பிரியாணி மாதிரி ஆளாளுக்கு ஒன்னு ஆர்டர் பண்றாங்க! ஒரே நாள்ல இத்தன பேருக்கு டெலிவரியா! புயலை கிளப்பும் புது கார்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹோண்டா எலவேட் (Honda Elevate) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த ஹோண்டா எலவேட் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஹோண்டா நிறுவனம் எலவேட் காரின் மெகா டெலிவரி நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டுள்ளது. இதன்படி ஐதராபாத் (Hyderabad) நகரில் நடத்தப்பட்ட மெகா டெலிவரி நிகழ்ச்சி ஒன்றில், 100 எலவேட் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 100 கார்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Honda Elevate

வரும் நாட்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற மெகா டெலிவரி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹோண்டா எலவேட் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை எஸ்வி (SV), வி (V), விஎக்ஸ் (VX) மற்றும் இஸட்எக்ஸ் (ZX) ஆகும்.

இந்திய சந்தையில் ஹோண்டா எலவேட் காரின் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 11 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Honda Elevate Rear Design

ஹோண்டா எலவேட் காரில், அடாஸ் (ADAS), 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஆனால் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அது 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆகும். 119 பிஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்களை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

ஐதராபாத் நகரில் ஒரே நாளில் 100 ஹோண்டா எலவேட் கார்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பது குறித்து, ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் இயக்குனரான யூய்ச்சி முராட்டா கூறுகையில், ''சிறப்பு வாய்ந்த இந்த மெகா டெலிவரி நிகழ்ச்சியில், ஹோண்டா எலவேட் காரை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஐதராபாத் நகரில் நடத்தப்பட்ட மெகா டெலிவரி நிகழ்ச்சியில் 100 ஹோண்டா எலவேட் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இதேபோன்ற மெகா டெலிவரி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அனைத்து எலவேட் எஸ்யூவி வாடிக்கையாளர்களையும் ஹோண்டா குடும்பத்திற்கு வரவேற்கிறோம்'' என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புத்தம் புதிய ஹோண்டா எலவேட் கார், ஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்த தொடங்கியுள்ளது. எனவே வரும் மாதங்களில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதன் மிக முக்கியமான போட்டியாளர்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடி ஏற்படலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கருத்து.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகியவைதான், ஹோண்டா எலவேட் காரின் நேரடி போட்டி மாடல்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 10, 2023, 15:48 [IST]
English summary
Honda elevate mega delivery event all you need to know
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+