக இசட் எக்ஸ் வேரியன்ட் கார் இதன் விலை ரூ16.90 லட்சமாகும். இதற்கு முன்பணமாக ரூ1.69 லட்சம் செலுத்த வேண்டும். இது போக மாதம் ரூ32,320 செலுத்தவேண்டும். அடுத்து விஎக்ஸ் சிவிடி வேரியன்ட், விஎக்ஸ் வேரியன்டில் சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட கார் இது. இந்த காரின் விலை ரூ16.92 லட்சமாகும். இந்த காருக்கு முன்பணமாக ரூ1.69 லட்சம் செலுத்த வேண்டும். மாதம் ரூ32,368 இஎம்ஐ ஆக செலுத்த வேண்டும்.
இறுதியாக இசட் எக்ஸ் சிவிடி வேரியன்ட். இந்த கார் இசட் எக்ஸ் வேரியன்டில் சிவிடி கியர் பாக்ஸ் கொண்ட கார். இந்த காரின் விலை ரூ18.31 லட்சம் ஆகும். இந்த காரை வாங்க ரூ1.83 லட்சம் முன்பணமாகச் செலுத்தவேண்டும். இது போக மாதம் மாதம் ரூ35,022 இஎம்ஐ ஆகச் செலுத்தி வேண்டும். இது தான் இந்த காரை வாங்குவதற்கான திட்டம். உங்கள் வருமானத்திற்கு ஏற்றபடி இஎம்ஐ ஆண்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.
கடனை திருப்பி செலுத்துவதற்கான ஆண்டை குறைத்தால் மாதம் கட்ட வேண்டிய தவணை அதிகமாகும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பட்டியலை வைத்து இப்பொழுதே உங்களுக்குத் தகுந்த காரை புக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








