Honda Compact Suv: இவ்வளவு கம்மி விலையில் ஹோண்டா எஸ்யூவி கார் வந்தால் மக்கள் கூட்டம் ஷோரூம்ல அலை மோதுமே!
இன்று இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு மிகப்பெரிய அளவில் மார்கெட் இருக்கிறது. ஒரு காலத்தில் செடான் கார்களை வாங்கிய பலர் இன்று எஸ்யூவி கார்களை விரும்புகின்றனர். இந்நிலையில் இந்த செக்மெண்டில் மாருதி, டாடா, ஹூண்டாய் போன்ற பல நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. இந்த காருக்கான அதிகாரப்பூர்வ அறிமுகம் இன்னும் சில வாரங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த காருக்கான அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்களை ஹோண்டா டீலர்கள் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ21 ஆயிரத்தை முன்பணமாகச் செலுத்தி இந்த காருக்கான புக்கிங்கை பெற்று வருகின்றனர். இந்த காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு இந்நிறுவனம் ஹோண்டா எச்ஆர்-வி என்று பெயரிடும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் இந்த காரை முதலிலேயே வாங்க நினைத்தால் இந்த காரை இப்பொழுது ரூ21 ஆயிரம் கொடுத்து புக்கிங் செய்யலாம். ஆனால் இந்த கார் அறிமுகத்திற்குப் பிறகு இதை கேன்சல் செய்ய விரும்பினாலும் அதற்காகச் செலுத்தப்பட்ட ரூ21 ஆயிரம் திரும்ப வழங்கப்படும் என்ற முறையில் புக்கிங் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் அதிக போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் இந்த காரை களம் இறக்குகிறது. இந்த கார் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி அஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.
ஹோண்டா நிறுவனம் இதன் இன்ஜின் ஆப்ஷன்கள் மூலம் டொயோட்டா - மாருதி கூட்டணிக்கு எதிராகப் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. இந்த காரும் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்யர்டு மற்றும் 1.5 லிட்டர் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின்கள் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இன்ஜின் அதிக பவர்ஃபுல், அதிக திறன், மற்றும் நீடித்த உழைப்பு கொண்ட இன்ஜினாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் உடனும், ஹைபிரிட் இன்ஜின் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடனும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் இந்த காரில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனை எதிர்பார்க்க முடியாது. இதற்கு முன்னர் ஹோண்டா எஸ்யூவி கார் டெஸ்டிங்கில் இருக்கும் போது சில ஸ்பை ஷாட்கள் வெளியானது. அதை வைத்துப் பார்க்கும் போது எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், ஸ்பிலிட் கிரில் மற்றும் ஸ்லீக்கர் தோற்றத்திற்கான ஸ்லோப்பிங் ரூஃப் லைன், ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
இந்த காரின் கேபினை பொருத்தவரை ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் கேபினிலிருந்து சில அம்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் கண்சோல், அடாஸ் தொழிற்நுட்பம் ஆகிய இதில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஹோண்டா எஸ்யூவி காரின் விலையைப் பொருத்தவரை இதன் போட்டியாளர்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுப்பதற்காக இதன் பேஸ்வேரியன்ட் ரூ10-11 லட்சத்தில் துவங்கி டாப் வேரியன்ட் ரூ20-22 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன?: ஹோண்டா நிறுவனம் அதிக போட்டியைக் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் காரை களம் இறங்குவது ஒரு வரவேற்கத்தக்க யுக்தி தான். ஆனால் போட்டியாளர்களைச் சமாளிக்கும் அளவிற்கு இந்த காரை கட்டமைக்க வேண்டும். ஹைபிரிட் தொழிநுட்பம் மாருதியை விடச் சிறந்ததாக இருந்தால் மார்கெட்டில் வெற்றி நிச்சயம்!


Click it and Unblock the Notifications








