கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹோண்டா சிட்டி (Honda City). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ஹோண்டா நிறுவனத்தின் கார்களில் ஒன்றாக சிட்டி திகழ்கிறது.

இந்த சூழலில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட சிட்டி காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக இந்த புதிய மாடல் வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா சிட்டி காரின் புதிய மாடலுக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு, இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!

டிசைன் மாற்றங்கள்!

2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டிசைன் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால் டிசைன் மாற்றங்கள் ஓரளவிற்குதான் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன்படி ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாதுகாப்பு அதிகரிக்கும்!

அதே சமயம் உட்புறத்தை பொறுத்தவரை, தற்போதைய மாடலில் உள்ள அதே டேஷ்போர்டு லேஅவுட்தான், புதிய மாடலிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும் வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில், லெவல் 1 அடாஸ் (Level 1 ADAS) தொழில்நுட்ப வசதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும்.

கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!

இன்ஜின்!

ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதன்படி தற்போதைய மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து வழங்கப்படும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதுதவிர ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனுடனும், ஹோண்டா சிட்டி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 124 பிஹெச்பி மற்றும் 253 என்எம் ஆகும். ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.

மாருதிக்கு செக்!

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) போன்ற கார்களுக்கு விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தில், புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் ஹோண்டா நிறுவனம் தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கு போட்டியாக ஹோண்டாவின் இந்த புதிய கார் வரவுள்ளது. இதுதவிர மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுக்கும், ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய கார் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 23, 2023, 22:49 [IST]
English summary
Honda city facelift india launch details
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+