பொறுத்தது போதும் என பொங்கி எழுகிறது ஹோண்டா! தரமான எலெக்ட்ரிக் காரை களமிறக்க போறாங்க! இதுக்காகதான் வெயிட்டிங்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். வெகு சமீபத்தில்தான் இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் டெலிவரி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டுமே ஹோண்டா எலவேட் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்திய சந்தையில் இதுதான் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும்.

Honda Elevate

ராஜஸ்தான் மாநிலம் தபுகெராவில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்திற்கு இருக்கும் ஒரே ஒரு தொழிற்சாலை இது மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அனேகமாக வரும் 2025ம் ஆண்டு ஹோண்டா எலவேட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

ஆனால் இதற்கு என்ன பெயர் சூட்டப்படும்? ரேஞ்ச் (Range) எவ்வளவு? என்பது போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனினும் ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய கூடிய பேட்டரி ஆப்ஷன் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Honda Elevate Rear Design

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா இவி (Hyundai Kona EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு இது போட்டியாக இருக்கும். அத்துடன் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருக்கும் இது போட்டியாக இருக்கலாம். வரும் மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் கார் பற்றிய கூடுதல் தகவல்கள் நமக்கு தெரியவரும்.

ஆனால் ஹோண்டா எலவேட் காரின் ஹைப்ரிட் ஆப்ஷன் பற்றிய தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஹோண்டா சிட்டி (Honda City) காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஹோண்டா எலவேட் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி காரில் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதால், ஹோண்டா எலவேட் காரிலும் அது வழங்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த எதிர்பார்ப்பை ஹோண்டா நிறுவனம் பொய்யாக்கி விட்டது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே ஹோண்டா எலவேட் காரில் வழங்கப்படுகிறது. ஹோண்டா எலவேட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதன் ஹைப்ரிட் வெர்ஷன் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற உறுதியான தகவல் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் நிலையிலும், ஹோண்டா எலவேட் காரின் விற்பனை மிகவும் சிறப்பாகதான் இருந்து வருகிறது. இந்த சூழலில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டால், அது ஹோண்டா எலவேட் காரின் விற்பனை எண்ணிக்கையை இன்னும் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, October 30, 2023, 23:52 [IST]
English summary
Honda elevate ev india launch confirmed new details out
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+