லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா கார்! இந்த பேருக்காகவே கண்ணை மூடிட்டு வாங்கீரலாம்! மாஸா இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன.

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) உள்ளிட்ட கார்கள், இந்த செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.

Honda New SUV

இந்த சூழலில் ஹோண்டா நிறுவனம் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு வேகமாக தயாராகி வருகிறது. அனேகமாக வரும் ஜூன் மாத தொடக்கத்தில், ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் ஹோண்டாவின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா நிறுவனம் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கு எலவேட் (Honda Elevate) என்ற பெயரை சூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda City e:HEV

ஹோண்டா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டே இந்தியாவில் எலவேட் என்ற பெயரை பதிவு செய்து வைத்து விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹோண்டா எலவேட் கார், இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது கேமரா கண்களிலும் இந்த கார் ஏற்கனவே சிக்கியுள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி (Honda City) கார் கட்டமைக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஹோண்டா எலவேட் காரும் கட்டமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் (Engine), ஹோண்டா எலவேட் காரிலும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா சிட்டி காரில் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் சுமார் 120 பிஹெச்பி ஆக உள்ளது. ஆனால் ஹோண்டா எலவேட் காரில் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 110 பிஹெச்பி என்ற அளவில் இருக்கலாம். இதுதவிர ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும், ஹோண்டா எலவேட் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின்தான், ஹோண்டா எலவேட் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரானது, இ:ஹெச்இவி (Honda City e:HEV) என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலில், ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

சிட்டி ஹைப்ரிட் மாடல் ஒரு லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இதே அளவிலான மைலேஜை ஹோண்டா எலவேட் காரிலும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். வசதிகளை (Features) பொறுத்தவரையில், அடாஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படலாம்.

அதே நேரத்தில் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) காரின் டிசைன் அம்சங்களை, ஹோண்டா எலவேட் காரில் நாம் எதிர்பார்க்காம். ஹோண்டா எலவேட் காரின் முன் பகுதியில், எல்இடி ஹெட்லைட்கள், பெரிய க்ரில் அமைப்பு மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும். எனவே ஹோண்டா நிறுவனம் விலையை (Price) மட்டும் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், எலவேட் எஸ்யூவி கார் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, May 1, 2023, 23:56 [IST]
English summary
Honda elevate engine mileage features india launch details
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+