நம்பவே முடியல! ஹோண்டாவின் புது கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! மாருதி கோட்டையில பெரிய ஓட்டைய போட போகுது!

ஹோண்டா (Honda) நிறுவனம் புத்தம் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் 3யூஎஸ் (3US) என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது.

அனேகமாக ஹோண்டா எலவேட் (Honda Elevate) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார், வரும் ஜூன் 6ம் தேதி உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Honda City e:HEV

இதற்கான நிகழ்ச்சி, டெல்லியில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் (அனேகமாக ஆகஸ்ட் மாதம்) ஹோண்டா எலவேட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தியாவை தொடர்ந்து பிற நாடுகளிலும் இந்த கார் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரின் நீளம் 4.2 அல்லது 4.3 மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் 5வது தலைமுறை ஹோண்டா சிட்டி (Honda City) காருடன், இன்ஜின் மற்றும் பிளாட்பார்ம் ஆகியவற்றை இந்த கார் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Honda New SUV

இதன்படி ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ஹோண்டா எலவேட் காரும் கட்டமைக்கப்படவுள்ளது. மேலும் ஹோண்டா சிட்டி காரில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான், ஹோண்டா எலவேட் காரிலும் கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இந்த ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே ஹோண்டா எலவேட் காரில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பின் நாட்களில் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

ஹோண்டா எலவேட் காரில் வழங்கப்படவுள்ள ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு சுமார் 27 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா எலவேட் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் ஹோண்டா எலவேட் காரில் வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமிருக்காது என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். இதன்படி அடாஸ் (ADAS), 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், ஹோண்டா எலவேட் காரில் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அனேகமாக ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை (Price) 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட் காரின் வருகை, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 2, 2023, 13:46 [IST]
English summary
Honda elevate global debut on june 6 all details here
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+