ஹோண்டா எலவேட் கார் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குமா? கிராஷ் டெஸ்டிற்கு முன்பே தெரிந்த ரிசல்ட்!
ஹோண்டா எலவேட் கார் சர்வதேச அளவிலான பாதுகாப்பு ரேட்டிங்கில் அதிக ஸ்டார் பெரும் அம்சங்கள் நிறைந்த காராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக அந்நிறுவனமே ஒரு சின்ன கிராஷ் டெஸ்டை எடுத்து பார்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கார் வாங்கும் மக்கள் மத்தியில் பாதுகாப்பான கார்களை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக வந்துவிட்டது. குறிப்பாக இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதால் அதில் ஏற்படும் உயிரிழப்புகளை பார்க்கும் போது மக்கள் பாதுகாப்பான கார்களை தான் வாங்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

இதனால் சமீப காலமாக இந்தியாவில் விலை குறைந்த காரைவிட பாதுகாப்பான காருக்கு தான் மக்கள் மத்தியில் அதிகம் ஈர்ப்பு இருக்கிறது. பாதுகாப்பான கார்களின் விற்பனைக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களை பாதுகாப்பான காராக மாற்ற பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் எலவேட் என்ற புதிய எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தப் போகிறது இந்த எஸ்யூவி கார் மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக களத்தில் இறங்குகிறது. ஏற்கனவே இந்த மார்கெட்டில் ஏகப்பட்ட கார்கள் இருப்பது தனி கதை.

இந்த காருக்கு இதுவரை சர்வதேச அளவில் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்படவில்லை. இதனால் இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மக்களுக்கு ஒரு விதமான சந்தேகம் இருந்தது. இந்நிலையில் அந்த சந்தேகத்தை போக்கும் வழக்கில் ஹோண்டா நிறுவனமே இன்டர்னலாக ஒரு கிராஷ் டெஸ்டை செய்துள்ளது.
தற்போது ஹோண்டா எலவேட் காரின் மீடியா டிரைவ் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஊடகத்தினரை அழைத்து ஹோண்டா எலவேட் காரை கொடுத்து அவர்களை ஓட்டிப் பார்த்து ரிவ்யூ எழுத சொல்லி வருகின்றனர். அப்படி ஊடகத்தினர் செல்லும் போது அவர்களுக்கு இந்த காரின் சேஃப்டி குறித்து கிராஷ் டெஸ்டை இன்டர்னலாக நடந்த தகவல்களை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டு வருகின்றனர்.

ஹோண்டா எலிவேட் கார் இன்டர்னலாக டெஸ்ட் செய்யப்படும் போது பல்வேறு விதமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அத்தனை சோதனைகளிலும் ஹோண்டா எவவேட் கார் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த காரை 64 கிலோ மீட்டர் வேகத்தில் முன்பக்கம் மோதல், 50 கிலோ மீட்டர் வேகத்தில் பக்கவாட்டு பகுதியில் மோதல், 50 கிலோ மீட்டர் வேகத்தில் பிளாட் பிளோர் சோதனை,
32 கிலோமீட்டர் வேகத்தில் பக்கவாட்டுப்பகுதியில் கம்பம் வைத்து அதில் மோத விட்டு சோதனை, 50 கிலோமீட்டர் வேகத்தில் பின்பக்கம் மோதினால் எவ்வளவு சேதாரம் ஏற்படுகிறது என்பதற்கான சோதனை, முன்பக்கம் மோதும்போது 50 கிலோமீட்டர் வேகத்தில் குழந்தை சீட் உடனான சோதனை இப்படியாக பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் பெடஸ்ட்டிரியன் சோதனையும் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனைகளின் போது காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு கால்களில் ஏற்படும் பாதிப்பு, தலையில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் கவனிக்கப்பட்டது. பெடஸ்டிரியன் டெஸ்டில் ஏஐஎஸ் 100 மதிப்பெண்ணை இந்த கார் எடுத்துள்ளதாக ஹோண்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோக லேசான விபத்துகளில் இந்த காரின் உட்பகுதியில் உள்ள முக்கியமான பாகங்கள் எதுவும் சேதமாகவில்லை என்றும், லேசான விபத்துக்கள் நிகழ்ந்தால் இந்த காரை தாராளமாக ஓட்டிச் செல்லும் அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வெளிப்புறத்தில் சேதாரம் ஆனாலும் காரின் பாடி மற்றும் முக்கியமான பாகங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஹோண்டா நிறுவனம் இந்த ஏலவேட் காரில் ஏசிஇ எனப்படும் அட்வான்ஸ்டு கேபின் இன்ஜினியரிங் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உறுதியான ஸ்டீல் இந்த கார் விபத்தில் சிக்கினாலும் உள்ளே இருக்க பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லாமல் பாதுகாக்கிறது. இந்த கார் நேரடியாக முன்பக்கம் மோதினால் அதன் தாக்கம் அகல வாக்கில் ஏற்படும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு பெரிய அளவில் இம்பேக்ட் இருக்காது.
அடுத்ததாக ஹோண்டா எலவேட் காரின் முக்கியமான அம்சமாக இதில் அடாஸ் தொழில்நுட்பம் இருக்கிறது. இது காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு மிகப் புதிய தொழில்நுட்பம் தான். இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே எம்ஜி அஸ்டர் காரில் இருக்கிறது. சமீபத்தில் தான் கியா செல்டோஸ் காரில் இந்த தொழிற்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது காராக ஹோண்டா எலவேட் கார் இந்த வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.
இந்த அடாஸ் தொழில்நுட்பம் ஹோண்டாவின் சென்சிங் பிளாட்பார்ம் உடன் சேர்ந்து இயங்குகிறது. இதன் மூலம் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் காருக்கு கிடைக்கிறது. இதன்படி ரோடு டிபார்ச்சர் மிட்டிகேஷன் சிஸ்டம், கொலிஷன் மிட்டிகேஷன் பிரேக்கிங் சிஸ்டம், லேண்ட் கீப் அசிஸ்ட் சிஸ்டம், ஆட்டோ ஹைபீம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லீடு கார் டிபார்ச்சர் நோட்டிபிகேஷன் சிஸ்டம் ஆகியன உள்ளன.
இதுபோக இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி அசிஸ்ட், அஜயில் ஹேண்டிலிங் அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா, எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் ஆகிய இந்த காரில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலவேட் கார் இந்த செக்மெண்டில் உள்ள கார்களை ஒப்பிடும் போது அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக விற்பனைக்கு வருகிறது. இந்த கார் கிராஷ் டெஸ்டிற்கு செல்லும் போது 5 ஸ்டார் ரேட்டிங் வாங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதற்காக தான் ஹோண்டா நிறுவனம் பல முக்கியமான அப்டேட்களை எல்லாம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









