ஹோண்டாவின் புது கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! டூவீலர்களையே தூக்கி சாப்பிட போகுது! கதறும் போட்டி நிறுவனங்கள்!

இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில், புத்தம் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா (Honda) நிறுவனம் தீவிரமாக தயாராகி கொண்டுள்ளது. இந்த காருக்கு ஹோண்டா எலவேட் (Honda Elevate) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வரும் ஜூன் 6ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் ஹோண்டா எலவேட் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Honda Elevate SUV

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கு போட்டியாக ஹோண்டா எலவேட் களமிறங்குகிறது.

எலவேட் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை ஒரு சில ஹோண்டா டீலர்ஷிப்கள் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹோண்டா எலவேட் காரில் என்னென்ன இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும்? என்பது வரும் நாட்களில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. எனினும் ஹோண்டா சிட்டி (Honda City) காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஹோண்டா எலவேட் காரிலும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Honda Elevate

இதன்படி பார்த்தால் ஹோண்டா எலவேட் காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும். இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 17.8 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக உள்ளது.

அதே நேரத்தில் இந்த இன்ஜினின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 18.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கிறது. மறுபக்கம் eCVT கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் கூடிய பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 27.13 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

நாங்கள் இங்கே கூறியுள்ளவை ஹோண்டா சிட்டி காரின் இன்ஜின் மற்றும் மைலேஜ் விபரங்கள் ஆகும். ஹோண்டா சிட்டி காரின் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் வழங்கப்படும் என கூறப்படுவதால், ஹோண்டா எலவேட் காரும் இதே அளவிலான மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிறப்பான மைலேஜை எதிர்பார்க்க கூடியவர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

மறுபக்கம் ஹோண்டா எலவேட் காரின் மிக முக்கியமான போட்டியாளர்களான மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களின் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின்கள் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய 2 கார்களிலும், 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்கள்தான் வழங்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே மைலேஜ் விஷயத்தில், இந்த 3 கார்களுக்கும் இடையே போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என வெளியாகி வரும் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஹோண்டா எலவேட் கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டுள்ளது. எனவே ஹோண்டா நிறுவனம் விலையை (Price) மட்டும் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், எலவேட் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 25, 2023, 17:26 [IST]
English summary
Honda elevate maruti suzuki grand vitara toyota urban cruiser hyryder mileage comparison
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+