அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் தொடக்கம்... எல்லா செடான்களையும் மென்னு விழுங்க வருகிறது ஹோண்டாவின் புதிய சிட்டி!

ஹோண்டா நிறுவனம் விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்6 கட்டம் இரண்டிற்கு ஏற்பவாறு தயாரித்த சிட்டி காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காருக்கே ஹோண்டா கார் விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற புக்கிங்கை தற்போது தொடங்கி இருக்கின்றனர்.

ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னரே, அதன் டீலர்கள் புக்கிங் பணியில் களமிறங்கி இருப்பது சிட்டி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும், சிட்டியை புக் செய்ய இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, உடனடியாக புக் செய்து கொள்ளலாம் என்கிற சூழலும் தற்போது உருவாகி இருக்கின்றது.

ஹோண்டா சிட்டி

புதிய ஹோண்டா சிட்டி வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனை முன்னிட்டு விரைவில் தனது விற்பனையாளர்களுக்கு புதிய சிட்டி காரை விற்பனைக்காக உற்பத்தி ஆலையில் இருந்து ஹோண்டா அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே ஹோண்டா கார் விற்பனையாளர்கள் புதிய அப்டேட்டட் சிட்டி காருக்கான புக்கிங்கை தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர். புதிய சிட்டி எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த காரில் புதிதாக (அடாஸ்) (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம்) சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஹோண்டா சிட்டி

ஏற்கனவே, ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி காரை ஹைபிரிட் வசதி உடன் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிதாக அடாஸ் அம்சமும் சிட்டி காரில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அம்சம் 2023 ஹோண்டா சிட்டி காருக்கு கூடுதல் பிளஸ்ஸை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த புதிய அம்சங்கள் சேர்ப்பு காரணத்தினால் சிட்டி செடான் காரின் விலை ரூ. 50 ஆயிரம் தொடங்கி ரூ. 80 ஆயிரம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய சிட்டி காரில் பிஎஸ் 6 கட்டம் இரண்டு மற்றும் ஆர்டிஇ விதிகளுக்கு இணங்க தயார் செய்யப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வுடன் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

ஹோண்டா சிட்டி

இதே மோட்டாரே ஹைபிரிட் சிட்டி தேர்விலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாற்றங்களைத் தொடர்ந்து லேசான மெக்கானிக்கல் மாற்றங்களும் புதிய சிட்டியில் செய்யப்பட்டு இருக்கின்றது. மறு சீரமைப்பு செய்யப்பட்ட க்ரில், முன் மற்றும் பின் பக்க பம்பர் ஆகியவை புதிய 2023 ஹோண்டா சிட்டி காரில் பார்க்க முடியும்.

இத்துடன், 16 அங்குல அலாய் வீலும் இந்த வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டியைக் காட்டிலும் லேசான அப்டேட்டைப் பெற்று விரைவில் விற்பனைக்கு வர காத்திருக்கும் 2023 சிட்டி சற்று கூடுதல் அழகான தயாரிப்பாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஹோண்டா சிட்டி

இந்த காரின் வருகை ஸ்கோடா ஸ்லேவியா, ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ், மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட செடான் ரக கார்களுக்கு கடுமையான போட்டியாக அமைய இருக்கின்றது. இத்தகைய சூப்பரான சிட்டிக்கே தற்போது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் நாட்டில் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 27, 2023, 8:29 [IST]
English summary
Honda dealer open unofficial bookings for City
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X