நாடே காத்து கிடந்த ஹோண்டா கார் விற்பனைக்கு அறிமுகம்! விலையை பாருங்க! நடுக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹோண்டா எலவேட் (Honda Elevate) கார், இன்று (செப்டம்பர் 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஜூன் மாதமே ஹோண்டா எலவேட் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.
ஆனால் விலை (Price) எவ்வளவு? என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. அதுவும் இன்று அறிவிக்கப்பட்டு, முறைப்படி சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. ஹோண்டா எலவேட் கார் 7 சிங்கிள் டோன் மற்றும் 3 ட்யூயல் டோன் என மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனைக்கு கிடைக்கும்.

ஹோண்டா எலவேட் காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 4,312 மிமீ ஆகவும், 1,790 மிமீ ஆகவும், 1,650 மிமீ ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,650 மிமீ ஆக இருக்கிறது. எனவே உட்புறத்தில் பயணிகளுக்கு விசாலமான இடவசதி கிடைக்கும் என்பது உறுதி.
செயல்திறனை பொறுத்தவரையில், ஹோண்டா எலவேட் காரில், 1.5 லிட்டர் i-VTEC DOHC பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 121 பிஎஸ் பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 15.31 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், சிவிடி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 16.92 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசைனை (Design) பொறுத்தவரையில், முழு எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர், எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் ட்யூயல் டோன் டைமண்ட் கட் R17 அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் ஹோண்டா எலவேட் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் ஹோண்டா கனெக்ட் எனப்படும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்றவை ஹோண்டா எலவேட் காரின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
இதுதவிர அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System) தொழில்நுட்ப வசதியும் ஹோண்டா எலவேட் காரில் வழங்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பை (Safety) அதிகரிக்கும். இதுதவிர இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா ஆகிய வசதிகளும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
ஹோண்டா எலவேட் கார், SV, V, VX மற்றும் ZX என மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், SV வேரியண்ட்தான் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். அதே நேரத்தில் ZX டாப் வேரியண்ட் ஆக இருக்கிறது.
இதில் SV வேரியண்ட்டின் (மேனுவல்) விலை 10,99,900 ரூபாய் ஆகவும், ZX வேரியண்ட்டின் (சிவிடி) விலை 15,99,900 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வரும் மாதங்களில் விலை உயர்த்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கு, ஹோண்டா எலவேட் மிக கடுமையான சவாலை ஏற்படுத்தும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








