ஹோண்டா களமிறக்கிய புதிய காரின் விலை இவ்ளோதானா! வாங்கறதுக்கு ஆள் ஆளாளுக்கு முட்டி மோதிகிட்டு இருக்காங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், விற்பனையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் (Milestone) ஒன்றை கடந்துள்ளது. 20 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 100 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், ஹோண்டா எலவேட் கார் இந்த பிரம்மாண்டமான மைல்கல்லை கடந்து அசத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 4ம் தேதிதான் ஹோண்டா எலவேட் கார் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

Honda Elevate Mega Delivery

சரியாக 100 நாட்கள் கடந்த நிலையில், 20 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லையும் ஹோண்டா எலவேட் கார் கடந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான சாதனை குறித்து, ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் இயக்குனர் யூச்சி முராத்ரா கூறியது பின்வருமாறு:

எங்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி, ஹோண்டா எலவேட் கார் சிறப்பாக விற்பனையாகி கொண்டுள்ளது. இதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அறிமுகம் செய்யப்பட்ட முதல் 100 நாட்களில், 20 ஆயிரம் ஹோண்டா எலவேட் கார்கள் விற்பனை என்பது எங்களுக்கு பெருமையை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Honda Elevate Cars

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை 11 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 16.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா எலவேட் காரில், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் VTEC பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 121 பிஎஸ் பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடாஸ் (Advanced Driver Assistance Systems - ADAS) உள்பட இந்த காரில் ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ருஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) உள்ளிட்ட கார்களுடன், ஹோண்டா எலவேட் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது ஹோண்டா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் முக்கியமான ஒரு காராக எலவேட் உருவெடுத்துள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்கும் வகையில் வரும் காலங்களில் ஹோண்டா எலவேட் காரில் புதிய இன்ஜின் ஆப்ஷன் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, December 16, 2023, 18:35 [IST]
English summary
Honda elevate 20000 unit sales milestone all details here
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+