நாடே காத்து கிடக்கும் ஹோண்டா கார் இன்னும் கொஞ்ச நேரத்தில் லான்ச் ஆகுது! இந்த விலையில்தான் வரப்போகுதா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த கார் நாளை (செப்டம்பர் 4) இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஹோண்டா எலவேட் கார் இந்திய சந்தையில் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. அத்துடன் முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. 21 ஆயிரம் ரூபாய் என்ற முன்பதிவு தொகையை செலுத்தி வாடிக்கையாளர்கள் பலர் ஹோண்டா எலவேட் காரை ஆர்வமாக புக்கிங் செய்து வருகின்றனர்.

Honda Elevate

ஹோண்டா எலவேட் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு கிடைக்கும். அவை SV, V, VX மற்றும் ZX ஆகும். ஆனால் செயல்திறனை பொறுத்தவரையில் ஹோண்டா எலவேட் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும்.

அதிகபட்சமாக 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 16.92 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Honda Elevate Rear View

இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மிகவும் சவால் நிறைந்த இந்த செக்மெண்ட்டில் பல்வேறு நிறுவனங்களும் புதிய கார்களை களமிறக்கி கொண்டுள்ள நிலையில், ஹோண்டா நிறுவனமும் எலவேட் மூலமாக கோதாவில் குதிக்கவுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகியவைதான் ஹோண்டா எலவேட் காரின் முக்கியமான போட்டியாளர்கள் ஆகும்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்பட பல்வேறு அம்சங்கள் ஹோண்டா எலவேட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையை தவிர ஹோண்டா எலவேட் காரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரிய வந்துவிட்டன. விலையும் நமக்கு நாளை தெரிந்து விடும். அனேகமாக ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை 10-11 லட்ச ரூபாய் அளவில் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 3, 2023, 23:49 [IST]
English summary
Honda elevate launch tomorrow expected price mileage features
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+