நாடே தவம் கிடக்கும் காரை பற்றி வெளியான முக்கிய தகவல்! மாருதி, ஹூண்டாய்க்கு இந்நேரம் வேர்த்து கொட்டியிருக்கும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த கார் வரும் செப்டம்பர் 4ம் தேதி (September 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், ஹோண்டா எலவேட் காருக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஹோண்டா எலவேட் மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, இந்த காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.

SV, V, VX மற்றும் ZX ஆகிய வேரியண்ட்களில் (Variants) ஹோண்டா எலவேட் கார் கிடைக்கும். 7 மோனோடோன் மற்றும் 3 ட்யூயல்டோன் என மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் ஹோண்டா எலவேட் கார் கிடைக்கும். ஹோண்டா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, எலவேட் காரிலும் ஏராளமான அதிநவீன வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை எல்லாம் தவிர அடாஸ் (ADAS) தொழில்நுட்ப வசதியும் ஹோண்டா எலவேட் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கார்களில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் வசதிகளில் ஒன்றாகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், ஹோண்டா எலவேட் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அது 1.5 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 15.31 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சிவிடி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 16.92 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கி மைலேஜ் ஆகும். ஹோண்டா எலவேட் காரில் முதலில் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வழங்கப்படவில்லை. ஆனால் வரும் மாதங்களில் ஹோண்டா எலவேட் காரில் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட் காரின் வருகை, ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








