டாடா, ஹூண்டாயை ரிவென்ஜ் எடுக்கபோகுதா ஹோண்டா?.. 412 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் கார் தயார்!

ஹோண்டா நிறுவனம் முழு சார்ஜில் 412 கிமீ ரேஞ்ஜ் தரும் புதமுக எலெக்ட்ரிக் கார் இ.என்ஒய்1 (e.Ny1)-ஐ உலக சந்தையில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா?, என்ன மாதிரியான சிறப்பு வசதிகளைக் கொண்ட இ-காராக இது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் முழுவதுமாக மின்சாரத்தில் ஓடக் கூடிய புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடல் ஒன்றை உலக சந்தையில் வெளியீடு செய்திருக்கின்றது. இ.என்ஒய்1 (e.Ny1) எனும் காரையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது நிறுவனத்தின் இரண்டாவது மின்சார காராகும்.

Honda e ny1 suv

இதையே ஜெர்மனியில் நடைபெற்ற ஐரோப்பியன் ஊடக நிகழ்ச்சியின் வாயிலாக ஹோண்டா நிறுவனம் வெளியீடு செய்தது. இந்த காரை வெகு விரைவில் ஜெர்மனியில் ஹோண்டா விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதுவே, ஜெர்மனிக்கான ஹோண்டாவின் முழு முதல் மின்சார காராகும். இந்த எலெக்ட்ரிக் காரின் உடல் மொழியைப் பார்க்கையில் ஹோண்டாவின் பிரபல தயாரிப்பான சிட்டியை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது.

Honda e ny1 suv front profile

ஆமாங்க, ஹோண்டா சிட்டிக்கு எஸ்யூவி தோற்றம் கொடுத்தால் எப்படி இருக்குமோ அந்த ஸ்டைலிலேயே இ.என்ஒய்1 எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் பி-பிரிவு எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது.

Honda e ny1 suv interior design

இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகவே இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஹோண்டா விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக இந்த வாகனத்தில் கவர்ச்சி அம்சங்கள் பலவற்றை ஹோண்டா சேர்த்திருக்கின்றது. மெல்லிய ஹெட்லேம்ப்புகள், டெயில் லைட்டுகள் மற்றும் கவர்ச்சிகரமான அலாய் வீல்கள் என பல்வேறு அழகு அம்சங்கள் ஹோண்டா இ.என்ஒய்1 காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

Honda e ny1 suv side design

இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 412 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என ஹோண்டா தெரிவித்து இருக்கின்றது. இத்துடன், 201 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின்சார மோட்டாரே இ.என்ஒய்1 பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Honda e ny1 suv boot space

வெளிப்புறம் மற்றும் எஞ்ஜினைப் போலவே இந்த காரின் உட்புறமும் தனித்துவமான வசதிகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. இ.என்ஒய்1 எலெக்ட்ரிக் காரில் புத்தம் புதிய சென்டர் கன்சோலை வழங்கி இருக்கின்றது. மேலும், மிகவும் சிம்பிளான லே-அவுட்டையே இந்த காரில் ஹோண்டா பயன்படுத்தி இருக்கின்றது. இதுதவிர, பன்முக ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் கருவி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

Honda e ny1 suv rear design

இவற்றுடன், 15.1 அங்குல தொடுதிரை யூனிட்டும் இ.என்ஒய்1 எலெக்ட்ரிக் காரில் ஹோண்டா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் தன்னுடைய புதிய வாகன ஆர்கிடெக்சர் தளமான இ:என்-ஐ பயன்படுத்தியே இ.என்ஒய்1 எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே முன் வீல் இயக்கம் வசதி இ.என்ஒய்1க்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, புவி ஈர்ப்பு திறனால் பாதிப்பைச் சந்திக்காத சிறப்பான ஏரோ-டைனமிக் தோற்றத்தையும் ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காருக்கு வழங்கி இருக்கின்றது. இத்தகைய சூப்பரான இ-காரையே ஹோண்டா உலக சந்தையில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியம் துளியளவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மின்சார காரை களமிறக்கும் விஷயத்தில் மௌனம் காத்து வருகின்றது. ஒருவேளை நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் எனில் டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களுக்கு அது தலை வலியாக மாறும். டாடா நெக்ஸான் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவிக்கு போட்டியாகவே அதன் வருகை அமையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி ஹோண்டா நிறுவனத்தின்கீழ் 5ஆம் தலைமுறை சிட்டி, சிட்டி இ:எச்இவி மற்றும் அமேஸ் ஆகிய கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. இதைத் தொடர்ந்து எலிவேட் எனும் புதுமுக கார் மாடலை அது விற்பனைக்குக் களமிறக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 14:33 [IST]
English summary
Honda e ns1 electric suv debuts range and features details
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X