இதுதான் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்.. மார்கெட்டையே புரட்டி போடுபோட சீக்கிரமே வர போகுது!
ஜப்பானிய ஜாம்பவான் கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) அதன் புதிய எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் (Electric SUV) கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் கான்செப்ட் (Concept) மாடலாகும். தற்போது இந்தோனேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச வாகன மோட்டார் ஷோவிலேயே இந்த கார் வெளியீடு செய்யப்பட்டது.
இந்த எலெக்ட்ரிக் கார் வெளியீடு செய்யப்படுவது இது முதல் முறையல்ல. ஆமாங்க, இது இரண்டாவது முறை ஆகும். முதலில் இந்த எலெக்ட்ரிக் கார் ஷாங்காய் ஆட்டோ ஷோவிலேயே வெளியீடு செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே மீண்டும் ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்தது.

இதன் வாயிலாக நிறுவனம் வெகு விரைவில் மின் வாகன பிரிவில் மிகப் பெரிய புரட்சியை செய்யும் வகையில் ஹோண்டா களமிறங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. தற்போது உலக மின் வாகன சந்தையில் டெஸ்லாவும், இந்தியாவில் டாடா மோட்டார்ஸும் கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிறுவனங்களுக்கு போட்டி அளிக்க வேண்டும் என்கிற நோக்கில் பிற நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில், ஒன்றே ஹோண்டா. இந்த நிறுவனம் டெஸ்லா மற்றும் டாடா என அனைத்து நிறுவனங்களுக்கும் போட்டி அளிக்கும் வகையிலேயே தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க இருக்கின்றது.
இதற்கு சான்றாகவே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இதனை இ: (e:) எனும் பெயரில் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. இதனை 2030 ஆம் ஆண்டிற்குள் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டா நிறுவனம் உலக அளவில் 2030 ஆம் ஆண்டிற்குள் ஐந்து புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. அதில் ஒன்றாக தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். இப்போது புரோட்டோ டைப் (முன்மாதிரி) மாடலாக மட்டுமே ஹோண்டா உருவாக்கி இருக்கின்றது.
வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 500க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை வழங்கும் என கூறப்படுகின்றது. ஆனால், இதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இதேபோல், இந்த எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் குறித்த பெரும்பாலான விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.
வரும் நாட்களில் அதுகுறித்த தகவலை ஹோண்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காருடன் சேர்த்து இன்னும் கார் மாடல்களையும் இந்தோனேசியா சர்வதேச வாகன ஷோவில் காட்சிப்படுத்தியது. ஹோண்டா என்-வேன் இவி, ஹோண்டா இ. மற்றும் ஹைபிரிட் கார் மாடல்கள் சிலவற்றையும் அது காட்சிப்படுத்தியது.
ஹோண்டா சிஆர்-வி ஆர்இ இ: எச்இவி மற்றும் பல கார் மாடல்களையே அது காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்த புதுமுக எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எலிவேட் எனும் எஸ்யூவி ரக காரையே நிறுவனம் இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கின்றது.
இந்த காருக்கான விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவிலேயே இந்த விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது எலிவேட்டிற்கான ப்ரீ புக்கிங் பணிகளே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரூ. 21 ஆயிரம் கட்டணத்திலேயே முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த காருக்கு அமோகமான புக்கிங் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் கிங் ஆக உள்ளது. அதன் நெக்ஸான் இவி விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு போட்டி அளிக்கும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








